நிசீயா
நிசீயா (Nisaea அல்லது Nisaia ( பண்டைக் கிரேக்கம்: Νίσαια அல்லது Νισαία) என்பது பண்டைய கிரேக்க நகர அரசான மெகாராவுக்கு உட்பட ஒரு துறைமுக நகரமாகும். இது சரோனிக் வளைகுடாவில் அமைந்திருந்தது. [1] கிரேக்கத் தொன்மவியல் படி, நிசீயா இரண்டாம் பாண்டியனின் மகன்களில் ஒருவரால் நிறுவப்பட்டது. அவர் தன் தந்தை வழங்கிய பிராந்தியத்திற்கு தனது பெயரை இட்டார். [2] பெலோபொனேசியப் போருக்கு முன்னும் பின்னும் நிசியாவின் கட்டுப்பாடு ஏதென்சுக்கும் மெகாராவுக்கும் இடையில் மாறிமாறி இருந்துவந்தது. [3] [4] மெகாரியர்கள் நிசியாவை தங்கள் நகரத்துடன் சேர்த்து பாதுகாக்ககும் வகையில் நீண்ட சுவர்களைக் கட்டினார்கள். துசிடிடீஸின் கூற்றுப்படி, துறைமுகத்தை மெகாராவுடன் இணைக்கும் சுவர்களின் நீளம் எட்டு கிரேக்க ஸ்டேடியாக்கள் ஆகும், அதே நேரத்தில் இசுட்ராபோ சுவர்கள் 18 ஸ்டேடியா நீளம் கொண்டதாகக் கூறுகிறார். [5] டிமீடரின் கோயில் நிசியாவுக்கு அருகிலுள்ள சாலையில் அமைந்திருந்தது. மேலும் பொசைடன் கோயில் துறைமுக நகரத்திற்குள் அமைந்திருந்தது. [6] மெகாராவின் கவிஞரான தியோக்னிசின் பிறப்பிடமாக நிசீயா கருதப்படுகிறது. ஆனால் அவரது பிறந்த இடம் குறித்து உறுதியாக அறியப்படவில்லை [7] இந்தப் பண்டைய துறைமுக நகரத்தின் இருப்பிடம் குறித்து வரலாற்றாசிரியர்களிடையே விவாதம் நிலவுகிறது. [4]
குறிப்புகள்
தொகு- ↑ Ager, Sheila (2018-11-15). "Mythic Highways of the Megarid" (in en). Teiresias Supplements Online 1: 50. https://www.uni-muenster.de/Ejournals/index.php/tso/article/view/2423.
- ↑ Ager, Sheila (2018-11-15). "Mythic Highways of the Megarid" (in en). Teiresias Supplements Online 1: 49. https://www.uni-muenster.de/Ejournals/index.php/tso/article/view/2423.
- ↑ Freitag, Klaus (2018-11-15). "With and Without You: Megara's Harbours" (in en). Teiresias Supplements Online 1: 106. https://www.uni-muenster.de/Ejournals/index.php/tso/article/view/2425.
- ↑ 4.0 4.1 Freitag, Klaus (2018-11-15). "With and Without You: Megara's Harbours" (in en). Teiresias Supplements Online 1: 103. https://www.uni-muenster.de/Ejournals/index.php/tso/article/view/2425.
- ↑ Freitag, Klaus (2018-11-15). "With and Without You: Megara's Harbours" (in en). Teiresias Supplements Online 1: 105. https://www.uni-muenster.de/Ejournals/index.php/tso/article/view/2425.
- ↑ Freitag, Klaus (2018-11-15). "With and Without You: Megara's Harbours" (in en). Teiresias Supplements Online 1: 107. https://www.uni-muenster.de/Ejournals/index.php/tso/article/view/2425.
- ↑ Stein-Hölkeskamp, Elke (2018-11-15). "Theognis and the Ambivalence of Aristocracy" (in en). Teiresias Supplements Online 1: 130. https://www.uni-muenster.de/Ejournals/index.php/tso/article/view/2426.