நித்தியானந்த சுவாமி (அரசியல்வாதி)
இந்திய அரசியல்வாதி
நித்தியானந்த சுவாமி (Nityanand Swami) (இந்தி: नित्यानन्द स्वामी; (27 டிசம்பர் 1927 - 12 டிசம்பர் 2012) உத்தராகண்ட் மாநிலத்தின் முதலாவது முதலமைச்சராக 9 நவம்பர் முதல் 29 அக்டோபர் 2001 முடிய பதவி வகித்தவர்.[1]
நித்தியானந்த சுவாமி नित्यानन्द स्वामी | |
---|---|
முதலாவது முதலமைச்சர் (இந்தியா | |
பதவியில் 9 நவம்பர் 2000 – 29 அக்டோபர் 2001 | |
முன்னையவர் | புதுப் பதவி |
பின்னவர் | பகத்சிங் கோசியாரி |
சபாநாயகர், உத்தரப் பிரதேச சட்டமன்றம் [1] | |
பதவியில் 23 மே 1996 - 8 நவம்பர் 2000 | |
முன்னையவர் | சிவபிரசாத் குப்தா |
பின்னவர் | ஓம் பிரகாஷ் சர்மா (பொறுப்பு) |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | முதலமைச்சர்]], உத்தராகண்ட் 27 டிசம்பர் 1927 நர்னௌல், அரியானா |
இறப்பு | திசம்பர் 12, 2012 டேராடூன், உத்தராகண்ட் | (அகவை 84)
இளைப்பாறுமிடம் | முதலமைச்சர்]], உத்தராகண்ட் |
அரசியல் கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
துணைவர் | சந்திரகாந்தா |
பிள்ளைகள் | 4 மகள்கள் |
பெற்றோர் |
|
வாழிடம்(s) | டேராடூன், உத்தராகண்ட் |
இளமையும் கல்வியும்
தொகுநித்தியானந்த சுவாமி அரியானாவில் உள்ள நர்னௌலி என்ற ஊரில் பிறந்தவர் எனினும், அவரது தந்தை டேராடூனில் வன ஆராய்ச்சித் துறையில் பணியாற்றி வந்ததால், டேராடூனில் கல்வியைத் தொடர்ந்தார். சட்டப் படிப்பு பயின்ற நித்தியானந்த சுவாமி, ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கப் பணிகளில் ஈடுபட்டார்.
அரசியல் வாழ்க்கை
தொகுநித்தியானந்த சுவாமி பாரதிய ஜனசங்க கட்சியின் உறுப்பினராகச் சேர்ந்து அரசியல் பணி தொடர்ந்தார்.
- 1969-இல் டேராடூன் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வென்று, உத்தரப் பிரதேச சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
- 1984-இல் கார்வால் மற்றும் குமாவுன் பட்டதாரிகள் தொகுதிலிருந்து உத்தரப் பிரதேச மேலளவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
- 1991-இல் பாரதிய ஜனதா கட்சி ஆண்ட உத்தரப் பிரதேச சட்டமன்றத்திற்கு துணைத்தலைவராகவும், பின்னர் 1992-இல் உத்தரப் பிரதேச சட்டமன்றத் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
உத்தரப் பிரதேசத்திலிருந்து உத்தராஞ்சல் பகுதியை பிரித்து தனி மாநிலமாக உருவாவதற்கு தொடர்ந்து பாடுபட்டவர்.
- 9 நவம்பர் 2000-இல் புதிய உத்தராஞ்சல் (தற்போது உத்தராகண்ட்) மாநிலத்தின் முதலாவது முதலமைச்சராக பாரதிய ஜனதா கட்சியின் நித்தியானந்த சுவாமி பதவி ஏற்றார். பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்கள் கேட்டுக் கொண்டதற்கு இணங்க 29 அக்டோபர் 2001-இல் முதலமைச்சர் பதவியிலிருந்து விலகினார்.
இதனையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "fullstory". Ptinews.com. பார்க்கப்பட்ட நாள் 2012-12-12.[தொடர்பிழந்த இணைப்பு]
வெளி இணைப்புகள்
தொகு- http://www.organiser.org/dynamic/modules.php?name=Content&pa=showpage&pid=61&page=17 பரணிடப்பட்டது 2011-05-27 at the வந்தவழி இயந்திரம்
- http://www.expressindia.com/news/ie/daily/20001109/ifr09012.html
- http://www.dailyexcelsior.com/02feb09/national.htm
- http://hinduvoice.net/cgi-bin/dada/mail.cgi?flavor=archive;list=NL;id=20050126151537