அய்யா வைகுண்டர் வரலாறும் அற்புதங்களும் (நூல்)

அய்யா வைகுண்டர் வரலாறும் அற்புதங்களும் அய்யா வைகுண்டர் பற்றி நெல்லை விவேகநந்தா எழுதிய 232 பக்க வரலாற்று நூல். இது சென்னை, வானதி பதிப்பகத்தால் வெளியிடப்பட்டுள்ளது.

அய்யா வைகுண்டர்
வரலாறும் அற்புதங்களும்
நூல் பெயர்:அய்யா வைகுண்டர்
வரலாறும் அற்புதங்களும்
ஆசிரியர்(கள்):நெல்லை விவேகநந்தா
வகை:வரலாறு
துறை:ஆன்மிக வரலாறு
இடம்:வானதி பதிப்பகம்,
23, தீன தயாளு தெரு,
தி. நகர்,
சென்னை - 600 017.
மொழி:தமிழ்
பக்கங்கள்:232
பதிப்பகர்:வானதி பதிப்பகம்
பதிப்பு:டிசம்பர், 2010
ஆக்க அனுமதி:ஆசிரியருக்கு

நூலாசிரியர்

தொகு

திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள குட்டம் என்கிற கடற்கரையோர கிராமத்தில் பிறந்த ஜெயமுருகானந்தன் நிர்வாகவியலில் முதுகலைப் பட்டமும், இதழியல் மற்றும் மக்கள் தகவல் தொடர்பியலில் முதுகலைப்பட்டம் மற்றும் ஆய்வியல் நிறைஞர் பட்டமும் பெற்றவர். சென்னையில் ஊடகத் துறையில் துணை ஆசிரியராகப் பணியாற்றி வரும் இவர் சுவாமி விவேகானந்தர் மேல் கொண்ட பற்றுதலால் நெல்லை விவேகநந்தா என்கிற புனைப் பெயரில் கட்டுரைகள், தொடர்கள் போன்றவற்றை தமிழில் வெளியாகும் அச்சிதழ்கள் மற்றும் இணைய இதழ்களில் எழுதி வருகிறார்.

வாழ்த்துரை

தொகு

தூத்துக்குடி மக்களவைத் தொகுதியின் உறுப்பினராக இருக்கும் எஸ். ஆர். ஜெயதுரை இந்நூலிற்கு வாழ்த்துரை வழங்கியிருக்கிறார்.

அணிந்துரை

தொகு

சாமித்தோப்பு அய்யா வைகுண்டர் தலைமைப் பதியின் தர்மகர்த்தா மற்றும் அய்யா வைகுண்டர் நற்பணி சங்கத்தின் தலைவராகவும் உள்ள எஸ்.பால்பையன் இந்நூலிற்கு அணிந்துரை வழங்கியிருக்கிறார்.

பாராட்டுரை

தொகு

சென்னை, மணலிபுதுநகர் அய்யா வைகுண்டர் தருமபதியின் துணைத் தலைவர் எஸ். தேவதாஸ் பாராட்டுரை வழங்கியிருக்கிறார்.

விமர்சனப் பார்வை

தொகு

முத்துக்கமலம் இணைய இதழின் ஆசிரியர் தேனி எம். சுப்பிரமணி இந்நூல் குறித்த விமர்சனப் பார்வையை அளித்திருக்கிறார்.

மதிப்புரை

தொகு

சென்னையைச் சேர்ந்த ஆன்மிக எழுத்தாளர் “தமிழ்மாமணி” பனையபுரம் அதியமான் மதிப்புரை தந்திருக்கிறார்.

பொருளடக்கம்

தொகு

இந்த நூல் வரலாறு, அய்யா நிகழ்த்திய அற்புதங்கள், வழிபாட்டுப் பாடல்கள் எனும் மூன்று பகுதிகளாக அமைக்கப்பட்டுள்ளது.

== # தலைப்பு

  1. தலைப்பு எழுத்துக்கள் ==

வரலாறு

தொகு

இப்பகுதியில்

  1. நாஞ்சில் நாடு, திருவாங்கூர் சமஸ்தானம் - ஒரு பார்வை
  2. விதியை மாற்ற அவதரித்த பகலவன்
  3. கொடுமைகள் - ஈன துரோகங்கள்
  4. சிந்தனையைத் தூண்டிய இளமைப் பருவம்
  5. ஒட்டிக் கொண்ட தீரா நோய்
  6. கடலில் நடந்து வந்தார்.
  7. சம்பூர்ணதேவன் கதை
  8. கடலுக்குள் நடந்தது என்ன?
  9. தவமும், சாட்டி நீட்டோலை உதயமும்
  10. ஆதிக்க வெறிக்கு எதிராகக் கிளர்ந்து எழல்
  11. அய்யாவைத் தேடி வந்த சூழ்ச்சி
  12. அய்யாவிடம் அமிர்தமான விஷம்
  13. கைது செய்ய உத்தரவு
  14. அய்யா கைது, பக்தர்கள் கதறலும்
  15. தெய்வத்திற்கே சோதனை
  16. மீண்டும் தவம்
  17. அய்யாவும், அகிலத்திரட்டு அம்மானையும்
  18. அய்யாவும் ஆன்மிகமும்
  19. தோள்சீலை போராட்டம் - ஒரு பார்வை
  20. தோள்சீலை போராட்டமும் சான்றோரும்

என்கிற 20 உள் தலைப்புகளில் அய்யா வைகுண்டர் வரலாறு முழுமையாகத் தரப்பட்டுள்ளன.

அய்யா நிகழ்த்திய அற்புதங்கள்

தொகு

இப்பகுதியில்

  1. நிறைவேறிய ஒரு கன்னிப்பெண் ஆசை
  2. பாம்பாக மாறிய பாம்படம்
  3. உயிர் காத்த சாமித்தோப்பு திருமண்
  4. ஊமை பேசிய அதிசயம்
  5. 46 வயதில் குழந்தை பாக்கியம்
  6. அய்யாவை இகழ்ந்ததால் வந்த சோதனை
  7. ஐயம் நீங்கிய ஐவர்
  8. பக்தி விலக்கிய சேறு
  9. பேய் உண்டா? இல்லையா?
  10. ஜாதியை வென்ற அய்யா வாக்கு
  11. மெய்சிலிர்த்த கிறித்தவர்!
  12. நகை கொண்டு வந்த பருந்து
  13. ஆணவத்தால் வந்த சோதனை
  14. அய்யா கொடுத்த புதையல்
  15. வறுமை - நோய் தீர்த்த தீர்த்தம்

எனும் தலைப்புகளில் அய்யாவின் அற்புதங்கள் சில தரப்பட்டுள்ளன.

வழிபாட்டுப் பாடல்கள்

தொகு

இப்பகுதியில்

  1. உச்சிப்படிப்பு
  2. உகப்படிப்பு
  3. வாழப்படிப்பு
  4. கல்யாண வாழ்த்து
  5. அய்யா வைகுண்டரின் பொன்மொழிகள்

எனும் தலைப்புகளில் அய்யா வழியைப் பின்பற்றுபவர்கள் வழிபாட்டுக்குப் பயன்படுத்த வேண்டிய பாடல்களுடன் அய்யாவின் பொன்மொழிகள் சிலவும் தொகுத்துத் தரப்பட்டுள்ளன.

வெளி இணைப்புகள்

தொகு