நாராயண் சதோபா கஜ்ரோல்கர்

நாராயண் சடோபா கஜ்ரோல்கர் (Narayan Sadoba Kajrolkar) இவர் ஓர் இந்திய சுதந்திர ஆர்வலரும், காந்தியவாதியும் மற்றும் சமூக சேவகரும் ஆவார். பொதுத் தேர்தலில் பி.ஆர்.அம்பேத்கரை தோற்கடித்தவர் என்று நன்கு அறியப்பட்டவர். [1] பிறப்பால் ஒரு மராத்தியான இவர் அம்பேத்கரின் தனிப்பட்ட உதவியாளராக பணியாற்றினார். [2] 1952இல் மும்பை வட மத்திய தொகுதியில் இருந்து நடந்த முதல் மக்களவைத் தேர்தலில் அம்பேத்கருக்கு எதிராக போட்டியிட்டு 15000க்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். 1962 தேர்தலில் இரண்டாவது முறையாக அதே தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். [3]

நாராயண் சதோபா கஜ்ரோல்கர்
பிறப்புமகாராட்டிரம், இந்தியா
பணிசமூக சேவகர்
இந்திய சுதந்திர ஆர்வலர்
விருதுகள்பத்ம பூசண்

மகர் சமூகத்தில் பிறந்த நாராயண், 1953ஆம் ஆண்டின் முதல் பிற்படுத்தப்பட்ட வகுப்புகள் ஆணையத்தில் உறுப்பினராக இருந்தார். இவர் பட்டியல் சாதி சமூகங்களை பிரதிநிதித்துவப்படுத்தினார். [4][5] பின்தங்கிய வர்க்க மக்களின் அமைப்பான தலித் வர்க சங்கத்தின் உறுப்பினராகவும், குழுவின் செயலாளராகவும் பணியாற்றும்போது 1953 ஏப்ரல் 5 ஆம் தேதி ஜெகசீவன்ராமின் பிறந்த நாளைக் கொண்டாட முடிவு செய்தார். [6] சமுதாயத்திற்கு இவர் செய்த பங்களிப்பிற்காக இந்திய அரசு 1970 ஆம் ஆண்டில் இந்தியாவின் மூன்றாவது மிக உயர்ந்த குடிமை கௌரவாமான பத்ம பூசண் விருதினை இவருக்கு வழங்கியது. [7]

1983இல் இவர் இறந்தார்.[8]

மேலும் காண்க

தொகு

குறிப்புகள்

தொகு
  1. "The first Lok Sabha elections (1951–52)". Indian Express. 27 March 2014. பார்க்கப்பட்ட நாள் 26 March 2016.
  2. "B. R. Ambedkar". Times of Maharashtra. 14 November 2014. Archived from the original on 5 ஏப்ரல் 2016. பார்க்கப்பட்ட நாள் 26 March 2016. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  3. "Members of the Third Lok Sabha". Empowering India. 2016. Archived from the original on 3 அக்டோபர் 2021. பார்க்கப்பட்ட நாள் 26 March 2016.
  4. Christophe Jaffrelot (2003). India's Silent Revolution: The Rise of the Lower Castes in North India. C. Hurst & Co. Publishers. p. 505. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781850656708.
  5. Sankar Ghose (1993). Jawaharlal Nehru, a Biography. Allied Publishers. p. 353. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788170233695.
  6. Indrani Jagjivan Ram (2010). Milestones: A Memoir. Penguin Books India. p. 297. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780670081875.
  7. "Padma Awards" (PDF). Ministry of Home Affairs, Government of India. 2016. Archived from the original (PDF) on 15 நவம்பர் 2014. பார்க்கப்பட்ட நாள் 3 January 2016.
  8. Lok Sabha, India. Parliament (2003). "Indian Parliamentary Companion: Who's who of Members of Lok Sabha".