நா. அசோக்குமார்
பேராவூரணி நா. அசோக்குமார் அல்லது நா. அசோக்குமார் என்பவர் இந்திய அரசியல்வாதியும் தமிழ்நாட்டின் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். [1] இவர் 2021ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி சட்டமன்றத் தொகுதியில் திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராகப் போட்டியிட்டுசட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
நா. அசோக்குமார் | |
---|---|
சட்டமன்ற உறுப்பினர், தமிழ்நாடு | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 2021 | |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 15 April 1957 | (வயது 67)
தேசியம் | இந்தியர் |
வேலை | அரசியல்வாதி, சமூக சேவகர் |
தனிப்பட்ட வாழ்க்கை
தொகுதஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி வட்டம் வீரியங்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த வி.நாராயணசாமி (தந்தை) மற்றும் நா. ஜெயம் (அம்மா) ஆகியோருக்கு 1957ஆம் ஆண்டு ஏப்ரல் 15ஆம் தேதி பிறந்தவர். தமிழ்நாட்டின் தேவக்கோட்டையில் உள்ள பிரிட்டோ பள்ளியில் பள்ளிக் கல்வியை முடித்தார்.
அரசியல் வாழ்க்கை
தொகு1975ஆம் ஆண்டு திராவிட முன்னேற்றக் கழகம் (திமுக) கட்சியில் சேர்ந்ததன் மூலம் அவரது அரசியல் வாழ்க்கை தொடங்கியது. 2006 மற்றும் 2011 ஆண்டுகளில் பேராவூரணி பேரூராட்சித் தலைவர் பதவிக்கான தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
ஆண்டு | கட்சி | தொகுதி | முடிவு |
---|---|---|---|
2021 | திமுக | பேராவூரணி | வெற்றி[2] |
2016 | திமுக | பேராவூரணி | தோல்வி[3] |
மேற்கோள்கள்
தொகு- ↑ "16th Assembly Members". www.assembly.tn.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2021-12-03.
- ↑ "Peravurani Election Result". பார்க்கப்பட்ட நாள் 12 Jun 2022.
- ↑ "Assembly wise Candidate Valid Votes count 2016, Tamil Nadu" (PDF). www.elections.tn.gov.in. Archived from the original (PDF) on 30 Apr 2022. பார்க்கப்பட்ட நாள் 30 Apr 2022.