நிசா இராசகோபாலன்

நிசா பி. இராசகோபாலன் (Nisha Rajagopalan) (பிறப்பு:22 அக்டோபர் 1980), ஒரு கர்நாடக இசைக்கலைஞர் . இவரது தாயார், வசுந்தரா இராசகோபால், பிரபல இசையமைப்பாளரான கோடீசுவர ஐயரின் வழித்தோன்றலான கோபால ஐயரின் சீடர் ஆவார். [1] நிசா தனது தாயிடமிருந்து குரலிசையில் பயிற்சியைத் தொடங்கினார். பின்னர் டி. ஆர் சுப்பிரமணியம், கல்கத்தா கிருஷ்ணமூர்த்தி, சுகுணா வரதாச்சாரி, பி. எஸ். நாராயணசாமி ஆகியோரிடம் பயிற்சிப் பெற்றார். [1] [2]

நிசா இராசகோபாலன்
நிசா இராசகோபாலன் கச்சேரியில் பாடும் காட்சி.
பின்னணித் தகவல்கள்
பிறப்புஅக்டோபர் 22, 1980 (1980-10-22) (அகவை 44)
தொழில்(கள்)கருநாடக இசைக்கலைஞர்

இவர் சென்னை, அகில இந்திய வானொலி, முதல்நிலைக் கலைஞரும் இந்தியக் கலாச்சார உறவுக் குழுவில் (ICCR) அங்கீகாரம் பெற்ற கலைஞருமாவார். [3]

குடும்பம்

தொகு

நிசாவின் தந்தை இராசகோபாலன் கனடாவின் தொராண்டோவில் பணிபுரிந்ததால், தனது பெற்றோருடன் அங்கு வசித்து வந்தார். மூன்று மகள்களில் இரண்டாவது மகளாவார். பேராசிரியர் டி. ஆர். சுப்பிரமணியத்திடம் இசை கற்றுக்கொள்வதற்காக இவர் தனது தாய் மற்றும் சகோதரிகளுடன் புது தில்லிக்குச் சென்றார். 1995இல் இவரது தந்தைக்கு சென்னையில் வேலை கிடைத்தது. அதனால் இவர்கள் அனைவரும் சென்னைக்கு குடிபெயர்ந்தனர். நிசாவின் கணவர் அரவிந்த் ஒரு விமானம் ஓட்டுநராவார். இவர்களுக்கு வித்யுத் [4] என்ற மகன் 2014 இல் பிறந்தார்.

விருதுகளும் பாராட்டுகளும்

தொகு

இவர் பின்வரும் விருதுகளைப் பெற்றுள்ளார்:

  • தி இந்து சரிகம எம். எஸ். சுப்புலட்சுமி விருது (முதலில் விருது பெற்றவர்) (2011) [5]
  • இசை பேரொளி (கார்த்திக் பைஃன் ஆர்ட்சு) [6]
  • கல்கி கிருஷ்ணமூர்த்தி நினைவு விருது (கல்கி கிருஷ்ணமூர்த்தி நினைவு அறக்கட்டளை) [6]
  • சண்முக சங்கீத சிரோமணி விருது (ஸ்ரீ சண்முகானந்தா பைஃன் ஆர்ட்சு மற்றும் சங்கீத சபை) [6]
  • சிறந்த பெண் பாடகர் (தி மியூசிக் அகாதமி) [6]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 "Sruti Magazine - March 2007 Issue". Archived from the original on 2009-07-03. பார்க்கப்பட்ட நாள் 2010-05-05.
  2. "The Hindu : Absorbing recital". Archived from the original on 2011-06-06. பார்க்கப்பட்ட நாள் 2010-05-05.
  3. "Nisha Rajagopalan". salzburgerfestspiele. Archived from the original on 31 July 2017. பார்க்கப்பட்ட நாள் 31 July 2017.
  4. Lakshmi Venkatraman (19 November 2013). "Gene Passes On..." sabhash.com. Archived from the original on 31 July 2017. பார்க்கப்பட்ட நாள் 31 July 2017.
  5. Srinivasan, Meera (1 April 2011). "Nisha Rajagopal, first recipient of The Hindu Saregama MS Subbulakshmi Award". The Hindu. https://www.thehindu.com/features/friday-review/music/nisha-rajagopal-first-recipient-of-the-hindu-saregama-ms-subbulakshmi-award/article1588819.ece. பார்த்த நாள்: 7 July 2020. 
  6. 6.0 6.1 6.2 6.3 "Vidushi.Nisha Rajagopalan". sraavyam.com. Archived from the original on 31 July 2017. பார்க்கப்பட்ட நாள் 21 October 2020.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=நிசா_இராசகோபாலன்&oldid=3903931" இலிருந்து மீள்விக்கப்பட்டது