நாற்கவி
நாற்கவி என்பது பாடப்படும் முறைமையால் நான்கு வகைப்படும் கவிதைகள். பகழிக்கூத்தர் இவற்றை முருகன் தனக்குத் தந்ததாகக் குறிப்பிடுகிறார். இந்த நான்கு வகையிலும் பாடவல்ல கவிஞரை இவர் ‘பெரும்பனுவர்’ என்று குறிப்பிடுகிறார். பனுவல் என்னும் சொல் நூலைக் குறிக்கும். [1]
- ஆசுகவி என்பது மற்றவர் சொல்லும் ஆசுகளை வைத்துக்கொண்டு உடனே பாடும் கவிதை. 15-ஆம் நூற்றாண்டில் காளமேகப்புலவர் இவ்வாறு பாடும் திறமை பெற்றிருந்தார்.
- மதுரகவி என்பது காதுக்கும் கருத்துக்கும் இனிமையாகப் பாடப்படும் கவிதை. 15-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த அதிமதுர கவிராயர் இந்தக் கவிதை பாடுவதில் மிகுந்த தேர்ச்சி பெற்றிருந்தார்.
- சித்திரக் கவி என்பது ஓவியத்துக்குள் உள்ளடக்கிப் பாடும் கவிதை.
- வித்தார கவி என்பது மெய்யைப் பொய்யாக்கியும், பொய்யை மெய்யாக்கியும் பாடும் பாடல். [2]
நம்பியகப்பொருள் என்னும் இலக்கணநூல் செய்த நாற்கவிராச நம்பி, நாலுகவிப் பெருமாள் எனப் போற்றப்படும் திருமங்கை ஆழ்வார் ஆகியோர் நான்கு வகையான கவிகள் பாடுவதில் வல்லவர்கள்.
ஆசுகவி பாடவல்ல புலவர்கள் வெளியே பொதுப்பணி நிமித்தமாகச் செல்லும்போது திண்டிமம் என்னும் பறையை முழக்கிக்கொண்டு செல்லும் உரிமை பெற்றிருந்தார்கள்.
கருவிநூல்
தொகு- மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினைந்தாம் நூற்றாண்டு, பதிப்பு 2005
அடிக்குறிப்பு
தொகு- ↑
ஆயும் பெரும்பனுவர் ஆசுகவி மதுரகவி
- அரிய சித்திர கவிதை வித்-
- அடியவர்க்கு அருள் குருபரன் (திருச்செந்தூர் முருகன் பிள்ளைத்தமிழ்)
- ↑ திருக்குறளில் உள்ள
- தேவர் அனையர் கயவர் அவருந்தாம்
- மேவன செய்தொழுக லான்.