வீரேந்திர குமார் காதிக்

இந்திய அரசியல்வாதி

வீரேந்திர குமார் காதிக் (Dr. Virendra Kumar Khatik) (பிறப்பு:27 பிப்ரவரி 1954) பாரதிய ஜனதா கட்சியின் தலித் அரசியல்வாதியான இவர் இந்தியாவின் 12, 13, 14, 15, 16 மற்றும் 17வது நாடாளுமன்ற மக்களவை உறுப்பினராக, 1996 முதல் 2019 முடிய, மத்தியப் பிரதேச மாநிலத்தின் சாகர் மக்களவைத் தொகுதி மற்றும் திக்கம்கர் மக்களவைத் தொகுதியிலிருந்து தொடர்ந்து தேர்ந்தேடுக்கப்பட்டவர்.[3] [4] இவர் தற்போது 2019 முதல் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சராக உள்ளார்.[5]

டாக்டர் வீரேந்திர குமார் காதிக்
சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சர்
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
மே 2019
இந்திய அரசின் மகளிர் மற்றும் குழந்தைகள் நல அமைச்சகத்தின் இணை அமைச்சர்
பதவியில்
3 செப்டம்பர் 2017 – 29 மே 2019
சிறுபான்மையோர் விவகாரங்களுக்கான இணை அமைச்சர்
பதவியில்
3 செப்டம்பர் 2017 – 29 மே 2019
மக்களவை உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
2009
முன்னவர் நாது ராம் அகிர்வார்
தொகுதி திகம்கர் மக்களவைத் தொகுதி[1]
மக்களவை உறுப்பினர்
பதவியில்
1996–2009
முன்னவர் ஆனந்த் அகிர்வார்
பின்வந்தவர் பூபேந்திர சிங்
தொகுதி சாகர் மக்களவைத் தொகுதி [2]
தனிநபர் தகவல்
பிறப்பு 27 பெப்ரவரி 1954 (1954-02-27) (அகவை 69)
சாகர், மத்தியப் பிரதேசம், இந்தியா
அரசியல் கட்சி பாரதிய ஜனதா கட்சி
வாழ்க்கை துணைவர்(கள்) கமல் வீரேந்திரா
பிள்ளைகள் மகன் 1 & மகள்கள் 3
இருப்பிடம் சாகர்
கல்வி முதுகலை (பொருளாதரம்), முனைவர் பட்டம் (குழந்தை தொழிலாளர்)
படித்த கல்வி நிறுவனங்கள் டாக்டர். ஹரி சிங் கௌர் பல்கலைக் கழகம், சாகர், மத்தியப் பிரதேசம்
சமயம் இந்து சமயம்

மத்திய இணை அமைச்சராக தொகு

நரேந்திர மோதியின் முதலாம் அமைச்சரவையில் இவர் 3 செப்டம்பர் 2017 – 29 மே 2019 வரை மகளிர் & குழந்தைகள் நலம் மற்றும் சிறுபான்மையோர் நல அமைச்சகத்தின் இணை அமைச்சராக பணியாற்றியவர்.

மக்களவையின் இடைக்காலத் தலைவராக தொகு

16 சூன் 2019 அன்று இந்தியக் குடியரசுத் தலைவர் வீரேந்திர குமாரை மக்களவையின் இடைக்கால சபாநாயகராக பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். [6] [7]

புதிததாகத் தேர்ந்தேடுக்கப்பட்ட 17வது மக்களவை உறுப்பினர்களுக்கு, 17 & 18 சூன் 2019 அன்று, இடைக்கால மக்களவை சபாநாயகர் வீரேந்திரகுமார் பதவிப் பிரமாணமும், இரகசியக் காப்புப் பிரமாணமும் செய்து வைக்கிறார்.[8]

19 சூன் 2019 அன்று கூடும் பதினேழாவது மக்களவையின் முதல் கூட்டத்தின் போது இடைக்கால சபாநாயகர் வீரேந்திரகுமார் தலைமையில் பதினேழாவது மக்களவைக்கு சபாநாயகர் தேர்தல் நடைபெறும். அதுவரை வீரேந்திரகுமார் இடைக்கால சபாநாயகராகத் தொடர்வார்

மேற்கோள்கள் தொகு