நாப்தலீன் சல்போனேட்டுகள்
ஒரு வகை கரிமச் சேர்மம்
நாப்தலீன் சல்போனேட்டுகள் (Naphthalenesulfonates) என்பவை நாப்தலீன் வேதி வினைக்குழுவைக் கொண்ட சல்போனிக் அமிலத்தின் வழிப்பெறுதிகளைக் குறிக்கும். அமினோநாப்தலீன்சல்போனிக் அமிலங்கள் இவற்றுடன் தொடர்புடைய சேர்மங்கள் ஆகும். அமினோநாப்தலீன்சல்போனேட்டுகள் வணிக முக்கியத்துவம் வாய்ந்தவையாகும். இவை கற்காரைகளில் மீநெகிழியாக்கிகளாகப் பயன்படுத்தப்படுகின்றன. பார்மால்டிகைடுடன் நாப்தலீன்சல்போனேட்டு அல்லது ஆல்க்கைல்நாப்தலீன்சல்போனேட்டுகளை சேர்த்து ஒடுக்க வினையின் மூலம் பெரிய அளவில் உற்பத்தி செய்யப்படுகின்றன.[1][2]
எடுத்துக்காட்டுகள்:
- அமர்நாத்து சாயம்
- அமிடோ கருப்பு
- ஆம்சிடாரங்கு அமிலம்
- காங்கோ சிவப்பு
- இவான்சு நீலம்
- சுரமின்
- டிரைபேன் நீகம்
மேற்கோள்கள்
தொகு- ↑ Booth, Gerald (2005), "Naphthalene Derivatives", Ullmann's Encyclopedia of Industrial Chemistry, Weinheim: Wiley-VCH, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1002/14356007.a17_009
- ↑ Collin, Gerd; Höke, Hartmut; Greim, Helmut (2005), "Naphthalene and Hydronaphthalenes", Ullmann's Encyclopedia of Industrial Chemistry, Weinheim: Wiley-VCH, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1002/14356007.a17_001.pub2