நானு பிள்ளை

பன்னிசேரி நானு பிள்ளை, கவிஞர், கல்வியாளர், கலைஞர் ஆவார். கேரளத்தைச் சேர்ந்த இவர், கதகளி நடனத்தைத் தெளிவுறக் கற்றவர். இவர் கொல்லம் மாவட்டத்தைச் சேர்ந்த கருநாகப்பள்ளி வட்டத்தில் மருதூர்குளங்கராவில் பிறந்தவர். இவரது பெற்றோர் வயலில் பப்பு குரூப், பிலானுளில் கல்யாணி அம்மா ஆவர். இவரது இளவயதிலேயே தாய், தந்தையரை இழந்து அண்ணன், மாமாவின் வளர்ப்பில் வாழ்ந்தார். பள்ளிப் படிப்பின்போது அண்ணனும் இறக்கவே, தனக்குத் தானே பா, இலக்கணம், நாடகம் ஆகியவற்றைக் கற்பித்துக் கொண்டார். கரிங்காட்டில் நானு ஆசான் என்பவர் சமற்கிருதம் கற்றுத் தந்தார். மலையாளம், தமிழ், ஆங்கிலம், இந்தி, தெலுங்கு, கன்னடம், பெங்காலி, அரபி ஆகிய மொழிகளைக் கற்றுத் தேர்ந்தார். சிலப்பதிகாரத்தில் குறிப்பிட்டுள்ள பத்ரகாளி கோவில் பாடல்களை அடியொற்றி பத்ரகாளி விஜயம் என்னும் காப்பியம் இயற்றினார். இவரது வாழ்க்கை வரலாறு கைராலி தொலைக்காட்சியில் ஒலிபரப்பப்பட்டது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=நானு_பிள்ளை&oldid=2922806" இலிருந்து மீள்விக்கப்பட்டது