நான் உங்கள் தோழன்

நான் உங்கள் தோழன் 1978 ஆம் ஆண்டு வெளிவந்த ஈழத்து தமிழ்த் திரைப்படம். 1978 ஆம் ஆண்டில் மொத்தம் 6 ஈழத்துத் தமிழ்த் திரைப்படங்கள் வெளியிடப்பட்டமை இலங்கை தமிழ் திரைப்பட வரலாற்றில் ஒரு சாதனை ஆகும். அவற்றுள் முதலாவது திரைப்படந்தான் நான் உங்கள் தோழன்.[1] தொழிற்சங்கத் தலைவர்களில் ஒருவரான வி. பி. கணேசன் தனது முதலாவது படமான புதிய காற்றுக்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து எடுத்த திரைப்படம்.

நான் உங்கள் தோழன்
1978 சனவரி 8 ஈழநாடு விளம்பரம்
இயக்கம்எஸ். வி. சந்திரன்
தயாரிப்புவி. பி. கணேசன்
கதைகலைச்செல்வன்
இசைஎம். கே. றொக்சாமி
நடிப்புவி. பி. கணேசன்
சுபாஷினி
எஸ். ராம்தாஸ்
எம். எம். ஏ. லத்தீப்
கே. ஏ. ஜவாஹர்
எம். ஆர். கலைச்செல்வன்
அரிதாஸ்
ருக்மணி தேவி
ஜெனிட்டா
சந்திரகலா
எஸ். என். தனரத்தினம்
விமல் சொக்கநாதன்
ஜெயதேவி,
டி. எஸ். லோகநாதன்,
பஞ்சலிங்கம்,
சுதுமலை தம்பிராசா
ஒளிப்பதிவுஎஸ். வாமதேவன்
படத்தொகுப்புஎஸ். வி. சந்திரன்
விநியோகம்கணேஷ் பிலிம்ஸ்
வெளியீடு06.01.1978[1]
நாடுஇலங்கை
மொழிதமிழ்

அவரே இந்தமுறையும் பிரதான பாத்திரத்தில் நடித்தார். சுபாஷினி, கே. ஏ. ஜவாஹர், எஸ். ராம்தாஸ், எம், எம், ஏ. லத்தீப், ருக்மணி தேவி போன்ற பலரை தன்னுடன் நடிக்கவைத்தார். எஸ். வி. சந்திரன் இத்திரைப்படத்தை இயக்கினார். அவரே படத்தொகுப்பாளரும் கூட. எம். கே. றொக்சாமி இசையமைக்க, சாந்தி, முருகவேள், சாது ஆகியோர் இயற்றிய பாடல்களை வி.முத்தழகு, கலாவதி, கே. எஸ். பாலச்சந்திரன் (மெல்லிசைப்பாடகர்) (சுண்டிக்குளி பாலச்சந்திரன்), மொஹிதீன் பெக், கனகாம்பாள் என்பவர்கள் பாடினார்கள்.

கொழும்பு, மலையகம் என்பவற்றோடு யாழ்ப்பாணத்து நகர வீதிகளிலும், மட்டக்களப்பு மாமாங்கத் திருவிழாவிலும் கூட படப்பிடிப்பு நடத்தினார்கள்.

கதைச்சுருக்க எச்சரிக்கை: கதைச்சுருக்கம் மற்றும்/அல்லது கதை முடிவு விவரங்கள், கீழே தரப்பட்டுள்ளன.

ஒரு கிராம மருத்துவமனையில் மருத்துவராக கண்ணன் (வி.பி.கணேசன்) வேலை பார்க்கிறான். அந்த கிராமத்துப் பெண்ணான ராதாவுக்கு (சுபாஷினி) கண்ணன் மேல் விருப்பம். ஆனால் அவள் மேல் ராஜன் (லத்தீப்) மோகம் கொள்கிறான். ராதாவின் எண்ணம் அறிந்த அவனுக்கு கண்ணனை பழி வாங்கவேண்டுமென்ற எண்ணம் வருகிறது. ஒரு சந்தர்ப்பத்தில் ராஜனிடமிருந்து தப்புவதற்காக ராதா கண்ணனின் மருத்துவமனையில் அடைக்கலம் புகுகிறாள், அங்கே தவறுதலாக மயக்கமருந்தை ராதா குடிக்க, ராஜன் அவளைக் கெடுத்து விடுகிறான். பழி எதிர்பார்த்தது போலவே கண்ணன் மேல் விழுகிறது. நல்லகாலமாக ராஜன் குற்றத்தை ஒப்புக்கொள்ள, எல்லாம் சுபமாக முடிவடைகிறது.[1]

குறிப்பு

தொகு
  • வி. பி. கணேசன் ஒருவரே இலங்கையில் அதிகம் (மூன்று) தமிழ்த் திரைப்படங்களை தயாரித்தவர்.[2] அவர் மூன்றிலும் வெவ்வேறு இயக்குனர்கள், இசையமைப்பாளர்கள், கதாநாயகிகள், துணைக் கதாநாயகர்கள் என்று சந்தர்ப்பம் கொடுத்தார்.
  • அக்கால இந்தியப்படங்களில் சிலவேளைகளில் அரசியல் தலைவர்களின் மகாநாடுகள், இறுதி ஊர்வலங்கள் என்பனவற்றை இணத்துக் கொள்வதைப் போல, இத்திரைப்படத்தில் எஸ். ஜே. வி. செல்வநாயகம் அவர்களின் இறுதி ஊர்வலம் இணைக்கப்பட்டது.[3]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 தம்பிஐயா தேவதாஸ். இலங்கைத் தமிழ் சினிமாவின் கதை. வி. எஸ். துரைராஜா, 75 உவாட் பிளேஸ், கொழும்பு 7, இலங்கை. p. 145.
  2. Dilrukshi Handunnetti. "Mano Ganesan talks about destruction of Tamil Film Industry in Sri Lanka". dbsjeyaraj.com. Archived from the original on 2013-06-29. பார்க்கப்பட்ட நாள் 2017-11-30.
  3. "ஈழத்துத் தமிழ்த் திரைப்படங்கள்". ourjaffna.com. Archived from the original on 2017-11-30. பார்க்கப்பட்ட நாள் 2017-11-30.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நான்_உங்கள்_தோழன்&oldid=3715803" இலிருந்து மீள்விக்கப்பட்டது