மனோ கணேசன்

இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்

மனோ கணேசன் (Mano Ganesan, பிறப்பு: திசம்பர் 17, 1959) இலங்கைத் தமிழ் அரசியல்வாதியும், ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவரும், சனநாயகத் தொழிலாளர் காங்கிரஸ் என்ற தொழிற்சங்கத்தின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சரும் ஆவார். இவர் 2015 செப்டம்பர் 4 முதல் 2019 நவம்பர் வரை தேசிய கலந்துரையாடல்களுக்கான அமைச்சராகப் பணியாற்றினார்.[1][2][3][4]

மனோ கணேசன்
Mano Ganesan
தேசிய கலந்துரையாடல்களுக்கான அமைச்சர்
பதவியில்
4 செப்டம்பர் 2015 – 21 நவம்பர் 2019
தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
17 திசம்பர் 2024
கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில்
2015 – 24 செப்டம்பர் 2024
பதவியில்
2001–2010
கொழும்பு மாவட்டத்துக்கான மேல்மாகாண சபை உறுப்பினர்
பதவியில்
1999–2001
பதவியில்
2014–2015
கொழும்பு மாநகர சபை உறுப்பினர்
பதவியில்
2011–2014
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு17 திசம்பர் 1959 (1959-12-17) (அகவை 65)
தேசியம்இலங்கை மலையகத் தமிழர்
அரசியல் கட்சிஜனநாயக மக்கள் முன்னணி
பிற அரசியல்
தொடர்புகள்
தமிழ் முற்போக்குக் கூட்டணி
பிள்ளைகள்சக்சின் திலிப் கணேசன்
பெற்றோர்வி. பி. கணேசன்
உறவினர்பிரபா கணேசன் (இளைய சகோதரர்)
வேலைதொழிற்சங்கவாதி
சமயம்இந்து

வாழ்க்கைச் சுருக்கம்

தொகு

மனோ கணேசன் பிரபல தமிழ் தொழிற்சங்கவாதியும், திரைப்பட நடிகரும், இயக்குனருமான மறைந்த வி. பி. கணேசனின் மகனும், நாடாளுமன்ற உறுப்பினர் பிரபா கணேசனின் உடன்பிறந்தவரும் ஆவார்.[5] கொழும்பு கேரி கல்லூரியில் கல்வி பயின்றார்.

அரசியலில்

தொகு

மனோ கணேசன் முதன் முதலில் மேல் மாகாண சபையில் மேலக மக்கள் முன்னணி என்ற தனது அரசியல் கட்சி உறுப்பினராக அரசியலில் இறங்கினார். இலங்கை நாடாளுமன்றத்திற்கு முதன் முதலில் 2001 தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் கீழ் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.[6] 2004 தேர்தலில் தனது சனநாயக மக்கள் முன்னணியின் சார்பில் ஐக்கிய தேசிய முன்னணி கூட்டணியில் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.[7] 2010 தேர்தலில் ஐக்கிய தேசிய முன்னணி கூட்டணியில் கண்டி மாவட்டத்தில் போட்டியிட்டுத் தோல்வியுற்றார்.[8] அதே வேளையில் கொழும்பு மாவட்டத்தில் சனநாயக மக்கள் முன்னணியின் சார்பில் போட்டியிட்ட இவரது சகோதரர் பிரபா கணேசன் வெற்றி பெற்று நாடாளுமன்றம் சென்றார். ஆனாலும், பிரபா கணேசன் பின்னர் இக்கட்சியில் இருந்து விலகி ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியில் இணைந்து கொண்டார்[9].

மனோ கணேசன் 2011 உள்ளூராட்சி சபைத் தேர்தலில் ஜனநாயக மக்கள் முன்னணி வேட்பாளராகப் போட்டியிட்டு கொழும்பு மாநகரசபை உறுப்பினரானார்.[10][11] 2014 மாகாண சபைத் தேர்தலில் மேற்கு மாகாணசபை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[12][13][14]

மனோ கணேசன் 2015 அரசுத்தலைவர் தேர்தலில் போட்டியிட்ட எதிரணியின் பொது வேட்பாளரான மைத்திரிபால சிறிசேனவிற்குத் தனது ஆதரவைத் தெரிவித்தார்.

தமிழ் முற்போக்குக் கூட்டணி

தொகு

2015 ஆம் ஆண்டில் மலையக மக்கள் முன்னணியின் தலைவர் அமைச்சர் வே. இராதாகிருஷ்ணன்ம் மற்றும் தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவர் அமைச்சர் பழனி திகாம்பரம் ஆகியோருடன் இணைந்து தமிழ் முற்போக்குக் கூட்டணி என்ற கூட்டமைப்பை ஆரம்பித்தார்.[15][16] இக்கூட்டணி 2015 நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் சின்னத்தில் போட்டியிட்டு ஆறு இடங்களைக் கைப்பற்றியது.[17] மனோ கணேசன் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்று மீண்டும் நாடாளுமன்றம் சென்றார்.[18][19][20] மைத்திரிபால சிறிசேன அமைச்சரவையில் 2015 செப்டம்பர் 4 அன்று இவர் தேசிய கலந்துரையாடல்களுக்கான அமைச்சராக நியமிக்கப்பட்டார்.[1][21][22] இவரது அமைச்சின் கீழ் அரச மொழிகள் திணைக்களம், அரச மொழிகள் ஆணைக்குழு, தேசிய மொழிப்பயிலகம், அரசு சாரா நிறுவன செயலகம் ஆகிய அரசுத் திணைக்களங்கள் இருந்தன. 2019 நவம்பரில் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது.

2020 நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ் முற்போக்குக் கூட்டணி ஐக்கிய மக்கள் சக்தியுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டது. மனோ கணேசன் கொழும்பு மாவட்டத்தில் மீண்டும் தெரிவு செய்யப்பட்டு நாடாளுமன்றம் சென்றார்.[23]

2024 நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ் முற்போக்குக் கூட்டணி மீண்டும் ஐக்கிய மக்கள் சக்தியுடன் கூட்டணி அமைத்து ஐக்கிய மக்கள் சக்தியின் தொலைபேசிச் சின்னத்தில் போட்டியிட்டது. மனோ கணேசன் கொழும்பு மாவட்டத்தில் 19,013 விருப்பு வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார்.[24] இவர் பின்னர் ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் ஊடாக 2024 திசம்பர் 17 இல் நாடாளுமன்ற உறுப்பினர் ஆனார்.[25][26][27][28]

அமெரிக்காவின் விடுதலைக் காப்பாளர்கள் விருது

தொகு

அமெரிக்காவின் விடுதலைக் காப்பாளர் விருது (Freedom Defender’s Award) மனித உரிமைகளுக்கான சிம்பாப்வே வழக்கறிஞர்களுக்கும், மனோ கணேசனுக்கும் வழங்கப்படுவதாக 2007 டிசம்பர் 10 இல் அமெரிக்காவின் அப்போதைய அரசுச் செயலாளர் காண்டலீசா ரைஸ் வாசிங்டன், டி. சி.யில் அறிவித்தார்.[29]

தேர்தல் வரலாறு

தொகு
மனோ கணேசனின் தேர்தல் வரலாறு
தேர்தல் தொகுதி கட்சி வாக்குகள் முடிவு
1999 மாகாணசபை கொழும்பு மாவட்டம் IOPF தெரிவு
2001 நாடாளுமன்றம்[6] கொழும்பு மாவட்டம் ஐதேமு 54,942 தெரிவு
2004 நாடாளுமன்றம்[7] கொழும்பு மாவட்டம் ஐதேமு 51,508 தெரிவு
2010 நாடாளுமன்றம்[8] கண்டி மாவட்டம் ஐதேமு 28,033 தெரிவு செய்யப்படவில்லை
2011 உள்ளூராட்சி சபை[10] கொழும்பு மாநகரசபை சமமு 28,433 தெரிவு
2014 மாகாணசபை[14] கொழும்பு மாவட்டம் சமமு 28,558 தெரிவு
2015 நாடாளுமன்றம்[30] கொழும்பு மாவட்டம் ஐதேக 69,064 தெரிவு
2020 நாடாளுமன்றம் கொழும்பு மாவட்டம் ஐமச 62,091 தெரிவு
2024 நாடாளுமன்றம்[24] கொழும்பு மாவட்டம் ஐமச 19,013 தெரிவு செய்யப்படவில்லை[note 1]

குறிப்புகள்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 "இலங்கையின் புதிய அமைச்சரவை பதவியேற்றுள்ளது". பிபிசி தமிழ். 4 செப்டெம்பர் 2015. பார்க்கப்பட்ட நாள் 4 செப்டெம்பர் 2015.
  2. Pothmulla, Lahiru (3 June 2015). "Video: DPF, UPF, WNC form new political alliance". The Daily Mirror. http://www.dailymirror.lk/74919/dpf-upf-wnc-form-new-political-alliance. 
  3. "Tamil parties forms new alliance". The Sunday Times. 3 June 2015 இம் மூலத்தில் இருந்து 6 சூன் 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150606050531/http://www.sundaytimes.lk/news-online/tamil-parties-forms-new-alliance.html. 
  4. Gunawardana, Chamodi (4 June 2015). "Up-country political parties form Tamil Progressive Alliance". Daily FT. http://www.ft.lk/article/428961/Up-country-political-parties-form-Tamil-Progressive-Alliance. 
  5. Voting for a cause... பரணிடப்பட்டது 2013-10-29 at the வந்தவழி இயந்திரம் Nation - September 12, 2010
  6. 6.0 6.1 "General Election 2001 Preferences" (PDF). Department of Elections, Sri Lanka. Archived from the original (PDF) on 2010-03-04. பார்க்கப்பட்ட நாள் 2015-08-30.
  7. 7.0 7.1 "General Election 2004 Preferences" (PDF). Department of Elections, Sri Lanka. Archived from the original (PDF) on 2010-03-04. பார்க்கப்பட்ட நாள் 2015-08-30.
  8. 8.0 8.1 "Parliamentary General Election - 2010 Kandy Preferences" (PDF). Department of Elections, Sri Lanka. Archived from the original (PDF) on 2010-06-17. பார்க்கப்பட்ட நாள் 2015-08-30.
  9. பிரபா, திகாம்பரம் அரசில் இணைவு[தொடர்பிழந்த இணைப்பு], தினகரன், ஆகத்து 6, 2012
  10. 10.0 10.1 "Local Authorities 08.10.2011 Colombo Municipal Council" (PDF). Department of Elections, Sri Lanka. Archived from the original (PDF) on 2015-09-24. பார்க்கப்பட்ட நாள் 2015-08-30.
  11. "Consequences of Tamil genocide engulf entire island: Bahu". தமிழ்நெட். 22 அக்டோபர் 2011. https://www.tamilnet.com/art.html?catid=13&artid=34547. 
  12. "PART I : SECTION (I) ó GENERAL Government Notifications PROVINCIAL COUNCILS ELECTIONS ACT, No. 2 OF 1988 Western Province Provincial Council". இலங்கை அரச வர்த்தமானி Extraordinary 1856/09. 1 April 2014. http://www.documents.gov.lk/Extgzt/2014/PDF/Apr/1856_09/1856_09%20%28E%29.pdf. பார்த்த நாள்: 30 ஆகஸ்ட் 2015. 
  13. "Full list of preferential votes". டெய்லிமிரர். 31 மார்ச் 2014 இம் மூலத்தில் இருந்து 3 ஏப்ரல் 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140403233018/http://www.dailymirror.lk/caption-story/45236-full-list-of-preferential-votes.html. 
  14. 14.0 14.1 Somawardana, Melissa (31 மார்ச் 2014). "Colombo District Preferential Votes: Complete list of winners". நியூஸ் பெர்ஸ்ட் இம் மூலத்தில் இருந்து 2015-08-26 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150826134033/http://newsfirst.lk/english/2014/03/complete-list-winners-colombo-district-preferential-votes/28208. 
  15. "DPF, UPF, WNC form new political alliance". டெய்லி மிரர். 3 சூன் 2015. பார்க்கப்பட்ட நாள் 4 சூன் 2015.
  16. "மனோ கணேசன் தலைமையில் இன்று உதயமானது தமிழ் முற்போக்கு கூட்டணி!". தமிழ்வின். 3 சூன் 2015. Archived from the original on 2015-07-06. பார்க்கப்பட்ட நாள் 4 சூன் 2015.
  17. "த.மு.கூ - ஐ.தே.க இணைந்து போட்டி". அததெரண. 10 சூலை 2015. பார்க்கப்பட்ட நாள் 12 சூலை 2015.
  18. "PART I : SECTION (I) — GENERAL Government Notifications PARLIAMENTARY ELECTIONS ACT, No. 1 OF 1981". இலங்கை அரச வர்த்தமானி Extraordinary 1928/03. 19 August 2015. http://www.documents.gov.lk/Extgzt/2015/PDF/Aug/1928_03/1928_03%20E.pdf. பார்த்த நாள்: 30 ஆகஸ்ட் 2015. 
  19. "Ranil tops with over 500,000 votes in Colombo". டெய்லிமிரர். 19 ஆகத்து 2015. http://www.dailymirror.lk/83949/ranil-tops-with-over-500-000-votes-in-colombo. 
  20. "Preferential Votes". டெய்லிநியூஸ். 19 ஆகத்து 2015 இம் மூலத்தில் இருந்து 2015-08-20 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20150820025307/http://www.dailynews.lk/?q=political/preferential-votes-2. 
  21. "New Cabinet". The Daily Mirror. 4 September 2015. http://www.dailymirror.lk/86047/new-cabinet. 
  22. "The new Cabinet". Ceylon Today. 4 September 2015 இம் மூலத்தில் இருந்து 7 செப்டம்பர் 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150907020713/http://www.ceylontoday.lk/16-102824-news-detail-the-new-cabinet.html. 
  23. "Part I : Section (I) — General - Government Notifications - Parliamentary Elections Act, No. 1 of 1981" (PDF). இலங்கை அரச வர்த்தமானி Extraordinary. No. 2187/26. Colombo, Sri Lanka. 8 August 2020. p. 5A. பார்க்கப்பட்ட நாள் 9 August 2020.
  24. 24.0 24.1 "Colombo District: Vote counts for Candidates who fell short". News Wire. 16 November 2024 இம் மூலத்தில் இருந்து 16 November 2024 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20241116221107/https://www.newswire.lk/2024/11/16/colombo-district-vote-counts-for-candidates-who-fell-short/. 
  25. "SJB names 4 remaining Nat'l List MPs". Latest in the News Sphere. 13 December 2024. பார்க்கப்பட்ட நாள் 14 December 2024.
  26. "Daily FT". Mano, Nizam, Sujeewa and Ismail secure SJB national list slots. 13 December 2024. பார்க்கப்பட்ட நாள் 14 December 2024.
  27. "SJB National List MPs announced". Sri Lanka Mirror. 12 December 2024. பார்க்கப்பட்ட நாள் 14 December 2024.
  28. Four new MPs sworn in, Sunday Times, 17 December 2024
  29. "Mano Ganesan to receive US Freedom Defenders Award". TamilWeek TW news-features. 11 திசம்பர் 2007. Archived from the original on 2011-01-08. பார்க்கப்பட்ட நாள் 2007-12-14.
  30. Jayakody, Pradeep (28 ஆகத்து 2015). "The Comparison of Preferential Votes in 2015 & 2010". டெய்லிமிரர். http://www.dailymirror.lk/85309/the-comparison-of-preferential-votes-in-2015-2010. 

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=மனோ_கணேசன்&oldid=4168612" இலிருந்து மீள்விக்கப்பட்டது