நாளந்தா அனைத்துலக துடுப்பாட்ட விளையாட்டரங்கம்
நாளந்தா அனைத்துலக துடுப்பாட்ட விளையாட்டரங்கம் (Nalanda International Cricket Stadium) இந்தியாவின் பீகார் மாநிலத்தில் நாளந்தா மாவட்டத்தில் அமைப்பதற்கு முன்மொழியப்பட்டுள்ள ஒரு துடுப்பாட்ட விளையாட்டரங்கமாகும்[1][2]. அரங்கம் கட்டி முடிக்கப்பட்டதும் இது பீகார் துடுப்பாட்ட அணியின் சொந்த அரங்கமாக அமையும்.
அரங்கத் தகவல் | |||
---|---|---|---|
அமைவிடம் | ராச்கிர், நாளந்தா, பீகார் | ||
உருவாக்கம் | 2022 | ||
இருக்கைகள் | 1,20,000 | ||
அணித் தகவல் | |||
| |||
31 ஆகத்து 2015 இல் உள்ள தரவு |
பீகார் முதலமைச்சர் நிதீசு குமார் நாளந்தா மாவட்டத்தில் ராச்கிர் என்ற நகரத்தில் அனைத்துலக தரத்தில் ஒரு துடுப்பாட்ட அரங்கம் கட்டப்படும் என்று 2013 ஆம் ஆண்டில் அறிவித்தார். ஆனால் 2011 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 12 ஆம் தேதியிலேயே நிதீசு குமார் ராசகிரக சர்வதேச துடுப்பாட்ட மைதானத்திற்கு அடிக்கல் நாட்டினார்.
நாளந்தா மைதானம் மொயின்-உல்-அக் மைதானத்திற்கு அடுத்து அனைத்துலக அளவு போட்டிகளை நடத்தக்கூடிய இரண்டாவது மைதானமாக திகழ்கிறது. மேலும் இது ஆத்திரேலியாவின் சிட்னி துடுப்பாட்ட மைதானத்தின் வடிவமைப்பு போன்றதாகும். நாளந்தா மைதானம் 900 ஏக்கர் நிலத்தில் சுமார் 9000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ளது. [1][2] பரணிடப்பட்டது 2018-10-13 at the வந்தவழி இயந்திரம் மைதானம் 2020 ஆம் ஆண்டு திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வசதிகள்
தொகுநாளந்தா மைதானம் அனைத்து நவீன வசதிகளை கொண்ட கலை அரங்கமாக திகழும். துடுப்பாட்ட உள்ளிட்ட 28 உட்புற மற்றும் வெளிப்புற விளையாட்டுகளை விளையாடும் வசதிகளைக் கொண்டிருக்கும் ஒரு அரங்கமாக உருவாகும். மேலும் விளையாட்டுத் துறையின் ஆராய்ச்சி மையம், உந்துதல் மையம், விளையாட்டு நூலகம், நீச்சல் குளம், சிற்றுண்டிச்சாலை மற்றும் சிறுவர் மற்றும் சிறுமிகளுக்கான தனி விடுதி போன்ற பல்வேறு வசதிகளைக் கொண்ட கலை அரங்கமாக திகழும்.[3]
மேற்கோள்கள்
தொகு- ↑ Land in Rajgir for cricket stadium on Ranchi model பரணிடப்பட்டது 2015-09-24 at the வந்தவழி இயந்திரம்
- ↑ Bihar to construct world class cricket stadium பரணிடப்பட்டது 2016-03-04 at the வந்தவழி இயந்திரம்