நாழிமலை
நாழிமலை என்பது தேனி மாவட்டம் ஆண்டிபட்டி வட்டம் தி. சுப்புலாபுரத்தில் உள்ள ஒரு குன்று ஆகும். இம்மலை ஒரு நாழியைக் கவிழ்த்து வைப்பது போன்று அமைந்திருப்பதால் இப்பெயர் பெற்றது. நாழிமலையில் மல்லேசுவரர் எனும் மல்லையா பெயரிலான சிவன் கோயில் ஒன்று அமைந்துள்ளது.[1] இந்தக் கோயிலில் நடக்கும் புரட்டாசிப் பெரும் பூசைக்கு அருகிலுள்ள கிராம மக்கள் அனைவரும் வருகின்றனர். இந்தக் கோயிலுக்குச் செல்ல படிகள் அமைக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. இம்மலைக் கரடுகளில் காட்டுப்பன்றி போன்ற வனஉயிரினங்கள் வாழ்கின்றன.[2]
மேற்கோள்கள்
தொகு- ↑ "ஆண்டிபட்டி நாழிமலை உச்சியில் மகரதீபம் ஏற்ற முடிவு". ஜனவரி 10,2012,22:41 IST. பார்க்கப்பட்ட நாள் 27 அக்டோபர் 2012.
- ↑ "காட்டுப்பன்றிகளால் விவசாயநிலங்களில் பயிர்கள் சேதம்". தினமலர். பார்க்கப்பட்ட நாள் 01 நவம்பர் 2012.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help)