நாரீனிச்சிதைவு

நாரீனிச்சிதைவு (Fibrinolysis) என்னும் செயற்பாடு குருதி உறைகட்டிகள் வளர்ந்து சிக்கல்களை உருவாக்காமல் தடுக்கிறது[1]. இவை, முதன்மையான நாரீனிச்சிதைவு, இரண்டாம் நிலை நாரீனிச்சிதைவு என இரண்டு வகைகளாக உள்ளன. முதன்மை வகையானது சாதாரணமான உடல் செயற்பாடுகளில் ஒன்றாகும். ஆனால், இரண்டாம் வகையானது மருந்துகள், மருத்துவ சீர்குலைவுகள் அல்லது பிற காரணங்களினால் குருதி உறைகட்டிகள் சிதைவதைக் குறிக்கின்றது[1].

நாரீனிச்சிதைவு. நீல அம்புக்குறிகள் தூண்டுதலையும், சிவப்பு அம்புக்குறிகள் தடுப்பதையும் குறிக்கின்றன.

நாரீனிச்சிதைவு செயற்பாட்டில், குருதி உறைதலினால் ஏற்படும் நாரீணி உறைகட்டிகள் சிதைவடைகின்றன[2]. இதன் முதன்மை நொதியமான பிளாசுமின் நாரீனி வலைப்பின்னல்களை வெவ்வேறு இடங்களில் வெட்டி சுற்றோட்ட துண்டுகளை உருவாக்குகிறது. இத்துண்டுகள் பிற புரதச் சிதைப்பிகளால் முற்றாகச் சிதைக்கப்பட்டு சிறுநீரங்கங்கள், கல்லீரல் மூலமாக வெளியேற்றப்படுகின்றன.

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 Dugdale, David et al. "Primary or secondary fibrinolysis", Medline Plus.  Retrieved 7 August 2011.
  2. Cesarman-Maus G, Hajjar KA (May 2005). "Molecular mechanisms of fibrinolysis". British journal of haematology 129 (3): 307–21. doi:10.1111/j.1365-2141.2005.05444.x. பப்மெட்:15842654. https://archive.org/details/sim_british-journal-of-haematology_2005-05_129_3/page/307. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=நாரீனிச்சிதைவு&oldid=3536976" இலிருந்து மீள்விக்கப்பட்டது