கணக்காய்வு
கணக்காய்வு (English:Audit of Financial statements) என்றால் தகைமை, அனுபவம், அறிவு, ஆளுமை உள்ள சுதந்திரமான திறந்தொழில் நபரினால் முடிவான நிதிககூற்றுக்களினதும் அவற்றின் அடிப்படையான நிதிக்கட்டுப்பாடுகளினதும் மேல் அபிப்பிராயத்தினை தெரிவிக்கும் முகமாக கொடுக்கல் வாங்கல்களில் நடாத்தப்படும் பரிசோதனை கணக்காய்வாகும். கணக்காய்வு தணிக்கை எனவும் அழைக்கப்படுகிறது. கணக்காய்யு செய்பவர்களை கணக்காய்வாளர் அல்லது தணிக்கையாளர் என்று அழைபார்கள். கணக்காய்வு தொழில்சார் திறனும், தகமையும் கொண்ட ஒரு சுதந்திரமான நபரினால் அல்லது நிறுவனத்தால் மட்டுமே செய்ய முடியும். ஒருவர் கணக்காய்வாளராக செயல்பட சில தகுதிகளை பெற்றிருக்க வேண்டும். எடுத்துகாட்டாக இந்தியா, இலங்கை ஆகிய நாடுகளில் பட்டயக் கணக்கறிஞர்கள் மட்டுமே கணக்காய்யு செய்ய முடியும்.[1][2][3]
கணக்காய்வின் முடிவில் நிதிக்கூற்றுக்கள் உண்மையானதும், நியாயமானதும் என்றோ அல்லது இல்லை என்றோ கணக்காய்வு அபிப்பிராயம் வெளிப்படுத்தப்படும்.
கணக்காய்வின் வகைகள்
தொகுகணக்காய்வை பின்வரும்படி வகைபடுத்தலாம்:
- புறநிலைக் கணக்காய்வு
- அகக் கணக்காய்வு
- இறுதிநிலைக் கணக்காய்வு
- இடைக்காலக் கணக்காய்வு
- தொடர் கணக்காய்வு
- ஆழத்தில் கணக்காய்வு
- செயற்பாட்டுக் கணக்காய்வு
இதையும் பார்க்கவும்
தொகுஆதாரங்கள்:
தொகு- ↑ Arens, Elder, Beasley; Auditing and Assurance Services; 14th Edition; Prentice Hall; 2012
- ↑ "Auditing Standard No. 5". pcaobus.org. பார்க்கப்பட்ட நாள் 2016-04-07.
- ↑ "AU 508 Reports on Audited Financial Statements". pcaobus.org. பார்க்கப்பட்ட நாள் 2016-04-07.