நித்யானந்த மகாபத்ரா
நித்யானந்தா மகாபத்ரா (Nityananda Mahapatra) இந்தியாவின் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். 1912 ஆம் ஆன்டு சூன் மாதம் 17 ஆம் தேதியன்று இவர் பிறந்தார்.[1] கவிஞர் மற்றும் பத்திரிகையாளராகவும் இவர் அறியப்படுகிறார்.
நித்யானந்த மகாபத்ரா Nityananda Mahapatra | |
---|---|
நித்யானந்த மகாபத்ராவின் உருவப்படம் | |
சட்டமன்ற உறுப்பினர்: ஒடிசாவின் சட்டமன்றம் | |
பதவியில் 1957–1971 | |
முன்னையவர் | மகம்மது அனீபு |
பின்னவர் | அரேகிருட்டிணா மகதாபு |
தொகுதி | பத்ரக்கு |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | பத்ரக்கு, பீகார் மற்றும் ஒரிசா மாகாணம், பிரித்தானிய இந்தியா | 17 சூன் 1912
இறப்பு | 17 ஏப்ரல் 2012 புவனேசுவரம், ஒடிசா, இந்தியா | (அகவை 99)
காரணம் of death | சுவாசக் கோளாறு |
தேசியம் | இந்தியர் |
அரசியல் கட்சி | ஒரிசா சனா காங்கிரசு |
வேலை | எழுத்தாளர், அரசியல்வாதி |
விருதுகள் | சாகித்திய அகாதமி விருது,1987 |
அரசியல் வாழ்க்கை
தொகுதேசியவாத நடவடிக்கைகளுக்காக 1930 மற்றும் 1942 ஆம் ஆண்டுகளுக்கு இடையில் நித்யானந்த மகாபத்ரா பிரித்தானிய அரசாங்கத்தால் மூன்று முறை சிறையில் அடைக்கப்பட்டார்.[2] ஒடியா இதழான டகராவின் ஆசிரியராகவும்,[3] சுதந்திரத்திற்குப் பிறகு ஒரு சிறுகதை எழுத்தாளராகவும் இலக்கிய முக்கியத்துவம் பெற்றார்.[4] அரசியல் வாழ்க்கையில் மகாபத்ரா 1957 ஆம் ஆண்டு முதல் [5] 1971 ஆம் ஆண்டு வரை ஒடிசா சட்டமன்ற உறுப்பினராகவும் [6] 1967 ஆம் ஆண்டு முதல் 1971 ஆம் ஆண்டு வரை வழங்கல் மற்றும் கலாச்சார விவகாரங்களுக்கான மாநில அமைச்சராகவும் பணியாற்றினார்.
இறப்பு
தொகு2012 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 17 ஆம் தேதியன்று சுமார் 9:45 மணிக்கு நித்யானந்த மகாபத்ரா இறந்தார். ஒடிசாவின் புவனேசுவரில் உள்ள காரவேலாநகரில் சுவாசக் கோளாறால் பாதிக்கப்பட்டு மூச்சுத் திணறல் காரணமாக ஆதித்யா கேர் மருத்துவமனையில் கோமா நிலையில் இருந்தார். தனது 100 ஆவது பிறந்தநாளுக்கு மூன்று மாதங்கள் குறைவாக இருந்தபோதுதான் இவர் இறந்தார்.
இலக்கிய விருதுகள்
தொகுமகாபத்ரா 1974 ஆம் ஆண்டு ஒடிசா சாகித்ய அகாடமி விருதையும் [7] 1987 ஆம் ஆண்டில் கேந்திர சாகித்ய அகாடமி விருதையும் தனது காராதிகா நாவலுக்காகப் பெற்றார்.[8]
மேற்கோள்கள்
தொகு- ↑ according to website of Odisha Legislative Assembly born on 17 June, but possibly born 17 June
- ↑ "Profile of Shri Nityananda Mahapatra". Odisha Legislative Assembly. Archived from the original on 26 மார்ச் 2012. பார்க்கப்பட்ட நாள் 21 June 2011.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ History of Indian Literature: .1911–1956, struggle for freedom : triumph and tragedy. Sahitya Akademi. 1976.
- ↑ The Encyclopaedia of Indian Literature, Volume 5. Sahitya Akademi.
- ↑ "Post Held of Shri Nityananda Mahapatra". Odisha Legislative Assembly. Archived from the original on 26 மார்ச் 2012. பார்க்கப்பட்ட நாள் 21 June 2011.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "Membership of Shri Nityananda Mahapatra in Odisha Legislative Assembly". Odisha Legislative Assembly. Archived from the original on 26 மார்ச் 2012. பார்க்கப்பட்ட நாள் 21 June 2011.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "List of Odisha Sahitya Akademi Award Winning Books and their Writers". Odisha Sahitya Akademi. Archived from the original on 18 December 2010. பார்க்கப்பட்ட நாள் 11 July 2010.
- ↑ "Recipients of Kendra Sahitya Academy Award for Oriya Literature" (PDF). Kendra Sahitya Akademi. Archived from the original (PDF) on 14 December 2010. பார்க்கப்பட்ட நாள் 11 July 2010.