நானோ கத்தி

நானோ கத்தியை வரியோட்ட இலத்திரன் நுண்வரைவி மூலம் எடுத்த படம்.ஒரு கார்பன் நானோ குழாய் இரு டங்க்ஸ்டன் தங்குதன் ஊசிகளால் நீட்சியடையச்செய்யப்படுகிறது. நானோ கத்தியின் உடையும் புள்ளியைக் கண்டறிய முக்கோண வடிவிலுள்ள முனையைக் கொண்ட அணுவின் விசையால் செயல்படும் வளைவுச் சட்டம் உள்ளது.

உயிரிய செல்களைப் (biological cells) பிரிக்கவும், வெட்டவும் கார்பன் நானோ குழாயால் உருவாக்கப்பட்ட கருவியே நானோ கத்தி (nano knife)ஆகும்.[1] ஒரு பாலாடைக்கட்டியை வெட்டும் கத்தியைப் போன்றே செயல்படுகிறது. இரு தங்குதன் ஊசிகளுக்கிடையே ஒரு கார்பன் நானோ குழாய் இணைக்கப்பட்டுள்ளது. இவை உயிரிய செல்களைச் சிறிய கூறுகளாக வெட்ட உதவுகிறது. இலத்திரன் நுண்ணோக்கியின் மூலம் இவற்றின் செயல்பாட்டை காண இயலும் கெலராடோ பல்கலைக் கழகம் போன்ற பல பல்கலைக் கழகங்கள் இதற்கான ஆய்வில் ஈடுபட்டுள்ளன.[2][3]

உயிரிய செல்களின் (3D) முப்பரிமான படங்களை எடுக்க நானோ கத்தி பயன்படுகிறது. 300 நானோ மீட்டர் தடிமனான திசுக்களை இலத்திரன் திசு அடுக்கு சிறப்புக் கதிர் வீச்சு வரைவி (Electron tomography) படம் எடுக்க முடிகிறது.[2][4] மின்னூட்டம் பெறக்கூடியப் பல்பகுதி மாதிரி (polymeric specimen) மட்டுமே இப்போது அலகிடு எதிர்மின்னி நுண்ணோக்கியின் மூலம் காண இயலுகிறது.

மேற்கோள்கள்தொகு

  1. On the Cutting Edge: Carbon Nanotube Cutlery, National Institute of Standards and Technology, 22 November 2006, retrieved 2010-03-19
  2. 2.0 2.1 G Singh; P Rice; R L Mahajan; J R McIntosh (11 February 2009), Fabrication and characterization of a carbon nanotube-based nanoknife, Volume 20, Number 9, Nanotechnology, Bibcode:2009Nanot..20i5701S, doi:10.1088/0957-4484/20/9/095701, retrieved 2010-03-19
  3. "Nanodevices Using Individual Carbon nanotubes", NanoScience and Engineering Group, Kansas State University, retrieved 2010-03-19
  4. "Spotlight", Cutting edge nanotechnology, Nanowerk, 18 February 2009, retrieved 2010-03-19
"https://ta.wikipedia.org/w/index.php?title=நானோ_கத்தி&oldid=2749043" இருந்து மீள்விக்கப்பட்டது