நினா மனுவேல்
நினா மனுவேல் (Nina Manuel) என்பவர் இந்திய வடிவழகர், தொலைக்காட்சி தொகுப்பாளர் மற்றும் வானொலி நிகழ்ச்சி தொகுப்பாளர் ஆவார்.[1]
நினா மனுவேல் Nina Manuel | |
---|---|
பிறப்பு | 24 ஏப்ரல் மும்பை, மகாராட்டிரம், இந்தியா |
பணி | வடிவழகி, நிகழ்ச்சி தொகுப்பாளர் |
தொலைக்காட்சி | நினா 9 மணிக்கு, நடுஇரவு மனுவேல், மணிகளுக்கு பின், பின்னிரவு வி |
வாழ்க்கைத் துணை | லுவ் ஷா (தி. 2010) |
பிள்ளைகள் | 1 மகன் |
வலைத்தளம் | |
ninamanuel.in |
ஆரம்ப கால வாழ்க்கை
தொகுமனுவேல் ஏப்ரல் 24 அன்று இந்தியாவின் மும்பையில் கேரளாவைச் சேர்ந்த தந்தை மற்றும் கோவாவைச் சேர்ந்த தாய்க்கு மகளாகப் பிறந்தார். குவைத்து, பகுரைன் மற்றும் துபாய் ஆகிய நாடுகளில் பள்ளிப்படிப்பை முடித்தார்.[2] மிதிபாய் கல்லூரியில் வணிகவியல் பட்டப்படிப்பை முடிக்க மும்பை திரும்பினார். பின்னர் சட்டம் படித்ததால் 2 ஆண்டுகள் படித்து முடித்ததால், வழக்கறிஞராக வேண்டும் என்று எண்ணினார். 1995ஆம் ஆண்டு பெமினா லுக் ஆப் தி இயர் போட்டிக்கான விளம்பரத்தை மனுவேலின் தாயார் செய்தித்தாளில் பார்த்தார். மனுவேலின் தாயார் மனுவேலைப் இப்போட்டியில் பங்கேற்க ஊக்குவித்தார். இந்த போட்டியால் மனுவேல் கலந்து கொண்டார். ஆனால் இறுதியில் வெற்றி பெறவில்லை என்றாலும், மனுவேல் மெஹர் ஜெஸ்ஸியாவால் அடையாளங் காணப்பட்டார். இது இவரது வடிவழகர் வாழ்க்கையைத் தொடங்குவதற்குக் காரணமாக அமைந்தது.[2][3] வடிவழகி தொழிலைத் தொடர ஆறு மாதங்களுக்குப் பிறகு மனுவேல் ஜி. ஜே. அத்வானி சட்டக் கல்லூரியை விட்டு வெளியேறினார்.[4]
தொழில்
தொகுமனுவேல் தனது வடிவழகர் வாழ்க்கையை ஒரு பிரத்தியேக ஆடைவடிவமைப்பு நிலையமான என்செம்பிள் நிகழ்ச்சியுடன் தொடங்கினார். மேலும் இந்தியாவின் சிறந்த வடிவமைப்பாளர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் நிறைய ஆடை அணிக கண்காட்சிகளைச் செய்யத் தொடங்கினார். இதன் விளைவாக சான் மிகுவல், லாமேன் ஜீன்ஸ், பாஷ் & லோம்ப், லெவிஸ், கொக்கக் கோலா, இந்தியன் எக்சுபிரசு மற்றும் கோடக் ஆகிய நிறுவனங்களுடன் விளம்பரத்திற்கான ஒப்பந்தங்களைப் பெற்றார். இவர் பாபா சேகல், ரெமோ மற்றும் அனைடா ஆகியோருடன் வடிவமைப்பு மற்றும் இசைக் காணொலிகளை எடுத்துள்ளார். சுனீத் வர்மா, ஜே. ஜே.வலயா, ராகவேந்திர ரத்தோட் மற்றும் ரவி பஜாஜ் போன்ற வடிவமைப்பாளர்களுக்காக ஆடை அணிக கண்காட்சிகளைச் செய்துள்ளார்.[2][3]
மனுவேலின் தொலைக்காட்சியில் ஆறு வருடங்கள் பணியாற்றினார். இக்காலகட்டத்தில் இவர் மூன்று நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கியுள்ளார். இவை: ஜீ மியூசிக்கில் 9 மணிக்கு நினா, ஜீ மியூசிக்கில் மிட்நைட் மானுவல் மற்றும் ஜீ கபேவில் ஆப்டர் ஹவர்ஸ். இவர் அலைவரிசை வி-ல் நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் இருந்தார். இங்கு இவர் பின்னிரவு நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார்.[5]
வாழ்க்கை
தொகுநினா மனுவேல் நியூயார்க்கு நகரத்தைச் சேர்ந்த தொழிலதிபர் லுவ் ஷாவை மணந்தார்.[6] மும்பையின் ஜூகூவில் உள்ள ஜெ. டபுள்யூ மேரியட்டில் இந்து முறைப்படியும், பாந்த்ராவில் உள்ள தூய பேதுரு தேவாலயத்தில் கிறித்துவ முறைப்படியும் 2010ஆம் ஆண்டின் தொடக்கத்தில் திருமணம் செய்துகொண்டனர்.[3][7]
மனுவேல் திருமணத்திற்குப் பிறகு நியூயார்க்கு நகரத்திற்குச் சென்றார். தற்போது நியூயார்க்கு மும்பை என இருநகரங்களிலும் வசித்து வருகிறார்.[4] இவர்களுக்கு ஒரு மகன், ஜேன் மனுவேல் ஷா (பிறப்பு 2015) உள்ளார்.[8][9]
மேற்கோள்கள்
தொகு- ↑ "How 'fair' is that". The Times of India. 12 March 2013. Archived from the original on 24 October 2013. பார்க்கப்பட்ட நாள் 2013-03-15.
- ↑ 2.0 2.1 2.2 "Editorial - Gallery". Ninamanuel.in. பார்க்கப்பட்ட நாள் 2013-03-15.
- ↑ 3.0 3.1 3.2 "She's Nina Manuel, the girl who was first noticed in the San Miguel ad as the irresistible waitress". Models.indiafashionmodels.com. 2010-10-18. Archived from the original on 2014-11-08. பார்க்கப்பட்ட நாள் 2013-03-15.
- ↑ 4.0 4.1 "The Indian Lass for "Antiquity Whisky" - Nina Manuel". Scribd.com. பார்க்கப்பட்ட நாள் 2013-06-25.
- ↑ "About Nina | Nina Manuel". Ninamanuel.in. பார்க்கப்பட்ட நாள் 2013-03-15.
- ↑ "WeddingSutra Editors' Blog » Nina Manuel". Weddingsutra.com. பார்க்கப்பட்ட நாள் 2013-03-15.
- ↑ "Celebrity Brides". Movies.groups.yahoo.com. 15 May 2010. Archived from the original on 7 August 2012. பார்க்கப்பட்ட நாள் 2014-11-07.
- ↑ "Spoken like a mentor". Bangalore Mirror. பார்க்கப்பட்ட நாள் 18 December 2016.
- ↑ "London calling - Mumbai Mirror -". Mumbai Mirror. பார்க்கப்பட்ட நாள் 18 December 2016.