நாதனீல் ஹாதோர்ன்

அமெரிக்க நாவலாசிரியர் மற்றும் சிறுகதை எழுத்தாளர்

நாதனீல் ஹாதோர்ன் (ஆங்கிலம்:Nathaniel Hawthorne பி: ஜூலை 4, 1804; இ: மே 19, 1864) அமெரிக்க நாவலாசிரியர் மற்றும் சிறுகதை எழுத்தாளர்

நாதனீல் ஹாதோர்ன்
1860 ல் நாதனீல் ஹாதோர்ன்
1860 ல் நாதனீல் ஹாதோர்ன்
பிறப்பு(1804-07-04)சூலை 4, 1804
சேலம், மாசசூசெட்ஸ், ஐக்கிய அமெரிக்கா
இறப்புமே 19, 1864(1864-05-19) (அகவை 59)
ப்ளைமொத், ஐக்கிய அமெரிக்கா
கல்வி நிலையம்ஐக்கிய அமெரிக்கா (1825)
கையொப்பம்

அவர் மாசசூசெட்ஸில் உள்ள சேலம் என்ற ஊரில் பிறந்தார் அவருடைய முன்னோரான ஜான் ஹாதோர்ன் சேலம் பகுதியில் சூனிய பரிசோதனைகளில் ஈடுபட்டதாக அறியப்படுகிறது. நாதனீல் பின்னர் இந்த உறவை மறைக்கும் பொருட்டு அவரது பெயரில் "W" என்ற எழுத்தை சேர்த்துக்கொண்டார். அவர் 1821 ஆம் ஆண்டில் ஐக்கிய அமெரிக்கா கல்லூரியில் சேர்ந்தார். 1825 இல் பட்டம் பெற்றார். ஹாதோர்ன் 1828 ஆம் ஆண்டு தனது முதல் புதினத்தை பான்சேவ் என்ற தலைப்பில் வெளியிடப்பட்டார். பின்னர் அது தனது பிந்தைய படைப்புகளினைப் போல் இல்லாததால் அதை மறைக்க முயற்சித்தார். அவர் 1837 ஆம் ஆண்டு அவர் சேகரித்த பல சிறுகதைகளை ’இருமுறை கூறப்பட்ட கதை’ (ட்வின் டோல்டு) என்ற பெயரில் புத்தகமாக வெளியிட்டார். அடுத்த ஆண்டு அவருக்கு சோபியா பீபாடி என்றவருடன் நிச்சயம் செய்யப்பட்டு 1842 ஆம் ஆண்டில் திருமணம் செய்துகொண்டார். ஹாதோர்ன் மே 19, 1864 அன்று உயிரிழந்தார்.

அவரது படைப்புகளின் கருப்பொருள்கள் பெரும்பாலும் மனிதனின் உள்ளார்ந்த தீய மற்றும் பாவத்தின் அடிப்படையிலும் அதன் விளைவுகள் மற்றும் ஆழமான உளவியல் சிக்கல் போன்றவற்றையும் மையப்படுத்தி அமைந்திருந்தன. அவருடைய வெளியிடப்பட்ட படைப்புகளில் நாவல்கள், சிறுகதைகள், அவரது நண்பர் பிராங்கிளின் பியர்ஸ் என்பவரின் சுயசரிதை ஆகியவை அடங்கும்.

உசாத்துணைகள் தொகு

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=நாதனீல்_ஹாதோர்ன்&oldid=3349526" இலிருந்து மீள்விக்கப்பட்டது