புதிய காற்று (1975 திரைப்படம்)

(புதிய காற்று இலிருந்து வழிமாற்றப்பட்டது)

புதிய காற்று 1975 ஆம் ஆண்டு வெளிவந்த ஈழத்து தமிழ்த் திரைப்படம். தொழிற்சங்கத் தலைவர்களில் ஒருவரான வி. பி. கணேசன் தயாரிப்பில் வெளிவந்த முதலாவது திரைப்படம் இதுவாகும். எஸ். இராமநாதன் இத்திரைப்படத்தை இயக்கினார்.

புதிய காற்று
இயக்கம்எஸ். இராமநாதன்
தயாரிப்புவி. பி. கணேசன்
கதைதெளிவத்தை ஜோசப்
இசைரீ. எப். லத்தீப்
நடிப்புவி. பி. கணேசன்,
பரீனா லை,
எஸ். ராம்தாஸ்,
டீன் குமார்,
வீணாகுமாரி,
எஸ். என். தனரத்தினம்,
கே. ஏ. ஜவாஹர்,
சிலோன் சின்னையா,
ஜோபுநசீர்,
செல்வம் பெர்னாண்டோ
ஒளிப்பதிவுலினிடி கொஸ்தா
விநியோகம்கணேஷ் பிலிம்ஸ்
வெளியீடுஅக்டோபர் 3, 1975
நாடுஇலங்கை
மொழிதமிழ்

வி. பி. கணேசன் கதாநாயகனாகவும், பிரபல சிங்களத் திரைப்பட நடிகை பரீனா லை கதாநாயகியாகவும் நடித்தனர். இவர்களுடன் நகைச்சுவை நடிகர் எஸ். ராம்தாஸ், மற்றும் டீன் குமார், எஸ். என். தனரத்தினம்,, கே. ஏ. ஜவாஹர், சிலோன் சின்னையா, செல்வம் பெர்னாண்டோ உட்படப் பலர் நடித்தனர். திரைக்கதையை பிரபல மலையக எழுத்தாளர் தெளிவத்தை ஜோசப் எழுதினார்.

டீ. எஃப். லத்தீபின் இசையமைப்பில் வி. முத்தழகு, கலாவதி சின்னசாமி, சுண்டிக்குளி பாலச்சந்திரன், சுஜாதா அத்தநாயக்க, புத்தூர் கனகாம்பாள் சதாசிவம், ஏ. ஈ. மனோகரன் ஆகியோர் பாடினர். பாடல்களை கண்ணதாசன் (மே தினம் என்ற பாடல்), பூவை செங்குட்டுவன் (ஓ என்னாசை), மற்றும் சாது, கௌரி ஆகியோர் எழுதினர்.[1]

படப்பிடிப்பு

தொகு

மலைநாட்டில் 1975 ஏப்ரல் 20 அன்று படப்பிடிப்பு ஆரம்பமானது. அதனைத் தொடர்ந்து யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, வவுனியா, கொழும்பு எனப் பல பகுதிகளிலும் படப்பிடிப்பு நடத்தப்பட்டு ஐந்து மாதங்களில் படம் திரையிடப்பட்டது.[1]

குறிப்பு

தொகு
  • புதியகாற்று’ திரைப்படம் இலங்கையில் 7 திரையரங்குகளில் பெருமளவு விளம்பரம் செய்யப்பட்டு திரையிடப்பட்டது. இப்படம் திரையிடப்பட்ட பொழுது தென்னிந்தியத் திரைப்படங்களைத் திரையிடாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. இதனால் இத்திரைப்படம் ஓரளவு வெற்றி பெற்றது.[1]
  • இத்திரைப்படத்தில் கதாநாயகனும், வில்லனும் சிறுவயதில் இருந்தே ஒன்றாகப் பழகி வந்தவர்கள். சிறுவர்கள் பாத்திரங்களில் வி. பி. கணேசனின் மகன்களான மனோ கணேசன், பிரபா கணேசன் ஆகியோர் நடித்தனர்.[2]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 தம்பிஐயா தேவதாஸ். "இலங்கைத் தமிழ்ச் சினிமாவின் கதை". பார்க்கப்பட்ட நாள் 28 பெப்ரவரி 2016. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "சிகரம் தொட்ட செம்மல்". தினகரன். 5 சனவரி 2014. பார்க்கப்பட்ட நாள் 28 பெப்ரவரி 2016. {{cite web}}: Check date values in: |accessdate= (help)