நிதித் தீர்வு மற்றும் சேமிப்பு காப்பீட்டு வரைவுச் சட்டம், 2017
நிதித் தீர்வு மற்றும் சேமிப்புக் காப்பீட்டு வரைவுச் சட்டம், 2017 (Financial Resolution and Deposit Insurance (FRDI) Bill 2017), இந்தியாவின் அனைத்து வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள் மற்றும் நிதி நிறுவனங்கள் திவாலா நிலைக்கு தள்ளப்படும் போது, நிதி நிறுவனங்களின் நிதிச் சுமையை எதிர்கொள்வதற்கு ஏற்ப, விரிவான தீர்வுகள் மற்றும் வழிமுறைகளை வகுப்பதே இந்திய அரசின் வரைவுச் சட்டத்தின் நோக்கமாகும்.[1]
இந்த வரைவுச் சட்டம், 10 ஆகஸ்டு 2017 அன்று நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. மேலும் வரைவுச் சட்டம் நாடாளுமன்றக் கூட்டுக் குழுவின் பரிசீலனையில் உள்ளது. நாடாளுமன்றக் கூட்டுக் குழு, வரைவுச் சட்டத்தில் குறிப்பிட்டுள்ள நடைமுறைகள் குறித்து, அனைத்து வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களின் கருத்துக்களை கேட்டு, தனது முடிவினை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க உள்ளது.[2]
இச்சட்ட மசோதா நாடாளுமன்றத்தின் 2017 குளிர்கால கூட்டத் தொடரில் தாக்கல் செய்து விவாதிக்கப்படும். பின்னர் பெரும்பான்மையான நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவுடன் சட்டமாக இயற்றப்படும்.
வரைவுச் சட்டத்தின் சிறப்பம்சங்கள்
தொகு- வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள் மற்றும் நிதி நிறுவனங்களுக்கான நிதித் தீர்வுக் கழகம் அமைத்தல்.
- சேமிப்பு காப்பீட்டு அதிகாரம் மற்றும் பொறுப்புகளை தீர்வுக் கழகத்துக்கு மாற்றுவதற்காக, சேமிப்பு காப்பீடு மற்றும் கடன் உத்தரவாதக் கழகம் சட்டம், 1961ஐ நீக்குதல்.
- தீர்வுக் கழகமானது, நிதி நிறுவனங்களின் நிலைத்தன்மை மற்றும் கடன் மீட்புத் திறனை பாதுகாக்கும்; ஏற்றுக் கொள்ளத்தக்க அளவு வரை வாடிக்கையாளர்களை பாதுகாக்கும் மற்றும் பொதுமக்களின் நிதியை முடிந்தவரை பாதுகாக்கும்.
- நிதித்துறை சாராத நிறுவனங்களின் நொடிப்பு நிலைமையை தீர்ப்பதற்காக நொடிப்பு மற்றும் திவாலாதல் விதி, 2016-யை இந்திய அரசு அண்மையில் இயற்றியுள்ளது.
- திட்டமிடப்பட்டுள்ள சட்டவரைவானது, நிதி நிறுவனங்களுக்கு தீர்வு வழிமுறையை அளிக்கும் வகையில், திவாலாதல் விதிக்கு வலு சேர்க்கும். இந்த சட்டவரைவு செயல்படுத்தப்படும்போது, திவாலாதல் விதியுடன் இணைந்து, பொருளாதாரத்துக்கு விரிவான தீர்வு வழிமுறையாக அமையும்.
- நிதித் தீர்வு மற்றும் சேமிப்பு காப்பீட்டு சட்ட வரைவு, 2017 நிதி நெருக்கடி நேரத்தில், நிதி சேவை வழங்கும் நிறுவனங்களின் நுகர்வோருக்கு பாதுகாப்பான உணர்வை ஏற்படுத்த விரும்புகிறது. நிதி நெருக்கடி ஏற்படும்போது, நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் நிறுவனங்கள், அதிலிருந்து மீள்வதற்காக பொதுமக்களின் நிதியைப் பயன்படுத்துவதை குறிப்பிட்ட அளவுக்குள் வரையறுத்து நிதிச் சேவை நிறுவனங்களை ஒழுங்குபடுத்துகிறது.
- நிதி நிறுவனங்களின் நிதி நெருக்கடி காலத்தில், அதனை எதிர்கொள்வதற்கு தேவையான வழிவகைகளை ஏற்படுத்துவதுடன், போதிய பாதுகாப்பு நடவடிக்கைகளையும் உறுதிப்படுத்தி, பொருளாதாரத்துக்கு நிதி நிலைத்தன்மையை ஏற்படுத்த உதவுகிறது.
- அதிக அளவில் உள்ள சில்லறை சேமிப்பாளர்கள் பயனடைவதற்காக தற்போதைய சேமிப்பு காப்பீட்டு வழிமுறையை ஒழுங்குபடுத்துவதையும், வலுப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. மேலும் நெருக்கடியில் உள்ள நிதி நிறுவனங்களின் பிரச்சனைகளுக்கு தீர்வுகாண்பதற்கான நேரம் மற்றும் செலவைக் குறைக்க வழிவகை செய்கிறது.
எதிர்ப்புகள்
தொகுசர்ச்சைக்குரிய நிதித் தீர்வு சேமிப்புக் காப்பீட்டு வரைவு சட்டத்தால், வங்கி வாடிக்கையாளர்களில் சேமிப்புகளுக்கு உத்தரவாதம் இன்மையால் வங்கி ஊழியர்களும், அரசியல் கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.[3][4][5][6]
இதனையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ FRDI Bill 2017: Govt will fully protect public deposits in banks, says Arun Jaitley
- ↑ Provisions of the Financial Resolution and Deposit Insurance Bill, 2017 meant to protect interests of depositors
- ↑ "எப்.ஆர்.டி.ஐ. மசோதாவுக்கு கடும் எதிர்ப்பு: பாராளுமன்றத்தில் புயலை கிளப்ப காங்கிரஸ் திட்டம்". Archived from the original on 2017-12-13. பார்க்கப்பட்ட நாள் 2017-12-12.
- ↑ சர்ச்சைக்குரிய நிதித் தீர்வு, வைப்பீடு காப்பீட்டு சட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும்
- ↑ Why is everyone scared of the Financial Resolution and Deposit Insurance Bill?
- ↑ Bankers Warn Of Strike Over FRDI Bill
வெளி இணைப்புகள்
தொகு- வங்கி டெபாசிட்களுக்கு பாதுகாப்பு இல்லையா?
- வங்கிகளின் வாராக் கடன்களை வசூலிக்காமல் மக்களின் டெபாசிட் தொகையை குறிவைக்கும் புதிய சட்டம்
- நிதித் தீர்வு மற்றும் சேமிப்பு காப்பீட்டு வரைவுச் சட்டம், 2017- கோப்புக் காட்சி பரணிடப்பட்டது 2017-12-15 at the வந்தவழி இயந்திரம்
- What does the FRDI Bill do for you?
- The Financial and Deposit Insurance Bill, 2017
- Financial Resolution and Deposit Insurance Bill, 2017