அபிநயா (நடிகை)

அபிநயா, ஒரு இந்திய நடிகை. இவரால் சரியாக பேச வராதிருந்த போதும், காது கேட்கும் திறன் குறைபாடு இருந்தபோதிலும், தன்னுடைய திறமையான நடிப்பால் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தவர்.[1][2][3][4] இவர் தன்னுடைய திரைவாழ்க்கையை நாடோடிகள் திரைப்படத்தில் தொடங்கினார். அதன்பிறகு, அத்திரைப்படத்தின் மொழிமாற்றங்களிலும் நடித்து, தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளிலும் அறிமுகமானார்.

அபிநயா
பிறப்புஅபிநயா ஆனந்த்
கர்நாடகா, இந்தியா
பணிநடிகை
செயற்பாட்டுக்
காலம்
2009 - தற்போது வரை

திரை வாழ்க்கைதொகு

அபிநயாவின் தந்தை இயக்குநர் ஏ. ஆர். முருகதாஸின் ஸ்டாலின் தெலுங்கு திரைப்படத்தில் பாதுகாப்பு காவலாளியாக நடித்துள்ளார். அப்படப்பிடிப்பின் போது அபிநயாவை கவனித்த முருகதாஸ், இயக்குநர் சசிக்குமாரிடம் அறிமுகப்படுத்தியுள்ளார். சமுத்திரக்கனி இயக்கத்தில், சசிக்குமார் தயாரிப்பில் வெளியான நாடோடிகள் திரைப்படத்தில் வாய்ப்புகிட்டியது. அத்திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, அதனுடைய மொழிமாற்றமான சம்போ சிவ சம்போ திரைப்படத்திலும் நடித்தார், பிறகு கன்னடத்தில் உருவான மொழிமாற்றமான ஹுத்துகாரு திரைப்படத்திலும் நடித்தார். இவருக்கு இரண்டு பிலிம்பேர் விருதுகள் நாடோடிகள் மற்றும் சம்போ சிவ சம்போ திரைப்படங்களுக்காக வழங்கப்பட்டது. இவர் 2010-ம் ஆண்டு சசிக்குமார் இயக்கத்தில் வெளியான ஈசன் திரைப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்தார். 2011-ம் ஆண்டு, ஏ. ஆர். முருகதாஸ் இயக்கத்தில் வெளிவந்த ஏழாம் அறிவு திரைப்படத்தில் சூர்யாவுடன் இணைந்து நடித்தார்.[5] இவர் தற்போது, த ரிப்போர்ட்டர் என்ற மலையாளத் திரைப்படத்திலும்,[6] ஜுனியர் என். டி. ஆருடன், தெலுங்கு திரைப்படமான தம்மு-வில் நடித்து வருகிறார்.[7] இவர் ப்ரேம் சாய் இய்க்கத்தில் கவுதம் மேனனின் தயாரிக்கும் திரைப்படத்திலும், நடிக்க உள்ளார்.[8]

திரைப்படங்கள்தொகு

வருடம் திரைப்படம் கதாபாத்திரம் மொழி குறிப்புகள்
2009 நாடோடிகள் பவித்ரா நட்ராஜ் தமிழ் சிறந்த அறிமுக நடிகைக்கான பிலிம்பேர் விருது
சிறந்த துணை நடிகைக்கான விஜய் விருது
பரிந்துரிக்கப்பட்டவை, சிறந்த துணை நடிகைக்கான பிலிம்பேர் விருது (தமிழ்)
பரிந்துரிக்கப்பட்டவை, சிறந்த அறிமுக நடிகைக்கான விஜய் விருது
2010 ஆயிரத்தில் ஒருவன் சோழனின் மகள் தமிழ்
2010 சம்போ சிவ சம்போ பவித்ரா தெலுங்கு சிறந்த துணை நடிகைக்கான பிலிம்பேர் விருது (தெலுங்கு)
2010 ஈசன் பூரணி தமிழ்
2011 ஹுத்துகாரு பவித்ரா கன்னடம்
2011 ஏழாம் அறிவு போதிதர்மனின் மனைவி தமிழ்
2012 த ரிப்போர்ட்டர் சாரா மலையாளம் படப்பிடிப்பில்
2012 தம்மு தெலுங்கு படப்பிடிப்பில்
2012 மேல தாளம் தமிழ் படப்பிடிப்பில்[9]
2012 தமிழ்செல்வனும் தனியார் அஞ்சலும் தமிழ் படப்பிடிப்பில்

குறிப்புகள்தொகு

  1. "Nadodigal Abhinaya gets more offers". Southdreamz. 16 July 2009. 21 ஆகஸ்ட் 2011 அன்று மூலம் பரணிடப்பட்டது. 10 February 2010 அன்று பார்க்கப்பட்டது.
  2. Rajamani, Radhika (30 June 2009). "Nadodigal's special heroine". ரெடிப்.காம். 10 February 2010 அன்று பார்க்கப்பட்டது.
  3. "'Nadodigal' Abhinaya does the talking through lap-top". Chennaionline. 23 ஜனவரி 2010 அன்று மூலம் பரணிடப்பட்டது. 10 February 2010 அன்று பார்க்கப்பட்டது.
  4. Borah, Prabalika M. (28 January 2010). "Fighting odds". தி இந்து (Chennai, India). Archived from the original on 19 அக்டோபர் 2010. https://web.archive.org/web/20101019130646/http://www.hindu.com/mp/2010/01/28/stories/2010012851470100.htm. பார்த்த நாள்: 10 February 2010. 
  5. Chowdhary, Y. Sunitha (4 April 2011). "Set for a bigger role". The Hindu (Chennai, India). http://www.thehindu.com/life-and-style/metroplus/article1598961.ece. 
  6. "Team 'Nadodigal' reunites for Mollywood". IndiaGlitz. 20 September 2011 அன்று பார்க்கப்பட்டது.
  7. Chowdhary, Y. Sunita (19 November 2011). "Itsy bitsy". The Hindu (Chennai, India). Archived from the original on 20 நவம்பர் 2011. https://web.archive.org/web/20111120214802/http://www.thehindu.com/arts/cinema/article2642232.ece. 
  8. "Gautham Menon's next two". Behindwoods. 17 April 2012 அன்று பார்க்கப்பட்டது.
  9. "Abhinaya's new film!". Behindwoods. 1 March 2012 அன்று பார்க்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அபிநயா_(நடிகை)&oldid=3541102" இருந்து மீள்விக்கப்பட்டது