நார்ம் ஓ'நீல்

ஆத்திரேலியத் துடுப்பாட்ட வீரர்

நார்மன் கிளிஃபோர்ட் லூயிஸ் ஓ நீல் OAM (Norman Clifford Louis O'Neill 19 பிப்ரவரி 1937 - 3 மார்ச் 2008) நியூ சவுத் வேல்ஸ் மற்றும் ஆஸ்திரேலியாவுக்காக விளையாடிய ஒரு முன்னாள் துடுப்பாட்ட வீரர் ஆவார். 1958 இன் பிற்பகுதியில் 21 வயதில் தேர்வுத் துடுப்பாட்டப்போட்டியில் விளையாடுவதற்கு முன்பு, ஒரு வலது கை மட்டையாளரான , ஓ'நீல் 18 வயதில் தனது மாநில அணிக்காக விளையாடினார். தனது தொழில் வாழ்க்கையின் ஆரம்பத்தில், ஓ'நீல் ஆஸ்திரேலிய அணியின் முன்னணி மட்டையாளர்களில் ஒருவராக இருந்தார். 42 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடி 2,779 ஓட்டங்களை எடுத்துள்ள இவரின் அதிகபட்ச ஓட்டம் 181 ஆகும்.இவர் 3 தேர்வுத் துடுப்பாட்ட நூறுகளை அடித்துள்ளார். மேலும் இவர் பந்துவீச்சில் 17 இழப்புகளையும் எடுத்துள்ளார். 1959-60 ஆம் ஆண்டு இந்திய துணைக் கண்டத்தின் சுற்றுப்பயணத்தில் அதிக ஒட்டங்கள் எடுத்த வீரர்கள் வரிசையில் இவர் முதலிடம் பிடித்தார். 1960 ஆம் ஆண்டில் இவர் மேற்கிந்தியத் தீவுகள் துடுப்பாட்ட அணிக்கு எதிரான தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் 181 ஓட்டங்கள் எடுத்தார். அந்தத் தொடரில் இவரின் மட்டையாட்ட சராசரி 58.25 ஆக இருந்தது. இந்தத் தொடரின் மூலம் இவர் பரவலாக அறியப்பட்டார்.இவர் 188 முதல் தரத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடி 13,859 ஓட்டங்களை எடுத்தார். இதில் அதிகபட்சமாக 284 ஓட்டங்களை எடுத்தார். பின் பந்துவீச்சில் 99 இழப்புகளை எடுத்தார்.இவர் தேர்வுத் துடுப்பாட்டம் மற்றும் ஒருநாள் போட்டிகளில் விளையாடினார்.

ஆரம்ப ஆண்டுகளில் தொகு

ஒரு கட்டிடக் கலைஞரின் மகனான, ஓ'நீல் நியூ சவுத் வேல்ஸின் கார்ல்டனில் பிறந்தார்.அவரது தாய்மாமன் ரான் காம்பியன் சிட்னி கிரேடு கிரிக்கெட்டில் உள்ள க்ளெப் சங்கத்தில் விளையாடினார். ஓ'நீல் தனது மாமாவுடன் ஏழு வயதிலிருந்து துடுப்பாட்டம் விளையாடச் சென்றார், ஒவ்வொரு அமர்வின் முடிவிலும் மட்டையாட்டத்திற்கான பயிற்சி அவருக்கு வழங்கப்பட்டது. பெக்ஸ்லி ஆரம்ப பள்ளியில், துடுப்பாட்டம் இல்லாததால் இவருக்கு துடுப்பாட்டம் விளையாட வாய்ப்பு இல்லாமல் போனது. கோகரா இடைநிலை உயர்நிலைப் பள்ளிக்குச் சென்று, ஓ'நீல் ஒரு ஆசிரியரின் அனுமதி இன்றி துடுப்பாட்டம் விளையாடினார். அந்த ஆசிரியர் இவரை தடகளத்தினை தேர்வு செய்யுமாறு கூறினார்.

அவரது மாமாவின் வழிகாட்டுதலின் கீழ், ஓ'நீல் சிட்னி கிரேடு போட்டியில் செயின்ட் ஜார்ஜ் துடுப்பாட்ட சங்கத்தில் சேர்ந்தார். சில காலத்திற்குப் பிறகு 16ஆம் வயதில் முதல் லெவன் அணியில் விளையாடினார். அவரது திறனை உணர்ந்த கிளப்பின் தேர்வாளர்கள், படிவத்தைப் பொருட்படுத்தாமல், அவர் முழு ஆண்டிலும் விளையாடுவார் என்று அவருக்குத் தெரிவித்தனர்.இவர் 7 ஆட்டப் பகுதிகளில் 108 ஓட்டங்கள் எடுத்தார். அடுத்த ஆண்டில் 15 போட்டியில் 12 முரை இவர் எல். பி. டபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார்.

தேர்வுத் துடுப்பாட்டம் தொகு

மேற்கு ஆஸ்திரேலியா ஒருங்கிணைந்த லெவன் அணியில் 1958–59 ஆண்டின் தொடக்கத்தில் பெர்த்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இங்கிலாந்துத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான போட்டியில் இவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். [1] [2] போட்டிக்கு முன்பு, ஓ'நீல் ஊடகங்களால் விமர்சிக்கப்பட்டார். [3]அந்தப் போட்டியில் இவர் 67 ஓட்டங்களை விட்டுக் கொடுத்து2 இழப்புகளைக் கைப்பற்றினார்.

சான்றுகள் தொகு

  1. "Wisden 1962:Norm O'Neill". Wisden. 1962. பார்க்கப்பட்ட நாள் 5 June 2007.
  2. "Player Oracle NCL O'Neill". CricketArchive. பார்க்கப்பட்ட நாள் 14 May 2009.
  3. Haigh, p. 118.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நார்ம்_ஓ%27நீல்&oldid=2894980" இலிருந்து மீள்விக்கப்பட்டது