நாரா மக்கள்

நாரா மக்கள் கிழக்கு சூடான் பழங்குடி மக்கள் ஆவர். இவர்கள் எரித்திரியா நாட்டில் வாழ்கின்றனர். நாரா இனக்குழு மக்கள் நான்கு வகை குழுக்களாக வகைப்படுத்தப்படுகின்றனர். இவர்கள் பழமைமிக்க ஆன்மாவாதம் சார்ந்த நம்பிக்கை உடையவர்கள் ஆனால் தற்போது இஸ்லாம் மதத்தை பின்பற்றுகின்றனர். இவர்கள் தற்சார்பு வாழ்வாதார விவசாய வேலைகளை செய்கின்றனர். நாரா மக்கள் நிலோ-சகாரா மொழியான நாரா மொழியை பேசுகின்றனர்.

நாரா
மொத்த மக்கள்தொகை
108,000[1]
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள்
எரித்திரியா
மொழி(கள்)
நாரா
சமயங்கள்
பெரும்பாலும் இஸ்லாம்,
கிருத்துவம், ஆபிரிக்க பழங்குடி மதம்
தொடர்புள்ள இனக்குழுக்கள்
நிலோடிக் மக்கள்

மக்கள் தொகு

எரித்திரியா அரசாங்கம் நாரா மக்களே நிலோ-சகாரா மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த இனக்குழு மக்களில் முதன்மையான குடியிருப்புகளை அமைத்தவர்கள் என அறிவித்துள்ளது. இவர்கள் மேல் நைல் பகுதி மற்றும் காங்கோவில் இருந்து வந்ததாக நம்பப்படுகிறது.[2]

தற்போது நாரா மக்கள் சுமார் 1,08,000 பேர் உள்ளனர்.[1] எரித்திரியா நாட்டின் மக்கள் தொகையில் 1.5% மக்கள் இவர்களாவர்.[3] இவர்கள் பெரும்பாலும் விவசாயிகள் ஆவர். மேலும் சூடான் நாட்டு எல்லை பகுதியில் வாழ்கின்றனர்.[4]

நாரா மக்கள் நான்கு துணை இனக்குழுக்களாக உள்ளனர் அவர்கள் ஹைகர், மொகார்ப், கொய்டா மற்றும் சன்டோரா ஆவர்.[1] இவர்கள் ஆரம்பத்தில் ஆன்மாவாதம் சார்ந்த நம்பிக்கை உடையவர்கள்.[5] பின்னர் எகிப்து ஆளுகை காலத்தில் இவர்கள் இஸ்லாம் மதத்தை தழுவினர்.[3] சிலர் கிருத்துவம் மதத்தை பின்பற்றுகின்றனர்.[5][6]

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 1.2 "Nara". Ethnologue. பார்க்கப்பட்ட நாள் 20 July 2016.
  2. "The people of Eritrea". Ministry of Information, Eritrea. Archived from the original on 2 மே 2019. பார்க்கப்பட்ட நாள் 20 July 2016.
  3. 3.0 3.1 Mussie Tesfagiorgis G. (2010). Eritrea. ABC-CLIO. பக். 177. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-59884-231-9. https://books.google.com/books?id=7pReFaFC3fQC&pg=PA177. 
  4. Killion, Tom (1998). Historical Dictionary of Eritrea. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-8108-3437-8. 
  5. 5.0 5.1 "Eritrea: Nara People's History". பார்க்கப்பட்ட நாள் 2010-02-09.
  6. Cavalli-Sforza, L. Luca; Menozzi, Paolo; and Piazza Alberto The History and Geography of Human Genes Princeton, New Jersey: 1994 Princeton University Press "Ethiopians, Some of Their Neighbors, and North Africans" Page 173
"https://ta.wikipedia.org/w/index.php?title=நாரா_மக்கள்&oldid=3560552" இலிருந்து மீள்விக்கப்பட்டது