நாற்குளோரோ பெர்ரேட்டு
நாற்குளோரோ பெர்ரேட்டு (Tetrachloroferrate) என்பது FeCl−4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டைக் கொண்டு ஒரு பல்லணு அயனியாகும். பெரிக் குளோரைடு (FeCl3) பல்வேறு குளோரைடு உப்புகளில் இருந்து குளோரைடு அயனியை எடுக்கும்போது மெட்டாலேட்டு உருவாகும்.[1] இதன் விளைவாக உருவாகும் நாற்குளோரோபெர்ரேட்டு உப்புகள் பொதுவாக முனைவற்ற கரைப்பான்களில் கரைகின்றன. மையத்தில் இரும்பு(III) உடன் நாற்குளோரோ பெர்ரேட்டு நான்முகி வடிவவியலைக் கொண்டுள்ளது.[2] பெர்குளோரேட்டுடன் ஒப்பிடக்கூடிய ஒருங்கிணைக்காத அயனியாக இது பயனுள்ளதாக இருக்கும்.[3] பல கரிம அம்மோனியம் உப்புகள் அவற்றின் புதிய பண்புகளுக்காக ஆய்வு செய்யப்பட்டுள்ளன.[4] 1-பியூட்டைல்-3-மெத்திலிமிடாசோலியம் நாற்குளோரோபெர்ரேட்டு காந்தத்தன்மை கொண்ட பல அயனி திரவங்களில் ஒன்றாகும். மும்மெத்தில் குளோரோமெத்திலமோனியம் நாற்குளோரோபெர்ரேட்டு ஒரு நெகிழிப் படிகமாகும். இது பல்வேறு வகையான உள்ளீடுகளுக்கு பதிலளிக்கும் வகையில் ஒரு மூலக்கூற்று நிலைமாற்றியாகச் செயல்படும். [5]
இனங்காட்டிகள் | |
---|---|
ChEBI | CHEBI:30811 |
ChemSpider | 25557 |
Gmelin Reference
|
26231 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 27463 |
| |
பண்புகள் | |
Cl4Fe−1 | |
வாய்ப்பாட்டு எடை | 197.65 g·mol−1 |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
மேற்கோள்கள்
தொகு- ↑ Cook, Charles M. Jr.; Dunn, Wendell E. Jr. (1961). "The Reaction of Ferric Chloride with Sodium and Potassium Chlorides". J. Phys. Chem. 65 (9): 1505–1511. doi:10.1021/j100905a008.
- ↑ Lutz, Martin; Huang, Yuxing; Moret, Marc-Etienne; Klein Gebbink, Robertus J. M. (2014). "Phase Transitions and Twinned Low-Temperature Structures of Tetraethylammonium Tetrachloridoferrate(III)". Acta Crystallographica Section C 70 (5): 470–476. doi:10.1107/S2053229614007955. பப்மெட்:24816016.
- ↑ Golding, Raymund M.; Harris, CM; Jessop, KJ; Tennant, William C. (1972). "Oxidation of dithiocarbamato metal complexes". Australian Journal of Chemistry 25 (12): 2567–2576. doi:10.1071/CH9722567. https://archive.org/details/sim_australian-journal-of-chemistry_1972-12_25_12/page/2567.
- ↑ Hayashi, Satoshi; Saha, Satyen; Hamaguchi, Hiro-o (2006). "A new class of magnetic fluids: bmim[FeCl4] and nbmim[FeCl4] ionic liquids". IEEE Transactions on Magnetics 42 (1): 12–14. doi:10.1109/TMAG.2005.854875. Bibcode: 2006ITM....42...12H.
- ↑ Li, Dong; Zhao, Xue-Mei; Zhao, Hai-Xia; Long, La-Sheng; Zheng, Lan-Sun (2019). "Coexistence of Magnetic-Optic-Electric Triple Switching and Thermal Energy Storage in a Multifunctional Plastic Crystal of Trimethylchloromethyl Ammonium Tetrachloroferrate(III)". Inorg. Chem. 58 (1): 655–662. doi:10.1021/acs.inorgchem.8b02835. பப்மெட்:30576116.
வெளி இணைப்புகள்
தொகு- பொதுவகத்தில் Tetrachloroferrates தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.