நாள அழற்சி
நாள அழற்சி (Vasculitis) என்பது அழற்சியினால் குருதிக்குழல்கள் சிதைக்கப்படும் பலவகைப்பட்ட சீர்குலைவுகளின் தொகுப்பைக் குறிக்கும்[1]. தமனிகளும், சிரைகளும் இந்நோயால் பாதிப்படைகின்றன. சிலநேரங்களில், நிணநீர் குழாயழற்சி நாள அழற்சியின் ஒரு வகையாகக் கருதப்படுகிறது[2]. வெள்ளையணுக்கள் இடம்பெயர்ந்து அழிவினை ஏற்படுத்துவதை முதன்மையாகக் கொண்டதே நாள அழற்சியாகும். நாள அழற்சியில் சிரைகளும், தமனிகளும் அழற்சியால் பாதிக்கப்பட்டாலும், சிரையழற்சி (phlebitis), தமனியழற்சி (arteritis) ஆகியவைத் தனித்தனியான நோய்களாகும்.
நாள அழற்சி | |
---|---|
நாள அழற்சியினைக் காண்பிக்கும் நுண்வரைவி | |
வகைப்பாடு மற்றும் வெளிச்சான்றுகள் | |
சிறப்பு | நோயெதிர்ப்பியல், உடற் குழலியல், வாதவியல் |
ஐ.சி.டி.-10 | I77.6, I80., L95., M30.-M31. |
ஐ.சி.டி.-9 | 446, 447.6 |
நோய்களின் தரவுத்தளம் | 13750 |
பேசியண்ட் ஐ.இ | நாள அழற்சி |
ம.பா.த | D014657 |
சான்றுகள்
தொகு- ↑ "Glossary of dermatopathological terms. DermNet NZ". பார்க்கப்பட்ட நாள் 2009-01-08.
- ↑ டோர்லாண்ட் மருத்தவ அகராதியில் Vasculitis