நினைவுதொகு

கற்றனவற்றை மனதில் பதித்து, தேவையானபோது மீண்டும் உணர்விற்குக் கொண்டு வருதல் நினைவு ஆகும். நினைவினை மேம்படுத்தும் உத்திகள் 1. சுயகற்றல் நினைவை மேம்படுத்தும் 2. பொருளுணர்ந்து கற்றல் 3. திரும்பத் திரும்பக் கற்றல் 4. இடைவெளி விட்டு கற்றல் 5. பல்புலன் வழிக்கற்றல் 6. எதைக் கற்றாலும் கற்க வேண்டும் என்ற ஆர்வம் நினைவை மேம்படுத்தும் 7. முறையைப் பயன்படுத்தல் - நோட்டமிடுதல் , வினா எழுப்புதல் , வாய்விட்டு மெதுவாகப் படித்தல், பலமுறை திரும்பக் கற்றல், மீள்பார்வை மிகச் சிறந்த முறை. 8. மீக்கற்றல் 9. நினைவு சூத்திரம் ஏற்படுத்திக் கற்றல் 10. கற்றவற்றை சோதித்தறிதல் 11. கற்கும் செய்தினை முறைப்படுத்திக் கற்றல் 12. ஊக்கத்தோடு 13. மறதி குறுக்கீடு இல்லாமல் கற்றல் 14. எபிங்காஸ் (1885) நினைவு நிலைநிறுத்தல் விளக்கினார்.

நினைவின் கூறுகள்:தொகு

1.கற்றல் 2.இடைநிறுத்தம் 3.மீட்டறிதல் 4.மீட்டுணர்தல் நம் புலன்கள் கற்று அனுபவித்த விவரங்களை மனதில் இருத்திக்கொண்டு நமக்குத் தேவைப்படும்போது எடுத்துத் தருகிறது. மனதில் சேமித்து வைத்துள்ள விவரங்களை நினைவு என்று கூறுகின்றோம்.

நினைவினை மேம்படுத்தும் உத்திகள்தொகு

சிறந்த நினைவுத்திறன் உள்ளவர்களே வாழ்க்கையில் எளிதில் வெற்றியடைகின்றனர். தாம் கற்றதை நீண்ட நாட்கள் நினைவில் வைத்துக் கொண்டால் அவர்கள் வாழ்க்கை பயனுள்ளதாக அமையும் நினைவினை மேம்படுத்தும் உத்திகள் யாவை என அறிந்து கொள்வோம். தாமாகவே விரும்பிக் கற்றலில் ஈடுபடும்போது கற்றல் நிலைப்பட்டு நினைவில் நிற்கும். பொருளுணர்ந்து கற்றல் நீண்ட நினைவில் நிற்கும். மாணவர்கள் ஒரு வாக்கியத்திலுள்ள சில வார்த்தைகளைத் திரும்பத் திரும்பக் கூறி குருட்டு மனப்பாடம் செய்வதை ஆசிரியர்கள் தவிர்க்க வேண்டும். ஒரு வாக்கியத்தை முழுமையாகக் கற்கும் போதுதான் அதன் பொருள் புரியும். எனவே, ஒவ்வொரு வாக்கியத்தையும் முழுமையாகக் கற்பது நினைவினை மேம்படுத்தும். மெதுவாக நிதானமாக அவசரமின்றிக் கற்பது நினைவாற்றாலைப் பெருக்கும் மற்றும் நேரத்தைச் சிக்கனப்படுத்தும். கற்கும் பொருளை பல முறை இடைவிட்டுப் பயிலுதல் வேண்டும். ஒரே மூச்சில் படிப்பதைவிட இடைவெளிவிட்டுப் பயிலுதல் சோர்வினைப் போக்கி நினைவினைப் பெருக்கும். பலபுலன் வழிக்கற்றல் மூலமாக கற்பவை மனதில் வெகு நாட்கள் வரை நிலைத்து நிற்கும். வகுப்பறைக் கற்பித்தலில் பல ஊடகங்களைப் பயன்படுத்தினால் நினைவு கொள்ளுதல் வலுப்படும். கற்கும் பொருளைப் பற்றிய சில சுருக்கக் குறிப்புகள் நினைவு கூர்தலுக்குப் பெரிதும் பயன்படும். வானவில்லின் ஏழு நிறங்களை வரிசையாக நினைவு கூற ஏஐக்ஷழுலுடீசு என்ற பொருளற்ற சொல்லைப் பயன்படுத்துகிறோம். கற்றல் நிகழும் போதை சோதித்தறிவது, ஒரு வாக்கியத்தைப் படித்துவிட்டு, கண்களை மூடிக்கொண்டு சொல்லிப்பார்த்தல், பின்னர் அதனைப் பார்க்காமல் எபதுதல், இவ்வாறு செய்வதால் ஒவ்வொரு வாக்கியமும் கற்ற பின்னர் நினைவிலிருக்கிறதா என்று சோதித்தறியப்படுகிறது. இவ்வாறு அறிவியல் கருத்துக்கள், சூத்திரங்கள், சமன்பாடுகள், ஆங்கிலப் பாடக்கருத்துக்கள் போன்றவற்றை எளிதில் நினைவு கொள்ள முடியும். கற்றலை விரும்பும் மனப்பான்மை நினைவினை மேம்படுத்தும் கவனித்துக் கற்றல் நினைவினை அதிகரிக்கும். ஆர்வமுடன் கற்றல் நினைவில் நீண்ட நாட்கள் நிலைத்திருக்கும் சுதந்திரமாகத் தானே கற்றல், கற்றவற்றை நினைவில் இருத்திக் கொள்ள சிறந்த வரியாகும். பெற்றோர், ஆசிரியர் மற்றும் பிறரால் கற்க வற்புறுத்தப்படும்போது கற்றல் ஒரு வெறுப்புச் செயலாகத் தோன்றும் குழந்தைகளை அடித்து அச்சுறுத்திப் படிக்கச் செய்தல் மிகவும் தவறானது. அவர்கள் படிக்கும்போது கவலையுடன் அச்சப்பட்டுப் படிக்கின்றனர். படித்தவை ஒருபோதும் அவர்கள் நினைவில் தங்காது. குழந்தைகளைப் புகழ்ந்து அரவணைத்து மகிழ்ச்சியான சூழலை ஏற்படுத்திப் படிக்கச் செய்வது அவர்களின் கற்றல் ஆர்வத்தைத் துhண்டி, கவனமாகப் படித்து நினைவில் இருத்திக் கொள்ள உதவும்.

நினைவின் வகைகள்தொகு

1. புலனறிவு நினைவு (ளுநளேடிசல ஆநஅடிசல)- ஓரிரு நொடிகள் மட்டும் நீடிக்கும் (எ.கா) விபத்தில் நாம் பார்த்த காட்சி 2. குறுகிய கால நினை (ளுhடிசவ கூநசஅ ஆநஅடிசல) - 20 நொடிகள் மட்டும் நினைவில் வைத்திருப்பவை 3. நீண்ட கால நினைவு (டுடிபே கூநசஅ ஆநஅடிசல)- நீண்ட நாள் நம் மனதை விட்டு நீங்காமல் இருத்தல் - (எ.கா) நம் பிறந்த நாள், திருக்குறள். குறுங்கால நினைவு மற்றும் நெடுங்கால நினைவு: பொதுவாக நம் புலன்களில் ஏற்படும் துhண்டல்கள் அனைத்தும் முதலில் குறுங்கால நினைவுப் பகுதிக்குச் செல்கிறது. இவற்றின் நிலைப்புத்தன்மை சில நாட்களோ அல்லது சில வாரங்களேயாகும். குறுங்கால நினைவுப் பகுதிக்குச் சென்ற விவரங்களை மீண்டும் மீண்டும் சிந்தித்து அல்லது கற்று உணரும் பொழுது அல்லது மீட்டுக் கொணரும் பொழுது அவை நெடுங்கால நினைவுப் பகுதிக்கு எளிதில் சென்றடைகிறது. இவை நெடுங்கால நினைவுப் பகுதியில் நிலைத்து நின்று நீண்ட நாட்கள் பயன்படும். அதிக ஆர்வம் மற்றும் தேவையின் காரணமாக விரும்பிக் கற்றவை எளிதில் நெடுங்கால நினைவுப் பகுதியில் இடம் பெற்று உதவுகிறது. அவசர அவசரமாக மனப்பாடம் செய்தவை அரைகுறையாக குறுங்கால நினைவுப் பகுதிக்குச் செல்கின்றன. அவற்றில் சில மறக்கப்பட்டு எஞ்சியது நினைவிற்கு வருகிறது. மகிழ்ச்சியான சூழ்நிலையில் சுதந்திரமாக விரும்பிக் கற்றவை நெடுங்கால நினைவிற்கு செல்கிறது. அச்சுறுத்தும் சூழலில் விருப்பமின்றி அவசர அவசரமாகக் கவனமின்றி கற்றவையின் பெரும்பகுதி மறக்கப்பட்டு ஒரு சில பகுதிகள் மட்டும் குறுங்கால நினைவுப் பகுதியில் ஊசலாடிக் கொண்டிருக்கும். எனவே, வகுப்பறையில் குழந்தைகளை அடைத்துப் போட்டுக் கட்டாயப்படுத்தித் துன்புறுத்தி கற்பிப்பதை விட்டு மகிழ்ச்சியான சூழலை ஏற்படுத்தி விளையாட்டு முறையில் தொடக்கப்பள்ளிக் குழந்தைகளக்குப் பாடம் கற்பிப்பது ஆசிரியர்களுக்கு ஒரு பயனுள்ள செயலாகும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=நினைவு&oldid=2349045" இருந்து மீள்விக்கப்பட்டது