நாற்பெருங்குழு
சங்க இலக்கியங்களில் மோகூர் அரசன் பழையன் குறிப்பிடப்படுகிறான். அவன் அவையில் நான்கு மொழிகளை அறிந்த கோசர்கள் சிறப்புற்றிருந்தனர். அதுபோலத் தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன் அவையில் நாற்பெருங்குழு இருந்தது.
('பழையன் மோகூர் அவையகம் விளங்க, நான்மொழிக் கோசர் தோன்றி அன்ன, தாம் மேந் தோன்றிய நாற்பெருங்குழு' - மாங்குடி மருதனார் - மதுரைக்காஞ்சி - அடி 507-510)