நிசப்தம்
நிசப்தம் (ஆங்கிலம்: Nisabdham) 2017 ஆம் ஆண்டு வெளியான இந்தியத் தமிழ் திரைப்படம். சமூக கருத்துகளைக் கொண்ட இத்திரைப்படம் மைக்கேல் அருண் எழுதி மற்றும் இயக்கியுள்ளார். அஜய், அபிநயா மற்றும் சத்தன்யா ஆகியாேர் முன்னணி கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஷான் ஜாஸ்ஸால் ஒலிப்பதிவு செய்துள்ளார். பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட ஒரு பெண் குழந்தை பற்றிய கதை மற்றும் அவரது பெற்றோர்கள் எவ்வாறு நிலைமையை சமாளிக்கிறார்கள் என்பதே நிசப்தம் படத்தின் கதைக்களம். இந்த படம் 2015-ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் துவக்கப்பட்டு 2017 மார்ச் 10 அன்று வெளியிடப்பட்டது.
நிசப்தம் | |
---|---|
இயக்கம் | மைக்கேல் அருண் |
தயாரிப்பு | ஏஞ்சலின் டேவன்சி |
கதை | மைக்கேல் அருண் |
இசை | ஷான் ஜாஸ்ஸால் |
நடிப்பு | அஜய் அபிநயா சத்தன்யா கிஷோர் |
ஒளிப்பதிவு | எஸ். ஜே. ஸ்டார் |
படத்தொகுப்பு | லாரன்ஸ் கிஷோர் |
கலையகம் | மிராக்கிள் பிக்சர் |
விநியோகம் | பிஹைண்டு தி சீன்சு |
வெளியீடு | 10 மார்ச்சு 2017 |
ஓட்டம் | 126:43 நிமிடம்:நொடி |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
தயாரிப்பு
தொகுமைக்கேல் அருண், முன்னதாக சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிப்பிலுள்ள படங்களுக்கு இணை இயக்குனராகவும் தகராறு (2013) திரைப்படத்தில் இணை இயக்குனராக பணிபுரிந்தார். பெங்களூரில் நிகழ்ந்த ஒரு உண்மையான வாழ்க்கை சம்பவத்தைப் பற்றிய கதை. பாலியல் தொல்லைக்குள்ளான ஒரு பெண் குழந்தை பற்றிய கதை மற்றும் அவரது பெற்றோர்கள் எவ்வாறு நிலைமையை சமாளிக்கிறார்கள் என்பதே நிசப்தம் படத்தின் கதைக்களம்.[1][2]
இந்தத் திரைப்படம் 2016 ஆம் ஆண்டில் தொடங்கியது. அருண் அபிநயாவை ஒரு முக்கிய பாத்திரத்தில் நடிக்க வைத்துள்ளார். அபிநயாவிற்கு சவிதா ரெட்டி டப்பிங் கலைஞராக பணிபுரிந்துள்ளார். புதுமுக நடிகர் அஜய், கிஷோர் மற்றும் குழந்தை நடிகை சத்தன்யா ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். ஒலிப்பதிவை உருவாக்கும் போது புதிய இசையமைப்பாளரான ஷான் ஜாஸ்ஸால், பின்னணி இசைக்காக சேர்பிய இசைக்கருவி வாசிப்பாளரான விளாடிஸ்வர் நஷீஷனாவைப் பயன்படுத்தியுள்ளார்.[3]
வெளியீடு
தொகுஇந்தத் திரைப்படம், மார்ச் 10, 2017 அன்று, மொட்ட சிவா கெட்டா சிவா மற்றும் மாநகராம் திரைப்படத்தோடு தமிழ்நாட்டில் வெளியானது. இத் திரைப்படம் குறித்த தி இந்து இதழின் குறிப்பு: "சமூக கருத்துகளைக் கொண்ட இத்திரைப்படம் உண்மையானதாகவும், கவனிக்க தக்கதாகவும் இருக்கிறது.[4]
மேற்கோள்கள்
தொகு- ↑ "This film has a strong social message". The New Indian Express. 2017-03-09. பார்க்கப்பட்ட நாள் 2017-04-08.
- ↑ ANUPAMA SUBRAMANIAN (2017-03-08). "Nisabdham gets 'U' certificate". Deccanchronicle.com. பார்க்கப்பட்ட நாள் 2017-04-08.
- ↑ "Abhinaya in yet another challenging role". Deccanchronicle.com. 2016-08-27. பார்க்கப்பட்ட நாள் 2017-04-08.
- ↑ "The lingering trauma". The Hindu. 2017-03-11. பார்க்கப்பட்ட நாள் 2017-04-08.