நிகால் அகமத் மௌலவி முகமது உசுமான்

இந்திய அரசியல்வாதி

நிகால் அகமத் மௌலவி முகமது உசுமான் (Nihal Ahmed Maulavi Mohammed Usman) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். நிகால் சகாபு அல்லது சதி நிகால் அகமது அல்லது நிகால்பாய் என்றும் இவர் அழைக்கப்படுகிறார். [1] மதச்சார்பற்ற சனதா தளம் கட்சியைச் சேர்ந்த இவர் ஓர் இந்திய சமதர்ம தலைவர் மற்றும் அரசியல்வாதியாக அறியப்படுகிறார். 1960 ஆம் ஆண்டு முதல் 1999 ஆம் ஆண்டு வரை மகாராட்டிர அரசின் முன்னாள் அமைச்சராகவும், மகாராட்டிர சட்டமன்றத்தின் சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்தார் [1] மாலேகான் நகராட்சி ஆணையத்தில் முதல் நகரத்தந்தையாகவும் இருந்தார். [1] 29 பிப்ரவரி 2016 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 29 ஆம் தேதியன்று நாசிக்கில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் வயது தொடர்பான நோய்களைத் தொடர்ந்து தனது 90 வயதில் இறந்தார். [1] [2] சுவாசக் கோளாறு காரணமாக முன்தினம் இரவு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். [2] இறப்புக்குப் பின்னர் அன்றிரவு படா கப்ரசுதான் புதைகுழியில் அவர் நல்லடக்கம் செய்யப்பட்டார். [3] அவருக்கு மனைவி, நான்கு மகன்கள் மற்றும் மூன்று மகள்கள் இருந்தனர். [4]

2002 ஆம் ஆண்டில், ஆப்கானிசுத்தான் மீதான அமெரிக்க தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் 2001 ஆம் ஆண்டு மாலேகானில் ஒரு ஊர்வலத்தை ஏற்பாடு செய்ததால் நிகால் சர்ச்சைக்குரியவரானார். ஆயினும்கூட, அவர் மாலேகானின் முதல் நகரத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். [5]

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 1.2 1.3 Malegaon, Maha. "Former Maharashtra minister Nihal Ahmed passes away". பார்க்கப்பட்ட நாள் 29 February 2016.
  2. 2.0 2.1 "Former Maharashtra Minister Nihal Ahmed Dead". பார்க்கப்பட்ட நாள் 29 February 2016.
  3. "Former Maharashtra minister Nihal Ahmed laid to rest". பார்க்கப்பட்ட நாள் 1 March 2016.
  4. Malegaon, Maha. "Former Maharashtra minister Nihal Ahmed passes away". பார்க்கப்பட்ட நாள் 29 February 2016.
  5. "Peaceful Malegaon elects a mayor now". The Indian Express. பார்க்கப்பட்ட நாள் 29 February 2016.