நிசாகந்தி நடன விழா

கேரளாவில் நடைபெறும் வருடாந்திர இந்திய பாரம்பரிய நடன விழா

நிசாகந்தி நடன விழா (Nishagandhi Dance Festival) என்பது கேரள சுற்றுலாத் துறையால் ஏற்பாடு செய்யப்பட்டு,[1] திருவனந்தபுரம் கனகக்குன்னு அரண்மனையில் உள்ள நிசாகந்தி சுற்றுமாளிகையரங்கில் ஆண்டுதோறும் நடைபெறும் பாரம்பரிய நடனத் திருவிழாவாகும். இந்த நடனத் திருவிழா ஒரு வாரக் காலம் கொண்டாடப்படுகிறது.[2] இத்திருவிழா வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும் சனவரி மாதக் கடைசி வாரத்தில் நடைபெறும்.[3]

நிசாகந்தி நடன விழா
Nishagandhi Dance Festival
நிசாகந்தி நடன விழாவில் நடனம்
நிகழ்நிலைசெயலில்
வகைநடனத்திருவிழா
காலப்பகுதிஆண்டுதோறும்
நிகழ்விடம்நிசாகந்தி கலையரங்கம்
அமைவிடம்(கள்)கனகக்குன்னு அரண்மனை, திருவனந்தபுரம், கேரளா
நாடுஇந்தியா
இயக்கத்திலுள்ள ஆண்டுகள்31
துவக்கம்1993
மிக அண்மையசனவரி 20, 2021 (2021-01-20) – 26 சனவரி 2021 (2021-01-26)
செயல்பாடுஇந்திய பாரம்பரிய நடனம்
புரவலர்கள்கேரள சுற்றுலாத் துறை

இத்திருவிழாவின் போது கதக், பரதநாட்டியம், ஒடிசி, குச்சிப்புடி, மணிப்புரி மற்றும் கதகளி போன்ற இந்தியப் பாரம்பரிய நடன நிகழ்ச்சிகள் நடைபெறும். மேலும், அரண்மனைக்குள் கதகளி விழாவும் நடத்தப்படுகிறது.

நிசாகந்தி புரசுகாரம் அல்லது நிசாகந்தி விருது 2013ஆம் ஆண்டு முதல் திருவிழாவின் போது வழங்கப்படுகிறது. பரதநாட்டிய நடனக் கலைஞரான மிருணாளினி சாராபாய் இந்த விருதை முதன் முதலில் வென்றவர் ஆவார். இந்த விருதினை இலலிதா ஜெ. இராவ் (2014), பத்மா சுப்ரமணியம் (2015), இளையராஜா (2016), பாரதி சிவாஜி (2017), வி. பி. தனஞ்சயன் & சாந்தா தனஞ்சயன் (2018), கலாமண்டலம் க்ஷேமாவதி (2019), சி. வி. சந்திரசேகர் (2020) உள்ளிட்டோர் பெற்றுள்ளனர்.

மேற்கோள்கள்

தொகு
  1. "7-day Nishagandhi Dance Festival begins with Kathak performance | City - Times of India VideosTweets by TimesLitFestDelTweets by timeslitfestkol ►".
  2. "Nishagandhi Dance Festival | Thiruvananthapuram". Kerala Tourism (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-09-28.
  3. "Seven-day Nishagandhi Dance Fest to begin on Jan. 20". News Experts (in அமெரிக்க ஆங்கிலம்). 2020-01-18. பார்க்கப்பட்ட நாள் 2021-09-28.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நிசாகந்தி_நடன_விழா&oldid=3649389" இலிருந்து மீள்விக்கப்பட்டது