நித்யகல்யாணப் பெருமாள் கோவில், காரைக்கால்

நித்யகல்யாணப் பெருமாள் கோவில் இந்தியாவின் புதுச்சேரி ஒன்றியப் பகுதியின் துறைமுக நகரமான காரைக்காலில் உள்ள மூன்று புகழ்பெற்ற கோவில்களில் ஒன்றாகும். இது காரைக்கால் அம்மையார் கோயிலுக்கு அருகில் உள்ளது. தெப்பக் குளமான சந்திர தீர்த்தம் இவ்விரண்டு கோயில்களுக்கும் இடையில் உள்ளது. இந்த தெப்பக் குளம் இரு கோயில்களுக்கும் சொந்தமானது ஆகும். காரைக்காலின் பாரதியார் தெருவில் நித்யகல்யாண பெருமாள் கோயில் அமைந்துள்ளது. [1]

கோயிலுக்குள் உள்ள தெய்வங்கள் தொகு

இந்தக் கோயில் விஷ்ணு கோயிலாகும். நித்யகல்யாணப் பெருமாள் என்ற விஷ்ணுவின் சிலை படுத்தவாறு உள்ளது. இவர் இந்தக் கோயிலின் பிரதான கடவுள் ஆவார்.

  • சக்கரத்தாழ்வார்
  • ரங்கநாயகி தாயார்
  • விஷ்ணுவின் நரசிம்ம அவதாரம்
  • அனுமன்
  • விஷ்ணுவின் அவதாரங்கள்
  • பகவான் கிருஷ்ணரின் விஸ்வரூபம்
  • கருட பகவான்
  • ஆண்டாள்
  • அலமேலு தாயார்

கொண்டாடப்படும் விழாக்கள் தொகு

இந்தக் கோயிலில் விஷ்ணு மற்றும் அவரது அவதாரங்கள் தொடர்பான திருவிழாக்கள் கொண்டாடப்படுகின்றன. ராம நவமி, வைகுண்ட ஏகாதசி, அனுமன் ஜெயந்தி மற்றும் மார்கழி மாதம் முழுவதும் இங்கே கொண்டாடப்படுகின்றன. [2] புரட்டாசி தமிழ் மாதத்தில், பல சடங்குகள் கோவிலில் நடைபெறும் [3]

குறிப்புகள் தொகு

  1. "Nithya Kalyana Perumal Kovil Karaikal, India - Location, Facts, History and all about Nithya Kalyana Perumal Kovil Karaikal - ixigo trip planner". Ixigo.com. 2016-06-26. Archived from the original on 2016-08-26. பார்க்கப்பட்ட நாள் 2016-07-08.
  2. "Karaikal Sri Nithyakalyanaperumal Temple". Karaikal.gov.in. Archived from the original on 2016-11-18. பார்க்கப்பட்ட நாள் 2016-07-08.
  3. http://temple.dinamalar.com/news_detail.php?id=13473