நிசா தேசாய் பிசுவால்
நிசா தேசாய் பிசுவால் (Nisha Desai Biswal, நிஷா தேசாய் பிஸ்வால்) அமெரிக்க அரசுத் திணைக்களத்தின் தெற்கு, மத்திய ஆசியப் பிராந்திய விவகாரங்களுக்கான முன்னாள் உதவிச் செயலாளர் ஆவார். இந்திய அமெரிக்கரான இவர் பன்னாட்டு அபிவிருத்திக்கான அமெரிக்க முகவரான யூஎஸ்எயிட் நிறுவனத்தின் ஆசியப் பகுதி நிருவாகியாகப் பணியாற்றினார். இவர் தெற்கு, மத்திய ஆசியப் பிராந்திய விவகாரங்களுக்கான உதவிச் செயலாளராக 2013 சூலை 19 இல் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவினால் நியமிக்கப்பட்டார்.[1] 1968 ஆம் ஆண்டில் இந்தியாவில் குசராத்து மாநிலத்தில் பிறந்த நிசா பெற்றோருடன் அமெரிக்காவுக்குக் குடிபெயர்ந்தார்.[1]
நிசா பிசுவால் | |
---|---|
தெற்கு, மத்திய ஆசியப் பிராந்திய விவகாரங்களுக்கான உதவி செயலாளர், ஐக்கிய அமெரிக்கா | |
பதவியில் சனவரி 24, 2014 – சனவரி 20, 2017 | |
குடியரசுத் தலைவர் | பராக் ஒபாமா |
Deputy | வில்லியம் ஈ. டொட் |
முன்னையவர் | ராபர்ட் பிளேக் |
பின்னவர் | வில்லியம் ஈ. டொட் (பதில்) |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 1969 (அகவை 54–55) குசராத்து, இந்தியா |
முன்னாள் கல்லூரி | வர்ஜீனியா பல்கலைக்கழகம் |
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 "Indian-American nominated for key post in Obama Admin". CNBC-TV18. 20 சூலை 2013. பார்க்கப்பட்ட நாள் 11 ஆகத்து 2013.