நிசான்
நிசான் மோட்டார் கார்ப்பரேசன் ('Nissan Motor Corporation) என்பது ஒரு சப்பானியப் பன்னாட்டுத் தானுந்து உற்பத்தி நிறுவனம் ஆகும். இது பொதுவாக நிசான் என்னும் சுருக்கப் பெயரால் அறியப்படுகிறது. இதன் தலைமையகம் சப்பானின் யொக்கொகாமாவில் உள்ள நிசிக்கு என்னும் இடத்தில் அமைந்துள்ளது. 1999ல் இருந்து, பிரான்சு நாட்டுத் தானுந்து உற்பத்தி நிறுவனத்துடன் சேர்ந்து, ரெனால்ட்-நிசான் அலையன்சு எனப்படும் கூட்டு நிறுவனத்தின் ஒரு பகுதியாகச் செயற்பட்டு வருகிறது. 2013 ஆம் ஆண்டு நிலவரப்படி, நிசான் நிறுவனத்தில் வாக்குரிமையுடன் கூடிய 43.4% பங்குகளை ரெனால்ட் கொண்டுள்ளது. ரெனால்ட் நிறுவனத்தில் வாக்குரிமை இல்லாத 15% ரெனால்ட் நிறுவனப் பங்குகளை நிசான் கொண்டுள்ளது.
வகை | பொது |
---|---|
நிறுவுகை | திசம்பர் 26, 1933 |
நிறுவனர்(கள்) | மசுசீரோ அசிமோட்டோ, கென்சிரோ டென், ரொக்குரோ அயோமா, மெய்த்தாரோ தக்கயூச்சி, யொசிசூக்கே அய்க்காவா |
தலைமையகம் | நிசி-கு, யோக்கோகாமா, சப்பான் |
சேவை வழங்கும் பகுதி | உலகளாவியது |
முக்கிய நபர்கள் | கார்லோசு கோசன் (தலைவர், முசெஅ)[1] |
தொழில்துறை | ஊர்தி நிதிச் சேவைகள் |
உற்பத்திகள் | தானுந்துகள், மிகுவசதி ஊர்திகள், வணிக ஊர்திகள், படகின் புற இயந்திரம், கவைகோல் பளுஏற்றிகள் |
உற்பத்தி வெளியீடு | ![]() |
வருமானம் | ![]() |
இயக்க வருமானம் | ![]() |
இலாபம் | ![]() |
மொத்தச் சொத்துகள் | ![]() |
மொத்த பங்குத்தொகை | ![]() |
உரிமையாளர்கள் | Renault (43.4%) |
பணியாளர் | 160,530 (சூன் 2013)[5] |
பிரிவுகள் | நிசான் இன்ஃபினிட்டி NISMO டாட்சன் |
இணையத்தளம் | www |
நிசான் மோட்டார் கார்ப்பரேசன் நிசான், இன்பினிட்டி, டட்சன், நிஸ்மோ ஆகிய பெயர்களில் தானுந்துகளை உற்பத்தி செய்து விற்பனைக்கு விடுகிறது. 2012 ஆண்டு நிலவரப்படி, நிசான், உலகின் ஆறாவது பெரிய தானுந்து உற்பத்தி நிறுவனமாக விளங்குகிறது. டொயோட்டா, ஜெனரல் மோட்டார்ஸ், பொக்ஸ்வாகன், ஐயுண்டாய், போர்ட் ஆகியவை இதற்கு முன்னுள்ள ஐந்து நிறுவனங்கள்.
மேற்கோள்கள்தொகு
- ↑ "Executive Bios". Nissan. 5 ஜூலை 2013 அன்று மூலம் பரணிடப்பட்டது. 9 July 2013 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Nissan Production, Sales and Export Results for December 2013 and Calendar Year 2013". Nissan. 28 January 2014. 19 பிப்ரவரி 2014 அன்று மூலம் பரணிடப்பட்டது. 13 May 2014 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ 3.0 3.1 3.2 3.3 "Nissan reports net income of 389 billion yen for FY2013". Nissan. 12 May 2014. 14 மே 2014 அன்று மூலம் பரணிடப்பட்டது. 13 May 2014 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "FY2013 Financial Results" (PDF). Nissan. 12 May 2014. 14 மே 2014 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 13 May 2014 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Outline of company". June 2013. 15 மார்ச் 2011 அன்று மூலம் பரணிடப்பட்டது. 28 January 2013 அன்று பார்க்கப்பட்டது.