நானாற்பது (பாட்டியல்)

நானாற்பது என்பது தமிழில் சிற்றிலக்கியங்கள் என்றும், வடமொழியில் பிரபந்தங்கள் என்றும் வழங்கும் பாட்டியல் வகைகளுள் ஒன்றாகும். இதை, நாற்பது என்றும் சில நூல்கள் குறிப்பிடுகின்றன. காலம், இடம் பொருள் போன்றவை கருப்பொருளாக வர நாற்பது வெண்பாக்களால் அமைவது நானாற்பது என்னும் சிற்றிலக்கியம்[1]. எடுத்துக்காட்டாக, கார்காலத்தைக் கருப்பொருளாகக் கொண்ட கார்நாற்பது என்னும் நூல் காலம் சார்ந்த நானாற்பது. இதுபோல, போர்க்களம் பற்றிக் கூறும் களவழிநாற்பது இடம் சார்ந்தது. செய்வதற்கு இனிய பொருள்கள் பற்றிக் கூறும் இனியவை நாற்பது பொருள் சார்ந்தது.

குறிப்புகள் தொகு

  1. இலக்கண விளக்கம் பொருளதிகாரம் - பாட்டியல், பாடல் 851

உசாத்துணைகள் தொகு

இவற்றையும் பார்க்கவும் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=நானாற்பது_(பாட்டியல்)&oldid=3218259" இலிருந்து மீள்விக்கப்பட்டது