நெல்லை விவேகநந்தா
திருநெல்வேலி மாவட்ட எழுத்தாளர்கள்
நெல்லை விவேகநந்தா (பிறப்பு:ஜூலை 5 1982) என்பவர் ஒரு தமிழ் எழுத்தாளர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள குட்டம் எனும் கடற்கரையோரக் கிராமத்தில் பிறந்து, தற்போது சென்னையிலுள்ள தமிழ் நாளிதழ் ஒன்றில் பணிபுரிந்து வருபவர். ஜெயமுருகானந்தன் என்ற இயற்பெயர் கொண்ட இவர் சுவாமி விவேகானந்தர் மீது கொண்ட பற்றுதலால் நெல்லை விவேகநந்தா என்கிற புனைப்பெயரில் கதை, கட்டுரை, கவிதை என தமிழ் அச்சிதழ்கள் மற்றும் இணைய இதழ்களிலும் எழுதி வருகிறார். மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் இதழியல் மற்றும் மக்கள் தகவல் தொடர்பியலில் ஆய்வியல் நிறைஞர் பட்டம் பெற்றிருக்கும் இவர், சிதம்பரம், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் வரலாறு, சுற்றுலா நிர்வாகவியலில் முதுகலைப் பட்டங்களையும் பெற்றுள்ளார்.
நெல்லை விவேகநந்தா | |
---|---|
நெல்லை விவேகநந்தா | |
பிறப்பு | மு.ஜெயமுருகானந்தன் ஜூலை 5, 1982 குட்டம், திருநெல்வேலி மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா. |
இருப்பிடம் | சென்னை |
தேசியம் | இந்தியர் |
கல்வி | இதழியல் மற்றும் மக்கள் தகவல் தொடர்பியலில் ஆய்வியல் நிறைஞர் பட்டம் |
பணி | இதழியல் பணி |
அறியப்படுவது | எழுத்தாளர் |
சமயம் | இந்து |
பெற்றோர் | ச.முத்துநாராயணன் மார்த்தாண்டன், மு.பாப்பாதேவி அம்மாள் |
உறவினர்கள் | சகோதரர்-1 |
வலைத்தளம் | |
www.nellaicharal.blogspot.com |
எழுதியுள்ள நூல்கள்
தொகு- அய்யா வைகுண்டர் வரலாறும் அற்புதங்களும் - வானதி பதிப்பகம்
- பேரழகி கிளியோபாட்ரா - வானதி பதிப்பகம்
- ஆறுமுகனின் அறுபடை வீடுகள் - வானதி பதிப்பகம்
- பரவசப்படுத்தும் பரிகாரத் திருத்தலங்கள் - கௌதம் பதிப்பகம் (நவம்பர், 2011)
- நாமும் குபேரன் ஆகலாம் - ஸ்ரீ ஆனந்தி பிரசுரம் (ஏப்ரல் 2012)
- இந்தியாவின் விடிவெள்ளி சுவாமி விவேகானந்தர் - வானதி பதிப்பகம் (சூன் 2012)
- ஐ - விகடன் பிரசுரம்
வெளி இணைப்புகள்
தொகு- நெல்லைச்சாரல் (நெல்லை விவேகநந்தாவின் தமிழ் வலைப்பூ)