நாரத ஸ்மிருதி
நாரத ஸ்மிருதி (Nāradasmṛti) பண்டைய இந்து சமயத்தின் 22 தர்ம சாத்திர நூல்களில் ஒன்றாகும்.[1] இந்த தர்மசாத்திர நூல் முற்றிலும் நடைமுறைச் சட்டங்கள் மற்றும முறையியல் சட்டங்களை மட்டும் எடுத்துரைக்கிறது.[1] நன்நடத்தைகள் மற்றும் தவம் குறித்து இந்நூல் கூறாததால், இதனை நீதித்துறை உரைக்கு சமமாக கருதப்படுகிறது. [2] இந்நூலின் கருத்துக்கள், இந்தியத் துணைக் கண்டம் மற்றும் தென்கிழக்கு ஆசியாவின் ஆட்சியாளர்கள் மற்றும் அவர்களின் அரசாங்கங்களால் மிகவும் மதிப்புமிக்கதாக கருதப்பட்டதுடன், இது நாட்டை நியாயமாக ஆளும் அவர்களின் அறத்தை நிறைவேற்றுவதற்கு உதவியாக இருந்தது.[2]தற்போது நாரத ஸ்மிருதியின் மூன்று வகையான பதிப்புகள் காணப்படுகிறது. அவைகளை நாரத ஸ்மிருதி அல்லது நாரதிய தர்மசாத்திரம் என்பர்.[3] இந்நூல் 3 அத்தியாயங்களையும், 18 சட்டத் தலைப்புகளையும், 879 சுலோகங்களைக் கொண்டுள்ளது.[4]
இந்த தர்மசாத்திரத்தை நாரத முனிவர் தொகுத்த காரணத்தால் இதனை நாரத ஸ்மிருதி எனப்பெயராயிற்று. [5]இந்நூலின் காலம் கிபி 100 மற்றும் கிபி 400க்கும் இடைப்பட்ட காலம் என கருதப்படுகிறது.[6]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 Prakashan, Sundeep (2007). "The Naradasmrti By Richard W. Lariviere (tr.)". sundeepbooks.com. sundeepbooks.com. Archived from the original on 16 ஜூலை 2011. பார்க்கப்பட்ட நாள் 11 December 2008.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ 2.0 2.1 Lariviere 1989: ix
- ↑ Max Muller (1907), Introduction to Narada The Sacred Books of the East, Vol 33, London
- ↑ Lariviere 1989: xiv
- ↑ Lariviere 1989: xv–xvi
- ↑ See Lariviere 1989: xix–xxiii or Olivelle “Literary History”: 24 for more information on the details of this debate.