நாட்டகம் மற்றும் பனச்சிக்காடு

நாட்டகம் மற்றும் பனச்சிக்காடு (Nattakom and Panachikkadu) என்பவை தென்னிந்தியாவின், கேரளத்தின், கோட்டயம் மாவட்டத்தில் உள்ள கிராமங்கள் ஆகும். அமைதியான இந்த கிராமங்களை அழகுபடுத்துவதாக இங்குள்ள நீர்நிலைகள் உள்ளன. இந்த நீர் நிலைகளை நாடி முட்டையிட்டு குஞ்சு பொரித்து இனப்பெருக்கம் செய்ய பறவைகள் வலசை வருகின்றன. பனச்சிக்காட்டில் கூடூராறில் இருந்து குமரகத்துக்கு மேற்கொள்ளும் படகுப் பயணானது இளைப்பாறவும், இயற்கையழகை கண்டு களிக்கவும் ஏற்றது.[1] இங்கு சுற்றுலா பயணிகளின் வசதிக்காக ஆயுவேத எண்ணை குளியல், படகு சவாரி, மீன்பிடித்தல், நீச்சல் போன்றவற்றிற்கு வேண்டிய வசதிகள் கிடைக்கின்றன.

குறிப்புகள்

தொகு