நா. சுகுமாரன்

சுகுமாரன் (பிறப்பு: ஜூன் 11, 1957; கோவை, இந்தியா) ஒரு தமிழ்க் கவிஞர் ஆவார்.[1] கவிதை, மொழிபெயர்ப்பு, விமர்சனம், இதழியல், தொலைக்காட்சியின் செய்தி ஆசிரியர் எனப் பல்வேறு பரிமாணங்களில் இவர் இயங்கிக்கொண்டிருக்கிறார்.[2]

கவிஞர் சுகுமாரன்

சென்னை பல்கலைக்கழகத்தில் பி.எஸ்.ஸி பட்டம் பெற்ற சுகுமாரன் அடூர் கோபாலகிருஷ்ணனின் சினிமா பற்றிய புத்தகமொன்றை (சினிமா அனுபவம்) தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார்.

'காலச்சுவடு' பத்திரிகையின் பொறுப்பாசிரியராகப் பணியாற்றுகிறார்.

புத்தகங்கள்

தொகு

கவிதைத் தொகுப்புகள்

தொகு
  • கோடைக்காலக் குறிப்புகள்(1985)[3]
  • பயணியின் சங்கீதங்கள் (1991)
  • சிலைகளின் காலம்(2000)
  • வாழ்நிலம் (2002)
  • பூமியை வாசிக்கும் சிறுமி (2007)

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • மார்க்சிய அழகியல் - ஒரு முன்னுரை (விமர்சனம் 1985)
  • வெட்டவெளி வார்த்தைகள் (கன்னட வசன கவிதைகள் 2000)
  • இது தான் என் பெயர் (சக்கரியாவின் மலையாள நாவல் 2001)
  • கவிதையின் திசைகள்(உலகக் கவிதைகள் 2001)
  • பாப்லோ நெருதா கவிதைகள் (100 கவிதைகளின் மொழிபெயர்ப்பு 2005)
  • பெண் வழிகள் (மலையாள பெண்நிலைக் கவிதைகள் 2005)
  • மயிலம்மா - போராட்டமே வாழ்க்கை (ஆதிவாசிப் போராளியின் வாழ்க்கை 2006)
  • சினிமா அனுபவம் (2006)
  • காளி நாடகம் (உண்ணி ஆர். இன் சிறுகதைகள் 2007)
  • மதில்கள் (வைக்கம் முகம்மது பஷீரின் நாவல் 2008)
  • அரபிக்கடலோரம் (சக்கரியாவின் கட்டுரைகள் 2008)

கட்டுரைகள்

தொகு
  • திசைகளும் தடங்களும் (2003)
  • தனிமையின் வழி ( 2007)
  • இழந்த பின்னும் இருக்கும் உலகம் (2008)
  • வெளிச்சம் தனிமையானது (2008)

மேற்கோள்கள்

தொகு
  1. "சுகுமாரன் கவிதைகள்". www.dinamalar.com. பார்க்கப்பட்ட நாள் 2021-03-23.
  2. "மொழியின் உயிர்த்துடிப்பு கவிதை- சுகுமாரன் பேட்டி". Hindu Tamil Thisai. பார்க்கப்பட்ட நாள் 2021-03-23.
  3. "சுகுமாரன் 60 - Kungumam Tamil Weekly Magazine". kungumam.co.in. பார்க்கப்பட்ட நாள் 2021-03-23.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நா._சுகுமாரன்&oldid=3600349" இலிருந்து மீள்விக்கப்பட்டது