கலாவதி (திரைப்படம்)
(கலாவதி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
கலாவதி 1951 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எல். எஸ். ராமச்சந்திரன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் டி. எஸ். துரைராஜ், ஈ. ஆர். சகாதேவன் மற்றும் பலர் நடித்திருந்தனர். இலங்கையைச் சேர்ந்த டபிள்யூ. எம். எஸ். தம்பு இத்திரைப்படத்தைத் தயாரித்திருந்தார்.
கலாவதி | |
---|---|
இயக்கம் | எல். எஸ். ராமச்சந்திரன் |
தயாரிப்பு | டபிள்யூ. எம். எஸ். தம்பு வின்ட்சர் புரொடக்சன்ஸ் |
கதை | திரைக்கதை எல். எஸ். ராமச்சந்திரன் கதை சிதம்பரம் ஏ. எம். நடராஜா டி. கே. சுந்தர வாத்தியார் |
இசை | எம். எஸ். ஞானமணி |
நடிப்பு | டி. எஸ். துரைராஜ் ஈ. ஆர். சகாதேவன் ஸ்ரீராம் எம். கே. மாதவன் டி. ஏ. ராஜலட்சுமி சி. டி. ராஜகாந்தம் கே. எஸ். ராஜம் கே. எஸ். சந்திரா |
வெளியீடு | பெப்ரவரி 23,1951 |
நீளம் | 14916 அடி |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
பாடல்கள்
தொகுஎம். எஸ். ஞானமணி இசையமைத்த பாடல்களை இயற்றியோர்: டி. கே. சுந்தர வாத்தியார், ஏ. எம். நடராஜ கவி, எம். எஸ். சுப்பிரமணியம் ஆகியோர்.[1]
இத்திரைப்படத்தில் இடம்பெற்ற நமஸ்தே என்ற பாடல் 1950 களில் இலங்கை வானொலியின் ஆசிய சேவை தமிழ் ஒலிபரப்பில் தொடக்க இசையாக ஒலிபரப்பப்பட்டு வந்தது.
வரிசை எண் |
பாடல் | பாடகர்/கள் | பாடலாசிரியர் | அளவு (m:ss) |
---|---|---|---|---|
1 | கல்வியைப் போல் ஒரு | கமலா பாய் | டி. கே. சுந்தர வாத்தியார் | |
2 | மானமுண்டு மழை பொழிய | டி. எஸ். துரைராஜ் | ||
3 | நீயில்லாது யார் எனக்கோர் | ஏ. பி. கோமளா | ||
4 | மணிவண்ணா கண்ணா (நாட்டிய நாடகம்) | பழநி பாரதி & எம். எஸ். ஞானமணி | ||
5 | உல்லாசமாக விளையாடலாமே | டி. ஏ. ஜெயலட்சுமி & ஏ. பி. கோமளா | ||
6 | மன்னனுக்கிணையெவரே | |||
7 | எழில் மிகும் என் அழகிலே | சி. டி. ராஜகாந்தம் | ||
8 | விநோதமே சங்கீதம் போல் | கஸ்தூரி, கே. எஸ். லட்சுமி & ஏ. பி. கோமளா | ஏ. எம். நடராஜ கவி | |
9 | விதியால் விளைந்த துன்பமோ | டி. ஏ. ஜெயலட்சுமி & ஏ. பி. கோமளா | ||
10 | சாரதா மாமணி நீயே கதி | டி. ஏ. ஜெயலட்சுமி & ஏ. பி. கோமளா | ||
11 | நமஸ்தே அதி நமஸ்தே | கே. எஸ். ராகம், சந்திரா, ஏ. பி. கோமளா, லட்சுமி |
||
12 | பொன்னான பாரத பூமியில் | மணிகோபால் | எம். எஸ். சுப்பிரமணியம் |
மேற்கோள்கள்
தொகு- ↑ நீலமேகம் கோவிந்தசாமி. திரைக்களஞ்சியம் தொகுதி - 1. மணிவாசகர் பதிப்பகம், சென்னை 108. முதல் பதிப்பு 2014. p. 16-17.
உசாத்துணை
தொகு- ராண்டார் கை (25 மார்ச் 2012). "Kalavathi 1951". தி இந்து. Archived from the original on 2013-09-08. பார்க்கப்பட்ட நாள் 27 ஜனவரி 2017.
{{cite web}}
: Check date values in:|accessdate=
and|date=
(help)