நாது ராம் அகிர்வார்
நாது ராம் அகிர்வார் (Nathu Ram Ahirwar) (1 சூலை 1923 - 5 திசம்பர் 2013) ஒரு இந்திய அரசியல்வாதியும் சமூகத் தலைவரும் முன்னாள் கல்வி அமைச்சரும் இந்தியாவின் மத்தியப் பிரதேசத்தின் திகம்கர் மாவட்டத்தில் உள்ள பாமௌரா காஸ் கிராமத்தைச் சேர்ந்த கல்வியாளர் ஆவார். மத்தியப் பிரதேசத்தின் முன்னாள் அமைச்சரும், மூத்த காங்கிரஸ் தலைவருமான இவர், தனது மூதாதையர் கிராமமான பாமௌரா காஸ் என்ற இடத்தில், குறுகிய கால நோயால் காலமானார். சில காலமாக நோய்வாய்ப்பட்டிருந்த அகிர்வார், திசம்பர் 5,2013 அன்று இறந்தார் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.[1]
நாது ராம் அகிர்வார் | |
---|---|
சட்டமன்ற உறுப்பினர் (இந்தியா) | |
பதவியில் 1957–1962 | |
மக்களவை உறுப்பினர் | |
பதவியில் 1967–1977 | |
பின்னவர் | வீரேந்திர குமார் காதிக் |
தொகுதி | திகம்கர் மக்களவைத் தொகுதி |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | பாமவ்ரா காஸ், திகம்கர், மத்தியப் பிரதேசம், இந்தியா | 1 சூலை 1923
இறப்பு | 5 திசம்பர் 2013 | (அகவை 90)
அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரசு |
பிற அரசியல் தொடர்புகள் | ஜனதா கட்சி |
துணைவர் | யசோதா பாய் |
பெற்றோர் | ராம்தாஸ் |
வேலை | அரசியல்வாதி |
இவர் பல ஆண்டுகளாக மத்தியப் பிரதேச சட்டமன்ற உறுப்பினராகப் பணியாற்றியுள்ளார், மேலும் நான்காவது மக்களவை (1967-19770) உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஐந்தாவது மக்களவை (1971-1977) திகம்கர் தொகுதியில் இருந்து இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார், இது பட்டியல் சாதியினருக்கு ஒதுக்கப்பட்ட தொகுதியாகும்.[2] புனர்வாழ்வு, ஒத்துழைப்பு மற்றும் கல்வி அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார். [3][4] 1977-ஆம் ஆண்டில் கர்காபூர் தொகுதியில் இருந்து ஜனதா கட்சி பிரதிநிதியாகவும், 1980-ஆம் ஆண்டில் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினராகவும் மத்தியப் பிரதேச சட்டப்பேரவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1997 ஆம் ஆண்டுக்குப் பிறகு, அவர் காங்கிரஸை விட்டு வெளியேறி பகுஜன் சமாஜ் கட்சியில் சேர்ந்தார்.
பட்டியலிடப்பட்ட சாதியினரின் மேம்பாட்டுக்கான அவரது நடவடிக்கைகளுக்காக இவர் குறிப்பிடப்படுகிறார், மேலும் ஒரு கல்வியாளராகவும், மத்தியப் பிரதேசத்தின் இடைநிலைக் கல்விக் குழுவின் உறுப்பினராக பணியாற்றினார். இவர் தெஹர்கா திகம்கரில் ஒரு மேல்நிலைப் பள்ளியையும் நிறுவினார், மேலும் திகம்கர் அருகே உள்ள நிவாரி கல்லூரியின் துணைத் தலைவராகவும் இருந்தார்.[5]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Senior Congress leader Nathuram Ahirwar passes away at Bhamora". ibnlive.in.com. Archived from the original on 8 December 2013. பார்க்கப்பட்ட நாள் 17 January 2022.
- ↑ Who's who India. Parliament. Lok Sabha - 1971 - Issue 5 - Page 11
- ↑ The Journal of Parliamentary Information - Volume 29 - Page 27
- ↑ Nathuram Ahirwar the ex. Education Minister lives in Bhamoura.
- ↑ "Fifth Lok Sabha Members Bioprofile". Archived from the original on 3 October 2013. பார்க்கப்பட்ட நாள் 7 October 2013.