நாமும் குபேரன் ஆகலாம் (நூல்)
நாமும் குபேரன் ஆகலாம் எனும் ஆன்மிக நூல் டெம்மி அளவில் 112 பக்கங்களைக் கொண்ட ஒரு நூல். இது சென்னை, ஸ்ரீ ஆனந்தி பிரசுரம் வழியாக வெளியிடப்பட்டுள்ளது.
நாமும் குபேரன் ஆகலாம் | |
---|---|
நூல் பெயர்: | நாமும் குபேரன் ஆகலாம் |
ஆசிரியர்(கள்): | நெல்லை விவேகநந்தா |
வகை: | ஆன்மிகம் |
துறை: | ஆன்மிகம் |
மொழி: | தமிழ் |
பக்கங்கள்: | 112 |
பதிப்பகர்: | ஸ்ரீ ஆனந்தி பிரசுரம் |
பதிப்பு: | ஏப்ரல், 2012 |
ஆக்க அனுமதி: | ஆசிரியருக்கு |
நூலாசிரியர்
தொகுதிருநெல்வேலி மாவட்டத்திலுள்ள குட்டம் என்கிற கடற்கரையோர கிராமத்தில் பிறந்த ஜெயமுருகானந்தன் நிர்வாகவியலில் முதுகலைப் பட்டமும், இதழியல் மற்றும் மக்கள் தகவல் தொடர்பியலில் முதுகலைப்பட்டம் மற்றும் ஆய்வியல் நிறைஞர் பட்டமும் பெற்றவர். சென்னையில் ஊடகத் துறையில் துணை ஆசிரியராகப் பணியாற்றி வரும் இவர் சுவாமி விவேகானந்தர் மேல் கொண்ட பற்றுதலால் நெல்லை விவேகநந்தா என்கிற புனைப் பெயரில் கட்டுரைகள், தொடர்கள் போன்றவற்றை தமிழில் வெளியாகும் அச்சிதழ்கள் மற்றும் இணைய இதழ்களில் எழுதி வருகிறார்.
உள்ளடக்கம்
தொகுஇந்நூலில் கீழ்காணும் 16 தலைப்புகளின் கீழ் உள்ளடக்கங்கள் இடம் பெற்றிருக்கின்றன.
- இவர்தான் குபேரன்.
- குபேரன் புரிந்த நல்லாட்சி
- குபேரனைக் கண்டு வியந்த பேரழகி
- குபேரன் தம்பியாக இராவணன் பிறப்பு
- லங்காபுரி கை மாறியது
- பார்வதி அழகில் வியந்த குபேரன்
- இடம் மாறிய புஷ்பக விமானம்
- ஸ்ரீ ராமருக்கு உதவிய குபேரன்
- கடவுளுக்கே கடன் தந்த குபேரன்
- குபேரனின் பூலோக வாழ்க்கை
- உலகின் முதல் குபேரன் கோயில்
- செல்வம் அள்ளித்தரும் வழிபாடுகள்
- குபேரன்... சில அரிய தகவல்கள்
- நீங்களும் குபேரன் ஆகலாம்
- 108 குபேர போற்றி
- 108 லட்சுமி போற்றி