இலங்கை மாகாண சபைத் தேர்தல், 2004
2004 இலங்கை மாகாணசபைத் தேர்தல் 2004 ஏப்ரல் 24, 2004 சூலை 10 ஆகிய நாட்களில் இலங்கையின் ஏழு மாகாணசபைகளுக்கு உறுப்பினர்களைத் தேர்தெடுப்பதற்காக நடைபெற்றது. எட்டாவது மாகாணமான வடக்கு கிழக்கு மாகாண சபைக்குத் தேர்தல்கள் இடம்பெறவில்லை. இம்மாகாணசபை 1990 மார்ச்சு முதல் தேசிய நடுவண் அரசின் நேரடிக் கட்டுப்பாட்டில் இருந்தது. இலங்கையின் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி ஏழு மாகாணசபைகளையும் கைப்பற்றியது.
| ||||||||||||||||||||||
7 மாகாண சபைகளுக்கு 380 இடங்கள் | ||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
வாக்களித்தோர் | 55.86% | |||||||||||||||||||||
| ||||||||||||||||||||||
தேர்தல் மாவட்டங்கள் வாரியாக வெற்றியாளர்கள். ஐமசுகூ நீலம், ஐதேக பச்சை. |
பின்னணி
தொகுஈழப்போரை முடிவுக்குக் கொண்டு வரும் பொருட்டு, இலங்கை-இந்திய ஒப்பந்தம் 1987 அக்டோபர் 29 இல் கையெழுத்திடப்பட்டது. இந்த ஒப்பந்தத்தின் முக்கிய அம்சம் இலங்கை அரசு அதன் மாகாணங்களுக்கு அதிகாரங்களைப் பகிர்ந்தளிப்பதாகும்.[1] இதன் படி 1987 நவம்பர் 14 இல் இலங்கை நாடாளுமன்றம் தனது அரசியலமைப்பில் 13வது திருத்தம் மற்றும் மாகாணசபைச் சட்டம் இல. 42 (1987) ஆகியவற்றை அறிவித்தது.[2][3] 1988 பெப்ரவரி 3 ஆம் நாள் ஒன்பது மாகாணசபைகள் உருவாக்கப்பட்டன[4]. மாகாணசபைகளுக்கான முதலாவது தேர்தல்கள் 1988 ஏப்ரல் 28 ஆம் நாள் வடமத்திய, வடமேல், சபரகமுவா, மற்றும் ஊவா ஆகிய மாகாணங்களுக்கு இடம்பெற்றன.[5] 1988 சூன் 2 இல் மத்திய, தெற்கு, மற்றும் மேற்கு மாகாணங்களுக்கு தேர்தல்கள் நடத்தப்பட்டன. அன்று இலங்கையின் ஆளும் கட்சியாக இருந்த ஐக்கிய தேசியக் கட்சி (ஐதேக) ஏழு மாகாணசபைகளினதும் ஆட்சியைக் கைப்பற்றியது.
இலங்கை-இந்திய ஒப்பந்தத்தின் படி கிழக்கு மற்றும் வடக்கு மாகாணங்கள் ஒன்றிணைக்கப்பட்டு ஒரு நிருவாகத்தின் கீழ் கொண்டுவர இணக்கம் காணப்பட்டது. இவ்விணைப்பு நிரந்தர இணைப்பாக இருப்பதற்கு கிழக்கு மாகாணத்தில் 1988 திசம்பர் 31 இற்குள் பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் எனவும் தீர்மானிக்கப்பட்டது. ஆனாலும், இந்த பொது வாக்கெடுப்பை ஒத்திவைக்க இலங்கை அரசுத்தலைவருக்கு அதிகாரம் அளிக்கப்பட்டது.[1] 1988 செப்டம்பர் 2 இல் அரசுத் தலைவர் ஜே. ஆர். ஜெயவர்தனா இரு மாகாணங்களையும் இணைத்து வடக்கு கிழக்கு மாகாண சபை என்ற ஒரு மாகாணசபையாக நிருவகிக்க உத்தரவு பிறப்பித்தார்.[4] இந்த இணைந்த மாகாணசபைக்கான தேர்தல் 1988 நவம்பர் 19 இல் நடத்தப்பட்டது. இந்தியாவின் ஆதரவில் இயங்கிய ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி இத்தேர்தலில் வெற்றி பெற்றது. தமிழர் விடுதலைக் கூட்டணி இத்தேர்தலில் பங்கேற்கவில்லை.
1990, மார்ச்சு 1 அன்று, இந்திய அமைதி காக்கும் படையினர் இலங்கையை விட்டுப் புறப்படும் தறுவாயில், வடகிழக்கு மாகாணசபையின் முதலமைச்சர் அ. வரதராஜப் பெருமாள் மாகாணசபைக் கூட்டத்தில் தமிழீழத்தைப் பிரகடனப்படுத்தி விட்டு அமைதிப் படையினருடன் சேர்ந்து இந்தியா சென்றார்.[6] இதனை அடுத்து அரசுத்தலைவர் பிரேமதாசா மாகாணசபையைக் கலைத்து, நடுவண் அரசின் நேரடி ஆட்சியைக் கொண்டு வந்தார்.
1993 ஆம் ஆண்டில் வட-கிழக்குத் தவிர்ந்த ஏழு மாகாணங்களுக்கு 2வது தேர்தல்கள் இடம்பெற்றன. ஆறு மாகாணங்களில் ஆளும் ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சியைக் கைப்பற்றியது. மேற்கு மாகாணசபையை முக்கிய எதிர்க்கட்சிக் கூட்டணியான மக்கள் கூட்டணி கைப்பற்றியது. தெற்கு மாகாணத்தில் ஐதேகவின் சில உறுப்பினர்கள் கட்சி மாறியதை அடுத்து அங்கு 1994 ஆம் ஆண்டில் சிறப்புத் தேர்தல் நடத்தப்பட்டது. மக்கள் கூட்டணி வெற்றி பெற்றது.
3வது மாகாணசபைத் தேர்தல்கள் 1999 இல் வடகிழக்குத் தவிர்ந்த 7 மாகாணங்களுக்கு நடத்தப்பட்டன. ஆளும் மக்கள் கூட்டணி வடமத்திய மற்றும் வடமேற்கு மாகாணசபைகளைக் கைப்பற்றியது. ஏனைய மாகாணங்களில் சிறிய கட்சிகளின் துணையுடன் ஆட்சியமைத்தது. 2002 ஆம் ஆண்டில் மத்திய மாகாண சபையின் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் உறுப்பினர்கள் மக்கள் கூட்டணிக்கான ஆதரவை விலக்கிக் கொண்டதை அடுத்து ஐதேக அங்கு ஆட்சியை மீண்டும் கைப்பற்றியது.[7].
தேர்தல் முடிவுகள்
தொகுமேலோட்டமான முடிவுகள்
தொகுஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி, ஏழு மாகாணசபைகளையும் கைப்பற்றியது.
கட்சி / கூட்டணி | வாக்குகள் | % | இடங்கள் |
---|---|---|---|
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி | 3,364,239 | 57.68% | 227 |
ஐக்கிய தேசியக் கட்சி1 2 | 2,197,892 | 37.68% | 140 |
சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசு1 | 119,796 | 2.05% | 7 |
மலையக மக்கள் முன்னணி | 52,639 | 0.90% | 3 |
ஐக்கிய சோசலிசக் கட்சி | 21,372 | 0.37% | 0 |
ஜனநாயக மக்கள் முன்னணி | 15,871 | 0.27% | 1 |
சுயேட்சைகள் | 11,976 | 0.21% | 0 |
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்2 | 10,720 | 0.18% | 1 |
தேசிய அபிவிருத்தி முன்னணி | 10,493 | 0.18% | 0 |
சிங்கள மகாசம்மத பூமிபுத்ர கட்சி | 6,981 | 0.12% | 0 |
சனநாயக ஒற்றுமைக் கூட்டணி | 6,219 | 0.11% | 1 |
ஐக்கிய லலித் முன்னணி | 3,765 | 0.06% | 0 |
புதிய இடது முன்னணி | 3,589 | 0.06% | 0 |
இலங்கை லிபரல் கட்சி | 1,450 | 0.02% | 0 |
ஐக்கிய சிங்கள பாரிய பேரவை | 1,304 | 0.02% | 0 |
ஐக்கிய முஸ்லிம் மக்கள் கூட்டணி | 1,139 | 0.02% | 0 |
இலங்கை முஸ்லிம் கட்சி | 752 | 0.01% | 0 |
இலங்கை முன்னேற்ற முன்னணி | 730 | 0.01% | 0 |
மக்கள் விடுதலை ஒற்றுமை முன்னணி | 617 | 0.01% | 0 |
ருகுண மக்கள் கட்சி | 311 | 0.01% | 0 |
தேசிய சனநாயகக் கட்சி | 287 | 0.00% | 0 |
இலங்கை தேசிய முன்னணி | 224 | 0.00% | 0 |
சனநாயக ஐக்கிய தேசிய முன்னணி | 218 | 0.00% | 0 |
தேசிய மக்கள் கட்சி | 124 | 0.00% | 0 |
செல்லுபடியான வாக்குகள் | 5,832,708 | 100.00% | 380 |
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் | 380,055 | ||
மொத்த வாக்குகள் | 6,212,763 | ||
பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் | 11,121,889 | ||
வாக்குவீதம் | 55.86% | ||
1. சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசு வடமத்திய, வடமேற்கு, சபரகமுவ, மற்றும் மேற்கு மாகாணங்களில் தனித்தும், மத்திய, ஊவா மாகாணங்களில் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்தும் போட்டியிட்டது. 2. இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சபரகமுவா மாகாணத்தில் தனித்தும், ஏனையவற்றில் ஐதேகவுடன் இணைந்தும் போட்டியிட்டது. |
மத்திய மாகாணம்
தொகு2004 சூலை 10 இல் நடைபெற்ற மத்திய மாகாண சபைக்கான தேர்தல் முடிவுகள்:
கட்சி / கூட்டணி | கண்டி | மாத்தளை | நுவரெலியா | கூடுதல் இடங்கள் |
மொத்தம் | ||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
வாக்குகள் | % | இடங்கள் | வாக்குகள் | % | இடங்கள் | வாக்குகள் | % | இடங்கள் | வாக்குகள் | % | இடங்கள் | ||
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி | 244,595 | 54.17% | 16 | 92,510 | 56.12% | 6 | 89,192 | 32.75% | 6 | 2 | 426,297 | 47.97% | 30 |
ஐக்கிய தேசியக் கட்சி | 202,264 | 44.80% | 14 | 69,309 | 42.04% | 4 | 138,572 | 50.88% | 8 | 410,145 | 46.15% | 26 | |
மலையக மக்கள் முன்னணி | 1,135 | 0.69% | 0 | 36,939 | 13.56% | 2 | 38,074 | 4.28% | 2 | ||||
ஐக்கிய சோசலிசக் கட்சி | 1,088 | 0.24% | 0 | 1,152 | 0.70% | 0 | 3,896 | 1.43% | 0 | 6,136 | 0.69% | 0 | |
சுயேட்சைகள் | 390 | 0.09% | 0 | 120 | 0.07% | 0 | 2,131 | 0.78% | 0 | 2,641 | 0.30% | 0 | |
தேசிய அபிவிருத்தி முன்னணி | 1,360 | 0.30% | 0 | 399 | 0.24% | 0 | 521 | 0.19% | 0 | 2,280 | 0.26% | 0 | |
ஐக்கிய முஸ்லிம் மக்கள் கூட்டணி | 987 | 0.22% | 0 | 987 | 0.11% | 0 | |||||||
இலங்கை லிபரல் கட்சி | 860 | 0.32% | 0 | 860 | 0.10% | 0 | |||||||
சிங்கள மகாசம்மத பூமிபுத்ர கட்சி | 419 | 0.09% | 0 | 117 | 0.07% | 0 | 76 | 0.03% | 0 | 612 | 0.07% | 0 | |
தேசிய சனநாயகக் கட்சி | 178 | 0.04% | 0 | 109 | 0.04% | 0 | 287 | 0.03% | 0 | ||||
ருகுண மக்கள் கட்சி | 161 | 0.04% | 0 | 31 | 0.01% | 0 | 192 | 0.02% | 0 | ||||
இலங்கை முன்னேற்ற முன்னணி | 76 | 0.02% | 0 | 76 | 0.01% | 0 | |||||||
தேசிய மக்கள் கட்சி | 62 | 0.04% | 0 | 62 | 0.01% | 0 | |||||||
இலங்கை முஸ்லிம் கட்சி | 53 | 0.03% | 0 | 53 | 0.01% | 0 | |||||||
செல்லுபடியான வாக்குகள் | 451,518 | 100.00% | 30 | 164,857 | 100.00% | 10 | 272,327 | 100.00% | 16 | 2 | 888,702 | 100.00% | 58 |
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் | 31,502 | 12,469 | 23,375 | 67,346 | |||||||||
மொத்த வாக்குகள் | 483,020 | 177,326 | 295,702 | 956,048 | |||||||||
பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் | 880,635 | 312,556 | 436,248 | 1,629,439 | |||||||||
வாக்குவீதம் | 54.85% | 56.73% | 67.78% | 58.67% |
வடமத்திய மாகாணம்
தொகு2004 சூலை 10 இல் நடைபெற்ற வடமத்திய மாகாண சபைக்கான தேர்தல் முடிவுகள்:
கட்சி / கூட்டணி | அனுராதபுரம் | பொலன்னறுவை | கூடுதல் இடங்கள் |
மொத்தம் | ||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|
வாக்குகள் | % | இடங்கள் | வாக்குகள் | % | இடங்கள் | வாக்குகள் | % | இடங்கள் | ||
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி | 187,977 | 63.92% | 14 | 91,067 | 62.19% | 6 | 2 | 279,044 | 63.34% | 22 |
ஐக்கிய தேசியக் கட்சி | 89,166 | 30.32% | 6 | 54,534 | 37.24% | 4 | 143,700 | 32.62% | 10 | |
சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசு | 14,391 | 4.89% | 1 | 14,391 | 3.27% | 1 | ||||
ஐக்கிய சோசலிசக் கட்சி | 1,217 | 0.41% | 0 | 620 | 0.42% | 0 | 1,837 | 0.42% | 0 | |
தேசிய அபிவிருத்தி முன்னணி | 845 | 0.29% | 0 | 845 | 0.19% | 0 | ||||
சுயேட்சைகள் | 222 | 0.08% | 0 | 130 | 0.09% | 0 | 352 | 0.08% | 0 | |
சிங்கள மகாசம்மத பூமிபுத்ர கட்சி | 74 | 0.03% | 0 | 54 | 0.04% | 0 | 128 | 0.03% | 0 | |
இலங்கை முன்னேற்ற முன்னணி | 126 | 0.04% | 0 | 126 | 0.03% | 0 | ||||
ஐக்கிய சிங்களப் பேரவை | 73 | 0.02% | 0 | 28 | 0.02% | 0 | 101 | 0.02% | 0 | |
செல்லுபடியான வாக்குகள் | 294,091 | 100.00% | 21 | 146,433 | 100.00% | 10 | 2 | 440,524 | 100.00% | 33 |
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் | 21,600 | 9,831 | 31,431 | |||||||
மொத்த வாக்குகள் | 315,691 | 156,264 | 471,955 | |||||||
பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் | 514,149 | 254,061 | 768,210 | |||||||
வாக்குவீதம் | 61.40% | 61.51% | 61.44% |
வடமேல் மாகாணம்
தொகு2004 சூலை 10 இல் நடைபெற்ற வடமேல் மாகாண சபைக்கான தேர்தல் முடிவுகள்:
கட்சி / கூட்டணி | குருநாகல் | புத்தளம் | கூடுதல் இடங்கள் |
மொத்தம் | ||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|
வாக்குகள் | % | இடங்கள் | வாக்குகள் | % | இடங்கள் | வாக்குகள் | % | இடங்கள் | ||
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி | 362,084 | 59.85% | 20 | 128,916 | 57.10% | 9 | 2 | 491,000 | 59.10% | 31 |
ஐக்கிய தேசியக் கட்சி | 215,905 | 35.69% | 12 | 95,868 | 42.46% | 7 | 311,773 | 37.53% | 19 | |
சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசு | 24,173 | 4.00% | 2 | 24,173 | 2.91% | 2 | ||||
தேசிய அபிவிருத்தி முன்னணி | 623 | 0.10% | 0 | 450 | 0.20% | 0 | 1,073 | 0.13% | 0 | |
ஐக்கிய லலித் முன்னணி | 883 | 0.15% | 0 | 883 | 0.11% | 0 | ||||
புதிய இடது முன்னணி | 476 | 0.08% | 0 | 89 | 0.04% | 0 | 565 | 0.07% | 0 | |
சுயேட்சைகள் | 178 | 0.03% | 0 | 195 | 0.09% | 0 | 373 | 0.04% | 0 | |
சிங்கள மகாசம்மத பூமிபுத்ர கட்சி | 295 | 0.05% | 0 | 48 | 0.02% | 0 | 343 | 0.04% | 0 | |
இலங்கை முன்னேற்ற முன்னணி | 145 | 0.02% | 0 | 15 | 0.01% | 0 | 160 | 0.02% | 0 | |
ஐக்கிய முஸ்லிம் மக்கள் கூட்டணி | 152 | 0.07% | 0 | 152 | 0.02% | 0 | ||||
இலங்கை முஸ்லிம் கட்சி | 83 | 0.01% | 0 | 15 | 0.01% | 0 | 98 | 0.01% | 0 | |
ஐக்கிய சிங்களப் பேரவை | 91 | 0.02% | 0 | 91 | 0.01% | 0 | ||||
இலங்கை தேசிய முன்னணி | 43 | 0.01% | 0 | 43 | 0.01% | 0 | ||||
ருகுண மக்கள் கட்சி | 17 | 0.01% | 0 | 17 | 0.00% | 0 | ||||
செல்லுபடியான வாக்குகள் | 604,979 | 100.00% | 34 | 225,765 | 100.00% | 16 | 2 | 830,744 | 100.00% | 52 |
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் | 28,019 | 9,600 | 37,619 | |||||||
மொத்த வாக்குகள் | 632,998 | 235,365 | 868,363 | |||||||
பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் | 1,089,482 | 450,057 | 1,539,539 | |||||||
வாக்குவீதம் | 58.10% | 52.30% | 56.40% |
சபரகமுவா மாகாணம்
தொகு2004 சூலை 10 இல் நடைபெற்ற சபரகமுவா மாகாண சபைக்கான தேர்தல் முடிவுகள்:
கட்சி / கூட்டணி | கேகாலை | இரத்தினபுரி | கூடுதல் இடங்கள் |
மொத்தம் | ||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|
வாக்குகள் | % | இடங்கள் | வாக்குகள் | % | இடங்கள் | வாக்குகள் | % | இடங்கள் | ||
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி | 185,112 | 58.90% | 11 | 213,619 | 61.07% | 15 | 2 | 398,731 | 60.04% | 28 |
ஐக்கிய தேசியக் கட்சி | 115,551 | 36.77% | 7 | 119,681 | 34.22% | 8 | 235,232 | 35.42% | 15 | |
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் | 4,295 | 1.37% | 0 | 6,425 | 1.84% | 1 | 10,720 | 1.61% | 1 | |
சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசு | 6,770 | 2.15% | 0 | 3,731 | 1.07% | 0 | 10,501 | 1.58% | 0 | |
ஐக்கிய சோசலிசக் கட்சி | 798 | 0.25% | 0 | 1,261 | 0.36% | 0 | 2,059 | 0.31% | 0 | |
மலையக மக்கள் முன்னணி | 1,806 | 0.52% | 0 | 1,806 | 0.27% | 0 | ||||
ஐக்கிய லலித் முன்னணி | 584 | 0.19% | 0 | 707 | 0.20% | 0 | 1,291 | 0.19% | 0 | |
தேசிய அபிவிருத்தி முன்னணி | 423 | 0.13% | 0 | 512 | 0.15% | 0 | 935 | 0.14% | 0 | |
ஜனநாயக மக்கள் முன்னணி | 854 | 0.24% | 0 | 854 | 0.13% | 0 | ||||
சுயேட்சைகள் | 339 | 0.11% | 0 | 500 | 0.14% | 0 | 839 | 0.13% | 0 | |
இலங்கை லிபரல் கட்சி | 262 | 0.07% | 0 | 262 | 0.04% | 0 | ||||
ஐக்கிய சிங்களப் பேரவை | 84 | 0.03% | 0 | 96 | 0.03% | 0 | 180 | 0.03% | 0 | |
சனநாயக ஐக்கிய தேசிய முன்னணி | 80 | 0.03% | 0 | 83 | 0.02% | 0 | 163 | 0.02% | 0 | |
சிங்கள மகாசம்மத பூமிபுத்ர கட்சி | 158 | 0.05% | 0 | 158 | 0.02% | 0 | ||||
இலங்கை முஸ்லிம் கட்சி | 133 | 0.04% | 0 | 133 | 0.02% | 0 | ||||
இலங்கை முன்னேற்ற முன்னணி | 63 | 0.02% | 0 | 52 | 0.01% | 0 | 115 | 0.02% | 0 | |
தேசிய மக்கள் கட்சி | 62 | 0.02% | 0 | 62 | 0.01% | 0 | ||||
ருகுண மக்கள் கட்சி | 39 | 0.01% | 0 | 39 | 0.01% | 0 | ||||
செல்லுபடியான வாக்குகள் | 314,296 | 100.00% | 18 | 349,784 | 100.00% | 24 | 2 | 664,080 | 100.00% | 44 |
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் | 19,779 | 22,652 | 42,431 | |||||||
மொத்த வாக்குகள் | 334,075 | 372,436 | 706,511 | |||||||
பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் | 570,299 | 647,035 | 1,217,334 | |||||||
வாக்குவீதம் | 58.58% | 57.56% | 58.04% |
தெற்கு மாகாணம்
தொகு2004 சூலை 10 இல் நடைபெற்ற தெற்கு மாகாண சபைக்கான தேர்தல் முடிவுகள்:
கட்சி / கூட்டணி | காலி | அம்பாந்தோட்டை | மாத்தறை | கூடுதல் இடங்கள் |
மொத்தம் | ||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
வாக்குகள் | % | இடங்கள் | வாக்குகள் | % | இடங்கள் | வாக்குகள் | % | இடங்கள் | வாக்குகள் | % | இடங்கள் | ||
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி | 238,285 | 62.50% | 14 | 141,283 | 70.12% | 8 | 182,076 | 64.30% | 12 | 2 | 561,644 | 64.86% | 36 |
ஐக்கிய தேசியக் கட்சி | 139,168 | 36.51% | 9 | 58,327 | 28.95% | 4 | 94,448 | 33.35% | 6 | 291,943 | 33.72% | 19 | |
சுயேட்சைகள் | 361 | 0.09% | 0 | 409 | 0.20% | 0 | 4,615 | 1.63% | 0 | 5,385 | 0.62% | 0 | |
ஐக்கிய சோசலிசக் கட்சி | 2,278 | 0.60% | 0 | 1,004 | 0.50% | 0 | 534 | 0.19% | 0 | 3,816 | 0.44% | 0 | |
ஐக்கிய லலித் முன்னணி | 472 | 0.12% | 0 | 348 | 0.12% | 0 | 820 | 0.09% | 0 | ||||
சிங்கள மகாசம்மத பூமிபுத்ர கட்சி | 411 | 0.11% | 0 | 78 | 0.04% | 0 | 182 | 0.06% | 0 | 671 | 0.08% | 0 | |
மக்கள் விடுதலை ஒருமைப்பாட்டு முன்னணி | 617 | 0.22% | 0 | 617 | 0.07% | 0 | |||||||
ஐக்கிய சிங்களப் பேரவை | 159 | 0.04% | 0 | 56 | 0.03% | 0 | 172 | 0.06% | 0 | 387 | 0.04% | 0 | |
தேசிய அபிவிருத்தி முன்னணி | 267 | 0.13% | 0 | 267 | 0.03% | 0 | |||||||
இலங்கை லிபரல் கட்சி | 186 | 0.07% | 0 | 186 | 0.02% | 0 | |||||||
ருகுண மக்கள் கட்சி | 94 | 0.02% | 0 | 94 | 0.01% | 0 | |||||||
இலங்கை முன்னேற்ற முன்னணி | 43 | 0.02% | 0 | 43 | 0.00% | 0 | |||||||
இலங்கை தேசிய முன்னணி | 29 | 0.01% | 0 | 29 | 0.00% | 0 | |||||||
செல்லுபடியான வாக்குகள் | 381,228 | 100.00% | 23 | 201,496 | 100.00% | 12 | 283,178 | 100.00% | 18 | 2 | 865,902 | 100.00% | 55 |
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் | 23,633 | 13,725 | 16,992 | 54,350 | |||||||||
மொத்த வாக்குகள் | 404,861 | 215,221 | 300,170 | 920,252 | |||||||||
பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் | 716,609 | 384,361 | 551,506 | 1,652,476 | |||||||||
வாக்குவீதம் | 56.50% | 55.99% | 54.43% | 55.69% |
ஊவா மாகாணம்
தொகு2004 சூலை 10 இல் நடைபெற்ற ஊவா மாகாண சபைக்கான தேர்தல் முடிவுகள்:
கட்சி / கூட்டணி | பதுளை | மொனராகலை | கூடுதல் இடங்கள் |
மொத்தம் | ||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|
வாக்குகள் | % | இடங்கள் | வாக்குகள் | % | இடங்கள் | வாக்குகள் | % | இடங்கள் | ||
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி | 169,197 | 55.48% | 12 | 97,878 | 66.24% | 7 | 2 | 267,075 | 58.99% | 21 |
ஐக்கிய தேசியக் கட்சி | 119,171 | 39.08% | 8 | 48,930 | 33.12% | 4 | 168,101 | 37.13% | 12 | |
மலையக மக்கள் முன்னணி | 12,759 | 4.18% | 1 | 12,759 | 2.82% | 1 | ||||
ஐக்கிய சோசலிசக் கட்சி | 2,364 | 0.78% | 0 | 616 | 0.42% | 0 | 2,980 | 0.66% | 0 | |
தேசிய அபிவிருத்தி முன்னணி | 523 | 0.17% | 0 | 523 | 0.12% | 0 | ||||
இலங்கை முஸ்லிம் கட்சி | 468 | 0.15% | 0 | 468 | 0.10% | 0 | ||||
சுயேட்சைகள் | 231 | 0.08% | 0 | 117 | 0.08% | 0 | 348 | 0.08% | 0 | |
சிங்கள மகாசம்மத பூமிபுத்ர கட்சி | 246 | 0.08% | 0 | 65 | 0.04% | 0 | 311 | 0.07% | 0 | |
சனநாயக ஐக்கிய தேசிய முன்னணி | 55 | 0.04% | 0 | 55 | 0.01% | 0 | ||||
இலங்கை தேசிய முன்னணி | 39 | 0.03% | 0 | 39 | 0.01% | 0 | ||||
ஐக்கிய சிங்களப் பேரவை | 33 | 0.02% | 0 | 33 | 0.01% | 0 | ||||
இலங்கை முன்னேற்ற முன்னணி | 20 | 0.01% | 0 | 20 | 0.00% | 0 | ||||
செல்லுபடியான வாக்குகள் | 304,959 | 100.00% | 21 | 147,753 | 100.00% | 11 | 2 | 452,712 | 100.00% | 34 |
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் | 25,628 | 10,831 | 36,459 | |||||||
மொத்த வாக்குகள் | 330,587 | 158,584 | 489,171 | |||||||
பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் | 511,115 | 262,742 | 773,857 | |||||||
வாக்குவீதம் | 64.68% | 60.36% | 63.21% |
மேற்கு மாகாணம்
தொகு2004 சூலை 10 இல் நடைபெற்ற மேற்கு மாகாண சபைக்கான தேர்தல் முடிவுகள்:
கட்சி / கூட்டணி | கொழும்பு | கம்பகா | களுத்துறை | கூடுதல் இடங்கள் |
மொத்தம் | ||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
வாக்குகள் | % | இடங்கள் | வாக்குகள் | % | இடங்கள் | வாக்குகள் | % | இடங்கள் | வாக்குகள் | % | இடங்கள் | ||
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி | 322,653 | 49.11% | 21 | 392,881 | 61.35% | 24 | 224,914 | 57.27% | 12 | 2 | 940,448 | 55.65% | 59 |
ஐக்கிய தேசியக் கட்சி | 276,759 | 42.12% | 18 | 218,903 | 34.19% | 14 | 141,336 | 35.99% | 7 | 636,998 | 37.69% | 39 | |
சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசு | 31,184 | 4.75% | 2 | 16,621 | 2.60% | 1 | 22,926 | 5.84% | 1 | 70,731 | 4.19% | 4 | |
ஜனநாயக மக்கள் முன்னணி | 12,219 | 1.86% | 1 | 2,798 | 0.44% | 0 | 15,017 | 0.89% | 1 | ||||
சனநாயக ஐக்கிய கூட்டமைப்பு | 6,219 | 0.95% | 1 | 6,219 | 0.37% | 1 | |||||||
சிங்கள மகாசம்மத பூமிபுத்ர கட்சி | 2,194 | 0.33% | 0 | 2,564 | 0.40% | 0 | 4,758 | 0.28% | 0 | ||||
தேசிய அபிவிருத்தி முன்னணி | 1,337 | 0.20% | 0 | 2,361 | 0.37% | 0 | 872 | 0.22% | 0 | 4,570 | 0.27% | 0 | |
ஐக்கிய சோசலிசக் கட்சி | 2,419 | 0.38% | 0 | 2,125 | 0.54% | 0 | 4,544 | 0.27% | 0 | ||||
புதிய இடது முன்னணி | 3,024 | 0.46% | 0 | 3,024 | 0.18% | 0 | |||||||
சுயேட்சைகள் | 251 | 0.04% | 0 | 1,262 | 0.20% | 0 | 525 | 0.13% | 0 | 2,038 | 0.12% | 0 | |
ஐக்கிய லலித் முன்னணி | 771 | 0.12% | 0 | 0 | 0.00% | 0 | 771 | 0.05% | 0 | ||||
ஐக்கிய சிங்களப் பேரவை | 276 | 0.04% | 0 | 236 | 0.04% | 0 | 512 | 0.03% | 0 | ||||
இலங்கை முன்னேற்ற முன்னணி | 159 | 0.02% | 0 | 159 | 0.01% | 0 | |||||||
இலங்கை லிபரல் கட்சி | 142 | 0.02% | 0 | 142 | 0.01% | 0 | |||||||
இலங்கை தேசிய முன்னணி | 113 | 0.02% | 0 | 113 | 0.01% | 0 | |||||||
செல்லுபடியான வாக்குகள் | 657,000 | 100.00% | 43 | 640,346 | 100.00% | 39 | 392,698 | 100.00% | 20 | 2 | 1,690,044 | 100.00% | 104 |
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் | 45,004 | 38,790 | 26,625 | 110,419 | |||||||||
மொத்த வாக்குகள் | 702,004 | 679,136 | 419,323 | 1,800,463 | |||||||||
பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் | 1,467,751 | 1,327,145 | 746,138 | 3,541,034 | |||||||||
வாக்குவீதம் | 47.83% | 51.17% | 56.20% | 50.85% |
மேற்கோள்கள்
தொகு- "Results of Provincial Council Elections 2004" (PDF). Department of Elections, Sri Lanka.
- ↑ 1.0 1.1 "Indo Sri Lanka Agreement, 1987". TamilNation.
- ↑ "Introduction". Official Website of the Government of Sri Lanka. இலங்கை அரசு. Archived from the original on 2009-07-07. பார்க்கப்பட்ட நாள் 2013-07-20.
- ↑ "Amendments to the 1978 Constitution". Official Website of the Government of Sri Lanka. இலங்கை அரசு. Archived from the original on 2009-08-17. பார்க்கப்பட்ட நாள் 2013-07-20.
- ↑ 4.0 4.1 "North-East merger illegal: SC". LankaNewspapers.com. 17 October 2006. http://www.lankanewspapers.com/news/2006/10/8947.html.
- ↑ database/ethnic conflict/time line.shtml "Ethnic Conflict of Sri Lanka: Time Line - From Independence to 1999". International Centre for Ethnic Studies9.
{{cite web}}
: Check|url=
value (help)[தொடர்பிழந்த இணைப்பு] - ↑ Ferdinando, Shamindra (10 செப்டம்பர் 2000). "I'm no traitor, says Perumal". ஐலண்டு இம் மூலத்தில் இருந்து 2009-05-01 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20090501173226/http://www.priu.gov.lk/news_update/features/20000912no_traitor.htm.
- ↑ Sri Nissanka, Jayantha (30 ஏப்ரல் 2002). "Central Provincial Council : UNF takes over". டெய்லி நியூஸ் இம் மூலத்தில் இருந்து 2012-10-14 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20121014214606/http://www.dailynews.lk/2002/04/30/new06.html.