நினைவக அட்டை
தரவுகளை சேமிக்கும் ஒரு சாதனம்
நினைவக அட்டை அல்லது ஃபிளாஷ் அட்டை (Memory card) என்பது தரவுகளை சேமிக்கும் ஒரு சாதனம் ஆகும். இது டிஜிட்டல் தகவல்களை சேமிப்பதற்காக பயன்படுத்தப்படுகிறது. அவை பொதுவாக டிஜிட்டல் கேமராக்கள், கைபேசிகள், மடிக்கணினிகள், எம்பி 3 பிளேயர்கள், மற்றும் வீடியோ கேம் முனையங்கள் உட்பட பல மின்னணு சாதனங்களில் பயன்படுத்தப்படுகின்றன. அவை, சிறியதாக மீண்டும் பதிவுசெய்யக்கூடிய மற்றும் சக்தி இல்லாமல் தரவுகளை தக்க வைத்துக்கொள்ள கூடியதாக உள்ளன.

சாண்டிஸ்க் நிறுவனத்தின் நினைவக அட்டைகள்