நாராயண் சிங் பதி

இந்திய எழுத்தாளர்

முனைவர் நாராயண் சிங் பதி (Dr.Narayan Singh Bhati) இந்தியாவின் இராசத்தான் மாநிலத்தைச் சேர்ந்த ஓர் எழுத்தாளர் ஆவார். 1930 ஆம் ஆண்டில் இவர் பிறந்தார். இராசத்தானிய மொழியில் ஒரு முக்கிய எழுத்தாளராக கருதப்படுகிறார். கிர்தார் கோபால் சிங் பதியின் தந்தையாகவும் செய்வந்த் சிங் பதியின் தாத்தாவாகவும் இவர் அறியப்படுகிறார்.

பணிகள்

தொகு

1955 ஆம் ஆண்டு முதல் 1993 ஆம் ஆண்டு வரை சோபாசனி சோத்பூரின் சோபாசனியில் உள்ள இராசத்தானி ஆராய்ச்சி நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் இயக்குநராக இருந்தார். பழைய இராசத்தானிய இலக்கியங்களைப் பாதுகாப்பதில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டிருந்தார்.[1] 1994 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 18 ஆம் தேதியன்று நாராயண் சிங் பதி காலமானார்.

மீரான், சஞ்சு, பரம்வீர், ஒலுன், சீவன் தன், இராசத்தான் மற்றும் மால்வாவின் சமூக-பொருளாதார வரலாற்று ஆதாரங்கள் (1700-900AD) ஆகியவை இவரது படைப்புகளில் அடங்கும்.

விருதுகள்

தொகு

1981 ஆம் ஆண்டு இவரது பர்சன் ரா தேகோடா துங்கர் லங்கியான் [2] என்ற கவிதை நூலுக்கு தில்லி சாகித்ய அகாடமி இவருக்கு விருது வழங்கியது. இராசத்தான் சாகித்ய அகாடமியின் பிருத்விராச்சு பரிசும் இவருக்கு வழங்கப்பட்டுள்ளது.[3] 2010 ஆம் ஆண்டு நாராயண் சிங் பதி பத்மசிறீ விருதைப் பெற்றார் [4] .

மேற்கோள்கள்

தொகு
  1. "Rajasthani Shodh Sansthan". Archived from the original on 3 October 2008. பார்க்கப்பட்ட நாள் 18 July 2009.
  2. RAJASTHANI (Since 1974) பரணிடப்பட்டது 2009-08-28 at the வந்தவழி இயந்திரம்
  3. K. M. George (ed.). "N.S. Bhati". Modern Indian Literature-An Anthology. N. p. 1147. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-7201-324-8.
  4. "Padma Awards" (PDF). Ministry of Home Affairs, Government of India. 2015. Archived from the original (PDF) on 15 அக்டோபர் 2015. பார்க்கப்பட்ட நாள் 21 July 2015.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நாராயண்_சிங்_பதி&oldid=3507189" இலிருந்து மீள்விக்கப்பட்டது