பழனி திகாம்பரம்

எஸ். உடையப்பன் பழனி அழகன் திகாம்பரம் (S. Udeiappan Palani Alagan Digambaram, பிறப்பு: 10 சனவரி 1967)[1] என்பவர் இலங்கை அரசியல்வாதியும், நாடாளுமன்ற உறுப்பினரும், தொழிலதிபரும் ஆவார்.

பழனி திகாம்பரம்
Palani Digambaram
மலையக புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சர்
பதவியில்
4 செப்டம்பர் 2015 – 2020
தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சர்
பதவியில்
12 சனவரி 2015 – ஆகத்து 2015
தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாட்டு பிரதி அமைச்சர்
பதவியில்
21 ஆகத்து 2014 – 10 டிசம்பர் 2014
நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
2010
மத்திய மாகாணசபை உறுப்பினர்
பதவியில்
2004–2010
பின்னவர்ஜி. எம். எம். பியசிறி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு10 சனவரி 1967 (1967-01-10) (அகவை 57)
அரசியல் கட்சிதொழிலாளர் தேசிய சங்கம்
இனம்மலையகத் தமிழர்

திகாம்பரம் ஆடைத் தொழிற்சாலை உரிமையாளரும், தொழிலாளர் தேசிய சங்கம் என்ற தொழிற்சங்கத்தின் தலைவரும் ஆவார்.[2][3]

திகாம்பரம் 2004 மாகாணசபைத் தேர்தலில் மலையக மக்கள் முன்னணியின் வேட்பாளராக நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிட்டு மத்திய மாகாண சபைக்குத் தெரிவானார்.[4] இவர் 2009 மாகாணசபைத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.[5]

2010 நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய தேசிய முன்னணி வேட்பாளராகப் போட்டியிட்டு நாடாளுமன்றம் சென்றார்.[6][7] தேசியப் பட்டியல் தொடர்பாக ஐக்கிய தேசிய முன்னணியுடன் ஏற்பட்ட சர்ச்சை காரணமாக திகாம்பரம் அக்கூட்டணியில் இருந்து 2010 ஏப்ரல் 22 இல் விலகினார்.[8] திகாம்பரம் பின்னர் எக்கூட்டணியிலும் சேராமல் சுயேட்சையாக நாடாளுமன்ற எதிர்க்கட்சி உறுப்பினராகத் தொடர்ந்திருந்தார்.[9]

2014 ஆகத்து 21 இல் இவர் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியில் இணைந்து தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாட்டு பிரதி அமைச்சராக நியமிக்கப்பட்டார்.[10][11] பின்னர் 2014 டிசம்பர் 10 இல் ஆளும் கூட்டணியில் இருந்து விலகி 2-015 அரசுதலைவர் தேர்தலில் பொது எதிர்க்கட்சி வேட்பாளராகப் போட்டியிடும் மைத்திரிபால சிறிசேனவிற்குத் தனது ஆதரவைத் தெரிவித்தார்.[12][13] தேர்தலின் பின்னர் புதிய அரசுத்தலைவர் சிறிசேன இவரை தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சராக நியமித்தார்.[14][15]

2015 நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் சார்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளராக நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிட்டு 105,528 விருப்பு வாக்குகள் பெற்று வெற்றி பெற்று மீண்டும் நாடாளுமன்றம் சென்றார்.[16][17][18] 2015 செப்டம்பர் 4 அன்று மைத்திரிபால சிறிசேனவின் அரசில் மலையக புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சராக நியமிக்கப்பட்டார்.[19][20][21]

மேற்கோள்கள் தொகு

  1. "Directory of Members: Thigambaram, Palany". இலங்கை நாடாளுமன்றம்.
  2. "New faces in Parliament". சண்டே டைம்சு. 18 ஏப்ரல் 2010. http://www.sundaytimes.lk/100418/News/page8.pdf. 
  3. Jeyaraj, D. B. S. (23 ஏப்ரல் 2010). "Decline of Tamil representation outside the North and East". dbsjeyaraj.com. Archived from the original on 2015-07-13. பார்க்கப்பட்ட நாள் 2014-12-16. {{cite web}}: Check date values in: |date= (help)
  4. "Results of Provincial Council Elections 2004" (PDF). இலங்கை தேர்தல் திணைக்களம்.
  5. "Preferences Nuwara Eliya" (PDF). இலங்கைத் தேர்தல் திணைக்களம். Archived from the original (PDF) on 2009-12-10. பார்க்கப்பட்ட நாள் 2014-12-16.
  6. "Parliamentary General Election - 2010 Nuwara Eliya Preferences" (PDF). இலங்கைத் தேர்தல் திணைக்கள்ம். Archived from the original (PDF) on 2010-05-13. பார்க்கப்பட்ட நாள் 2014-12-16.
  7. "General Elections 2010 - Preferential Votes". சண்டேடைம்சு. 11 ஏப்ரல் 2010. http://www.sundaytimes.lk/100411/News/page1.pdf. 
  8. Perera, Yohan (23 ஏப்ரல் 2010). "Workers Union leaves UNF". டெய்லிமிரர். http://www.dailymirror.lk/print/index.php/news/front-page-news/8813.html. 
  9. Indrajith, Saman (23 ஏப்ரல் 2010). "NUW to back govt.". ஐலண்டு இம் மூலத்தில் இருந்து 2016-03-03 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160303195043/http://www.island.lk/2010/04/23/news19.html. 
  10. Somawardana, Melissa (21 ஆகத்து 2014). "Prabha Ganesan and Digambaran sworn in as Deputy Ministers". நியூஸ் ஃபர்ஸ்ட் இம் மூலத்தில் இருந்து 2014-12-13 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20141213190450/http://newsfirst.lk/english/2014/08/praba-ganesan-p-digambaran-sworn-deputy-ministers/50251. 
  11. "Two more Deputy Ministers take oaths before President in Si Lanka". Colombo Page. 21 ஆகத்து 2014 இம் மூலத்தில் இருந்து 2014-12-13 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20141213220627/http://www.colombopage.com/archive_14B/Aug21_1408629270CH.php. 
  12. Ferdinando, Shamindra (11 டிசம்பர் 2014). "Two deputy ministers quit; CWC suffers split". தி ஐலண்டு இம் மூலத்தில் இருந்து 2014-12-13 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20141213153721/http://www.island.lk/index.php?page_cat=article-details&page=article-details&code_title=115736. 
  13. Srinivasan, Meera (11 டிசம்பர் 2014). "2 more MPs leave Rajapaksa government". தி இந்து. http://www.thehindu.com/news/international/south-asia/2-more-mps-leave-rajapaksa-government/article6680195.ece. 
  14. "New Cabinet ministers sworn in". டெய்லிமிரர். 12 சனவரி 2015. http://www.dailymirror.lk/61073/new-cabinet-ministers-sworn-in. 
  15. "New Cabinet takes oaths". தெ நேசன். 12 சனவரி 2015 இம் மூலத்தில் இருந்து 2015-01-18 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150118145912/http://www.nation.lk/edition/latest-top-stories/item/37306-new-cabinet-takes-oaths.html. 
  16. "PART I : SECTION (I) — GENERAL Government Notifications PARLIAMENTARY ELECTIONS ACT, No. 1 OF 1981". இலங்கை அரச வர்த்தமானி Extraordinary 1928/03. 19 August 2015. http://www.documents.gov.lk/Extgzt/2015/PDF/Aug/1928_03/1928_03%20E.pdf. பார்த்த நாள்: 4 செப்டம்பர் 2015. 
  17. "Ranil tops with over 500,000 votes in Colombo". டெய்லிமிரர். 19 ஆகத்து 2015. http://www.dailymirror.lk/83949/ranil-tops-with-over-500-000-votes-in-colombo. 
  18. "Preferential Votes". டெய்லிநியூஸ். 19 ஆகத்து 2015 இம் மூலத்தில் இருந்து 2015-08-20 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20150820025307/http://www.dailynews.lk/?q=political/preferential-votes-2. 
  19. "இலங்கையின் புதிய அமைச்சரவை பதவியேற்றுள்ளது". பிபிசி தமிழ். 4 செப்டம்பர் 2015. பார்க்கப்பட்ட நாள் 4 செப்டம்பர் 2015. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)
  20. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2003-12-04. பார்க்கப்பட்ட நாள் 2015-09-04.
  21. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2015-09-06. பார்க்கப்பட்ட நாள் 2015-09-04.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பழனி_திகாம்பரம்&oldid=3589622" இலிருந்து மீள்விக்கப்பட்டது