நிகர்நிலை உலர் தாவரகம்
இக்கட்டுரையின் தலைப்பு விக்கிப்பீடியாவின் பெயரிடல் மரபுக்கோ, கலைக்களஞ்சிய பெயரிடல் மரபுக்கோ ஒவ்வாததாக இருக்கலாம் இக்கட்டுரையின் தலைப்பினை பெயரிடல் மரபுக்கு ஏற்றவாறு மாற்றக் கோரப்பட்டுள்ளது. உங்கள் கருத்துக்களை உரையாடல் பக்கத்தில் தெரிவியுங்கள். |
நிகர்நிலை உலர் தாவரகம் (Virtual herbarium) என்பதில், உலர் தாவரகத்தின் ஆவணங்களை, எண்ணிமம் செய்யப்பட்ட ஆவணங்களாக மாற்றி பாதுகாக்கின்றனர். இதனால் சிறப்புத்தன்மை வாய்ந்த ஆவணங்களைக் கையாளத் தெரியாத எவரும் கையாள முடியும். ஆவண இழப்பும் வெகுவாகக் குறைகிறது. உலர் தாவரக ஆவணங்களைப் பாதுகாத்தல் என்பது துறைசார்ந்த மனித உழைப்பும், பராமரிப்புச் செலவும், அதற்குரிய பாதுகாப்பு சூழ்நிலையும் தேவைப்படுகின்றன. பல நிலைகளில் சரிபார்க்கப்பட்ட ஆவணத்தினை, பட வடிவமாக, அதாவது எண்ணிம வடிவமாக மாற்றினால், அதனை எளிதாக, எச்சூழ்நிலையிலும் யாரும் பயன்படுத்தலாம். பாதுகாக்கப்பட்ட அறை, அதற்குரிய நடைமுறைகள் வெகுவாக குறைகின்றன. இதனால் இந்த ஆவணங்களை பலர் பார்த்து, பயன்படுத்திக் கொள்ளும் சூழ்நிலையும் அதிகரிக்கும். இருப்பினும், இவற்றினை இணையத்தில் பயன்படுத்தும் செய்தல் கடினமான பணியாகும். ஏனெனில், உருவாக்கப்படும், ஒவ்வொரு ஆவணமும், சில நூறு மெகாபைட்டுகள் அளவுள்ளதாக இருக்கின்றது.[1] அதனால் அதிவேக இணைய இணைப்பும், திறன் மிகுந்த கணினியும் தேவைப்படுகின்றன.
வழிமுறைகள்
தொகுஒரு உலர் தாவரகத்தின் ஆவணமானது, முதலில் நூல் மின்வருடியாலோ, நிலைப் படக்கருவியாலோ படம் எடுக்கப்படுகிறது. பிறகு உலர் தாவரக எண்ணிம ஆவணமாக மாற்றப்படுகிறது. இதற்குரிய மேம்படுத்தக் கருவிகளை இணைய ஆவணகம், இன்னும் பிற பொது நல அமைப்புகள் கண்டறிந்துள்ளன. இக்கருவிகளால், உலர் தாவரகத்தின் காகித ஆவணங்கள், பெரும்பாலும் சேதப்படுவதில்லை. எடுக்கப்பட்ட படங்கள் பின்பு, உரிய வடிவத்தில் கணிய ஆவணமாக, படத்தாவரத்திற்குரிய விவரங்களோடு இணைக்கப்படுகின்றன. இதற்குரிய திட்டங்களின் முன்னோடி, எர்பர் எண்ணிமம் (Herbar Digital ) எனலாம்.
காட்சியகம்
தொகு-
இணைய ஆவணகத்தின் மின் வருடி
-
நிலைப் படக்கருவி
மேற்கோள்கள்
தொகுவெளியிணைப்புகள்
தொகு- இந்திய எண்ணிம நூலகம்
- Digital Herbarium of Angiospermic Plants of Western Ghat Regions - மகாராட்டிர மாநில எண்ணிம நூலகம்
- இந்திய மருத்துவத் தாவரங்களின் எண்ணிம நூலகம் பரணிடப்பட்டது 2021-12-06 at the வந்தவழி இயந்திரம்
- கர்நாடக மாநில எண்ணிம தாவரவளம் பரணிடப்பட்டது 2020-06-18 at the வந்தவழி இயந்திரம்
- Europeana Collections (High quality scans of the collections of several important European herbaria such as Kew)
- Kew Herbarium Catalogue
- Australia's Virtual Herbarium
- United States Virtual Herbarium பரணிடப்பட்டது 2012-03-10 at the வந்தவழி இயந்திரம்
- Moscow Digital Herbarium: 786K scans online
- Harvard University Herbaria & Libraries
- BRIT Virtual Herbarium பரணிடப்பட்டது 2020-08-07 at the வந்தவழி இயந்திரம்