நிசாம் வைரம்

நிசாம் வைரம் (Nizam Diamond) 1800 ஆம் ஆண்டுகளில் மிகவும் பிரபலமான வைரம் என்று நம்பப்படுகிறது.

நிசாம் வைரம்
Nizam Diamond
எடை340 காரட்டுகள் (68 g)
மூல நாடு India
எடுக்கப்பட்ட சுரங்கம்கொல்லூர் சுரங்கம், கோல்கொண்டா
உண்மையான உடைமையாளர்ஐதராபாத் நிசாம்

ஐதராபாத்தின் கடைசி நிசாமும் வைரத்தின் அசல் உரிமையாளர் என்று கருதப்பட்டவருமான மிர் உஸ்மான் அலிகானின் பெயர் இவ்வைரத்திற்கு சூட்டப்பட்டது. வைரத்தின் அளவு சுமார் 340 காரட் (68 கிராம்) என கதைகள் பல உள்ளன. கதையின் வரலாறு கோல்கொண்டாவின் ஆட்சியாளர்கள் வரை பின்னோக்கி செல்கிறது. மேலும் நிசாம் வைரமானது கொல்லூர் சுரங்கத்தில் காணப்பட்டதாக நம்பப்படுகிறது.[1]

எந்தவொரு பன்னாட்டு அளவு ஏலத்திற்கும் வைரம் சென்றதாக எந்த பதிவுகளும் இல்லை. சிறிய கோகினூர் என்று அழைக்கப்படும் நிசாம் வைரம் கிருஷ்ணா ஆற்றில் இருந்து வெட்டப்பட்டது. கொல்லூர் வைர சுரங்கம், இப்போது புலிசிந்தலா அணையின் நீரில் மூழ்கியுள்ளது. நிசாம் வைரம் 1830 ஆம் ஆண்டில் வெட்டப்பட்டது என்றும் 1948 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட காவல்துறை நடவடிக்கைக்குப் பிறகு காணாமல் போனது என்றும் செய்திகள் கூறுகின்றன.[2]

மாநில காப்பக தரவுகளின்படி நிசாம் வைரம் 1944 ஆம் ஆண்டில் இருந்ததாக தெரிகிறது. இலண்டனில் உள்ள இந்தியா அலுவலகம் வைரத்தின் விவரங்களை அப்போதைய நிசாமிடம் கோரியுள்ளது. கோபம் கொண்ட நிசாம் அவரிடமிருந்த நிசாம் அல்லது கோல்கொண்டா வைரம் மற்றும் பிற விலைமதிப்பற்ற கற்கள் மற்றும் மணிகற்கள் பற்றிய விவரங்களை வெளியிட மறுத்துவிட்டார்.

மேற்கோள்கள் தொகு

  1. Deccan Heritage, H. K. Gupta, A. Parasher and D. Balasubramanian, Indian National Science Academy, 2000, p. 144, Orient Blackswan, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-7371-285-9
  2. "Nizam diamond".{{cite web}}: CS1 maint: url-status (link)

புற இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=நிசாம்_வைரம்&oldid=3931269" இலிருந்து மீள்விக்கப்பட்டது