நான்காம் வேற்றுமை

நான்காம் வேற்றுமை என்பது பெயரின் (எழுவாயின்) பொருளை கோடற் பொருளாய் (கொள்ளுதல் பொருளாய்) வேறுபடுத்துவது ஆகும். நான்காம் வேற்றுமை உருபானது 'இதற்கு இது' என வருவதற்குரிய எப்பொருளையும் "ஏற்றுக்கொள்ளும் பொருளாகத் தன்னை ஏற்ற பெயரின் பொருளை வேற்றுமை செய்யும். நான்காம் வேற்றுமை உருபு "கு" ஆகும்.

என்பது இதனைக் குறித்த நூற்பாவாகும்.

நான்காம் வேற்றுமைக்குரிய பொருள்

தொகு
 • கொடை
 • பகை
 • நேர்ச்சி (நட்பு)
 • தகவு (தகுதி)
 • அதுவாதல்
 • பொருட்டு
 • முறை (உறவு)

முதலான பொருளில் நான்காம் வேற்றுமை வரும்.

சான்று:

தொகு
 • கபிலருக்குப் பொன் கொடுத்தான் -- கொடை
 • பிணிக்கு மருந்து -- பகை
 • அருங்கலம் உலகின் மிக்க அரசர்க்கே உரிய -- தகுதி
 • ஆடைக்கு நூல் -- அதுவாதல்
 • கூலிக்கு வேலை -- பொருட்டு
 • தாதிக்கு உரியது -- பொறுமை
 • தந்தைக்கு மகன் -- முறை

சொல்லுருபுகள்

தொகு

பொருட்டு, நிமித்தம், ஆக என்பன நான்காம் வேற்றுமைக்குரிய சொல்லுருபுகளாகும். சான்று:

 • கூலியின் பொருட்டு வேலை செய்தான்
 • கூலியின் நிமித்தம் வேலை செய்தான்
 • கூலிக்காக வேலை செய்தான்.

மேற்கோள்கள்

தொகு
 1. தொல்காப்பியம், சொல்லதிகாரம், நூற்பா. 76

உசாத்துணை

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=நான்காம்_வேற்றுமை&oldid=3735646" இலிருந்து மீள்விக்கப்பட்டது